வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கார்ன் கபாப் ரெடி.


குழந்தைகளுக்கு விருப்பமான கார்ன் – பன்னீர் கபாப்

குழந்தைகளுக்கு மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இந்த கார்ன் – பன்னீர் கபாப் செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள் :

சோளம் – 2
உருளைக்கிழங்கு – 200 கிராம்
பன்னீர் – 100 கிராம்
முட்டைக்கோஸ் – 100 கிராம்
இஞ்சி – சிறிய துண்டு
கொத்தமல்லி – தேவைகேற்ப
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
தனியா தூள் – 1/2 ஸ்பூன்
சீரக தூள் – 1/2 ஸ்பூன்
சோள மாவு – 2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைகேற்ப

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

* பன்னீரை துருவிக்கொள்ளவும்.

* இஞ்சி, கொத்தமல்லி, முட்டை கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சோளத்தை வேகவைத்து மசித்துகொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த சோளம் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

* இந்தக் கலவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீராக தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ளவும். கலவை கெட்டியாக இருக்க வேண்டும். கட்லெட் தட்டுவதற்கு ஏற்ற பதத்தில் இல்லையென்றால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.

* இந்த கலவையை கபாப்களாக தட்டி வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள கபாப்களை போட்டு பொரித்து எடுக்கவும். தோசைக்கல்லிலும் பொரித்து எடுக்கலாம்.

* கார்ன் கபாப் ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக