பொட்டேட்டோ சீஸ் பால்ஸ்.
*தேவையானவை :*
உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் - அரை கப் (துருவியது)
சீஸ் - அரை கப்
கார்ன் - தேவைக்கேற்ப
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவைக்கேற்ப
பிரெட் தூள் - தேவைக்கேற்ப
*செய்முறை :*
👁🗨 உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
👁🗨 அதில் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், கொத்தமல்லி, மிளகாய்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
👁🗨 கார்ன் ஃப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளை முக்கி எடுத்து, பின்னர் பிரெட் தூளில் புரட்டவும்.
👁🗨 இந்த உருண்டைகளை எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.
👁🗨 உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து எடுக்கவும்.
*சுவையான பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் தயார்.*
டொமெட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக