டிப்ஸ்… டிப்ஸ்…டிப்ஸ்… டிப்ஸ்…!
ஃப்ரிட்ஜை சோப்புநீர் போட்டு சுத்தப்படுத்தக் கூடாது. ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கால் ஸ்பூன் சமையல் சோடாவை சேர்த்து, ஒரு மூடி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். இதை சிறிய துணியால் தொட்டு ஃப்ரிட்ஜை துடைக்கவும். பிறகு நல்ல, துணியால் ஈரம் போக துடைத்தால்.. ஃப்ரிட்ஜ் `பளிச்’சென்று இருக்கும்.
கோடைகாலத்தில் எறும்புகள் வருவது அதிகம். உணவுப் பண்டங்களை சமையல் மேடையில் வைக்கும்போது, அவற்றைச் சுற்றி இடை வெளி இல்லாமல், மஞ்சள் பொடியைத் தூவி வைத்தால், எறும்புகளிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
வெயில் காலத்தில் மோர் விரைவில் புளித்துவிடும். அப்படிப் புளிக்காமல் இருக்க, வாழை இலையைச் சிறுசிறு துண்டுகளாக்கி மோரில் போட்டு வைத்து, மோரை உபயோகிக்கும்போது எடுத்துவிட வேண்டும்.
கேரட் அல்வா செய்யும்போது, சிறிதளவு பால் கோவாவையும் சேர்த்துக் கிளறி, கடைசியில் பாதாம் எசென்ஸ் மிகவும் சிறிதளவு விட்டு இறக்கினால்… சுவையும், மணமும் அள்ளும்!
குலோப் ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால், பாகு உறையாமலும் நீண்ட நேரம் கெடாமலும் இருப்பதுடன், சுவையும் கூடுதலாகும்.
பூரிக்கு மாவு தயாரிக்கும்போது… ஒரு கப் மாவுக்கு, ஒரு ஸ்பூன் வீதம் ரவை கலந்தால், பூரி உப்பலாக வரும்.
பஜ்ஜி, வடை, வடகம், பட்சணம் செய்யும் எண்ணெயில் ஒரு சிறிய துண்டு இஞ்சியைத் தட்டிப் போடுங்கள். இது வயிற்றுக்கு நல்லது. பொரித்த பண்டங்களும் மணமாக இருக்கும்.
*சமையல் தந்திரங்கள்*
தோசைக்கல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைச் சேர்த்து சுட்டால் தோசை மொறு மொறுப்பாக வரும்.
இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்.
சாம்பார் செய்யும்போது வறுத்த வெந்தயத்தை போட்டால் சாம்பார் சுவையாகவும், நல்ல மணமாகவும் இருக்கும்.
காப்பர் பாத்திரம் மங்காமல், பளிச்சென்று இருக்க சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் புசி துணியால் அழுத்தி தேய்க்கலாம்.
இட்லி சாம்பார் செய்யும் போது கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற முடியவில்லை என்றால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.
இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.
முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்
வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.
கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எறிந்துவிடாமல் இட்லி பானையின் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.
சில்வர் பேப்பரில் சப்பாத்தியை சுற்றி வைத்தால் சப்பாத்தி எப்போதும் சுடாக இருக்கும்.
ரசம் தயார் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாகவும். மணமாகவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக