முட்டை சப்பாத்தி
தேவையான பொருட்கள்
முட்டை – 3
கோதுமைமா – 250g
உப்பு, சீரகத்தூள் , மிளகாய்த்தூள் , பட்டர் , எண்ணெய் – தேவைக்கேற்ப
வெங்காயம் -50g
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
கோதுமைமாவில் உப்பு சேர்த்து நன்கு கலந்து பட்டர் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு இளஞ்சூடான நீர் சேர்த்து குழைக்கவும்.
வெங்காயத்தை சிறிதாக வெட்டவும்.
முட்டையில் உப்பு , மிளகாய்த்தூள் ,வெட்டிய வெங்காயம் , கறிவேப்பிலை , சீரகத்தூள் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
மாவை சப்பாத்திகளாக தட்டி வைக்கவும்.
சட்டியில் எண்ணெய் பூசி சப்பாத்தி பாதி வெந்ததும் முட்டைக்கலவையை ஊற்றவும்.
அதன்மேல் எண்ணெயை ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
வெந்ததும் மறுபக்கம் திருப்பி மீண்டும் முட்டைக்கலவையை ஊற்றி எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.
முட்டைச் சப்பாத்தி ரெடி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக