முட்டைக் குழம்பு
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
சீரகம் - 1தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரைக்க :
சீரகம் மற்றும் தேங்காய் இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
1. 2 முட்டையை பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீரில் 10 நிமிடம் வேகவைக்கவும்.
2. முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து தண்ணீரை வடிகட்டி, முட்டை சூடு ஆறியதும், ஓடு நீக்கி எடுத்து வைக்கவும்.
3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
6. வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதனுடன் தக்காளியைப் போட்டு வதக்கவும்.
7. நன்றாக வதங்கியதும் அதனுடன் அரைத்த மசால், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
8. பின்னர் வேக வைத்த முட்டையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.
9. பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக