பிரெட் மெதுவடை.
*தேவையானவை :*
பிரெட் ஸ்லைஸ் (சால்ட் பிரெட்) - 5
ரவை - 3 டீஸ்பூன்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
*செய்முறை :*
👁🗨 முதலில் பிரெட்டின் ஓரங்களை வெட்டி எடுத்துவிட்டு, பிரெட்டை சிறிய துண்டுகளாக்க வெட்டி வைக்கவும்.
👁🗨 ஒரு பாத்திரத்தில் பிரெட் துண்டுகள், ரவை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நறுக்கி வைத்த கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும்.
👁🗨 பிறகு, சிறிதளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும்.
👁🗨 பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக்கி, தட்டி, நடுவே ஓட்டை போட்டு, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
*அருமையான பிரெட் மெதுவடை ரெடி!!!*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக