தந்தூரி மீன்
இஞ்சி கலவையில் ஊறவைத்து, தீயில் நன்கு சுடப்பட்ட தந்தூரி மீன்.
தயாரிப்பு நேரம்: 10 நிமிடங்கள்
சமையல் நேரம்: 15 நிமிடங்கள்
4 பேர் சாப்பிடலாம்
தேவையான பொருட்கள்:
500 கிராம் மீன் (வெள்ளை மீன் அல்லது சால்மன் எதாவது ஒன்றை உபயோகிக்கலாம்), 4 செமீ சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
ஊறவைக்க:
8 பல் பூண்டு
50 கிராம் கொத்தமல்லி தழை
4 செமீ இஞ்சி
2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு,
1 டீஸ்பூன் துருவிய எலுமிச்சை
1 டீஸ்பூன் காஷ்மீர் சிவப்பு மிளகாய் தூள்
½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
1/2 டீஸ்பூன் கரம் மசாலா
1 ½ தேக்கரண்டி உப்பு
50 மிலி சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்
1 டீஸ்பூன் கடலை மாவு
100 கிராம் வடிகட்டிய தயிர்
சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
100 கிராம் கொத்தமல்லி இலைகள்
2 பச்சை மிளகாய்
4 பல் பூண்டு
2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
½ தேக்கரண்டி உப்பு
1 டீஸ்பூன் வடிகட்டிய தயிர்
பரிமாற:
வெங்காய ஸ்லைஸ்
செய்முறை:
பாதி அளவு எண்ணெய், பூண்டு, கொத்தமல்லி, இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் எலுமிச்சை துருவல், காஷ்மீர் சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு இவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல செய்து கொள்ளவும்.
ஒரு கடாயில் மீதமுள்ள எண்ணெயை சூடாக்கிக் கொண்டு கடலை மாவு சேர்த்து பேஸ்ட் போல கிளறி, வாசனை போகும் வரை சுமார் 1 நிமிடம் நிறம் மாறும் வரை கிளறவும்.
இப்பொழுது மசாலா விழுது கலவையை தயிர் சேர்த்து மீனை ஊறவைக்கும் அளவுக்கு நன்கு கலக்கவும்.
இதை மெதுவாக மீன் துண்டுகள் மீது முழுவதுமாக தேய்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
நுண்ணலை அடுப்பை 200C ல் வைத்துக் கொள்ளவும். பேக்கிங் தட்டில் ஊற வைத்த மீனை பரப்பி வைக்கவும். மீன் துண்டுகளை 10 முதல் 15 நிமிடங்களுக்கு திருப்பி வைத்து வேக வைக்கவும். சமைக்கும் போது ஒருமுறை அல்லது இருமுறை திருப்பி, கருகாமல் இருக்க உருக்கிய வெண்ணெய்யை அதன் மீது ஊற்றவும்.
சட்னி:
தேவையான அனைத்து பொருட்களையும் மிக்சியில் நன்றாக பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
சட்னி மற்றும் வெங்காய ஸ்லைஸ் உடன் சூடாக மீனை பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக