ஈஸியான காலை உணவு - பிரெஞ்ச் டோஸ்ட்...
*தேவையாவை :*
பிரட் துண்டுகள் - 6
முட்டை - 1
பால் - 100 மில்லி
சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
நெய் - 3 மேஜைக்கரண்டி
*செய்முறை :*
👁🗨 முதலில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கவும்.
👁🗨 அதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
👁🗨 அடுப்பில் தோசைக்கல் (அல்லது) தவாவை வைத்து சூடானதும் பிரட் ஒன்றை எடுத்து முட்டை கலவையில் முக்கி எடுத்து தோசைக்கல்லில் போட்டு பிரட்டை சுற்றி ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றவும்.
👁🗨 ஓரங்களில் மொறுகலானதும் மறு புறம் திருப்பி போடவும். இருபுறமும் மொறுகலானதும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
👁🗨 மீதமுள்ள 5 பிரட் துண்டுகளையும் இதே முறையில் ரோஸ்ட் செய்யவும்.
*சுவையான பிரெஞ்ச் டோஸ்ட் தயார்.*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக