செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

அல்வா பூட்டு



அல்வா பூட்டு

பச்சரிசி - 1/4 கிலோ,
வெல்லம் - 150 கிராம்,
ஏலக்காய் - 3,
தேங்காய் - 1/2 மூடி,
முந்திரி - 5.

அரிசியை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பின், கிரைண்டரில் போட்டு, நைசாக அரைக்கவும்.
வெல்லத்தை தட்டி 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடி கட்டவும்.
தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி வைக்கவும்.
வடிகட்டிய வெல்லத்தை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
பாகு பதம் வரும் போது அரைத்த மாவை ஊற்றி கிளறவும்.
ஏலக்காயை பொடி செய்து தூவவும்.
முந்திரியை வறுத்து போடவும்.
பல்லாக நறுக்கிய தேங்காய் சேர்த்து அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.
தேவையானால் 50 கிராம் நெய் சேர்த்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக