வரகு இனிப்பு குழிப்பணியாரம்
*♢தேவையான பொருட்கள்♢*
வரகு – 200கிராம்
வெள்ளை உளுந்து – 50 கிராம்
தேங்காய் பால் – 1/2 கப்
வெல்லம் -150 கிராம்
ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
நல்லெண்ணெய் – தேவையான அளவு
*♢செய்முறை♢*
வரகையும் உளுந்தையும் 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கிரைண்டரில் கட்டியாக அரைத்தெடுக்கவும். தேங்காய் பாலில் ஏலக்காய் தூள் மற்றும் வெல்லத்தை கரைத்து மாவுடன் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். மாவு தண்ணியாக இல்லாமல் கட்டியாக இருக்குமாறு பாத்துக்கொள்ளுங்கள்.
குழிப்பணியாரசட்டியில் நல்லெண்ணெய் சிறிது ஊற்றி, காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து ஊற்றுங்கள். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விடவும். வெந்ததும் எடுத்து பரிமாற வேண்டியது தான். சுவையான, ஆரோக்கியமான வரகு குழிப்பணியாரம் தயார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக