புதன், 2 ஆகஸ்ட், 2017

சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல்...



சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல்...

தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் – கால் கப்
வெங்காய தாள் – அரை கப்
தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
கறிவேப்பலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவைகேற்ப

செய்முறை :

* சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி தழை, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, ப.மிளகாய், கறிவேப்பலை போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம் போட்டு சிறிது வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் வெங்காய தாள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயத்ததாள் விரைவில் வெந்து விடும்.

* ஐந்து நிமிடங்களுக்கு, பிறகு தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.

* சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல் ரெடி.

* இதை சூடு சாதம், சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக