ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

JIGIRTHANDA



JIGIRTHANDA

தேவையானவை :

பால் – ஒரு லிட்டர்

சர்க்கரை – 8 தேக்கரண்டி

சைனா கிராஸ் – 4 தேக்கரண்டி

ரோஸ் சிரப் – 1 தேக்கரண்டி

நன்னாரி ஸிரப் – 1 தேக்கரண்டி

ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) – 1

பால் கோவா – 2 தேக்கரண்டி

செய்முறை :

1. ஒரு லிட்டர் பாலை, சர்க்கரை சேர்த்து அடி கனமான வாணலியில் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் பவுடர் சேர்க்கவும். பாலை அரைலிட்டராக சுண்ட வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் 6 மணி நேரம் வைக்கவும்.

2. சைனாகிராஸை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.

3. குளிர்ந்த பாலை முதலில் நீளமான ஒரு கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஊற்றவும். இப்போது பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும். பிறகு ரோஸ் ஸிரப், நன்னாரி ஸிரப் ஊற்றவும்.

4. தொடர்ந்து வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று கொடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக