புரதம் நிறைந்த சத்தான கேழ்வரகு லட்டு.
கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
*தேவையானவை :*
கேழ்வரகு மாவு – 1 கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி – 1 கப் (துருவியது)
நெய் – 2 மேசைக்கரண்டி
முந்திரி – 1 தேக்கரண்டி
கருப்பு எள் – தேக்கரண்டி
திராட்சை – 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
சுக்கு தூள் – 1 சிட்டிகை
*செய்முறை :*
👁🗨 வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். (வெல்லம் கரையும் வரை வைத்தால் போதுமானது)
👁🗨 எள்ளை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும்.
👁🗨 நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.
👁🗨 கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, சூடாக இருக்கும் போதே வெல்லம், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, எள், ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை அதில் நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
*சுண்ணாம்பு, இரும்பு, புரதம் நிறைந்த கேழ்வரகு லட்டு தயார்.*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக