ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

காஜு – கோகனட் பொடி



காஜு – கோகனட் பொடி

தேவையானவை:

உடைத்த முந்திரி – 50 கிராம், துருவிய கொப்பரை/ தேங்காய்த் துருவல் – கால் கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக் கேற்ப), பெருங்காயம் – ஒரு சிறுகட்டி.

செய்முறை:

முந்திரி, துருவிய கொப்பரை/தேங்காய்த் துருவலைத் தனித்தனியே சிவக்க வறுக்கவும் (எண்ணெய் விட வேண்டாம்).

கடாயில் எண்ணெய்விட்டு, வறுக்கக் கொடுத்துள்ளவற்றை சிவக்க வறுத்து ஆறவிட்டு, முந்திரி, துருவிய கொப்பரை/ தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக