திங்கள், 7 ஆகஸ்ட், 2017

அப்பளக் குழம்பு


அப்பளக் குழம்பு

தேவையானவை: புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், அப்பளம் - 2, கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு, அப்பளத்தை ஒன்று இரண்டாக உடைத்துப்போட்டு, சாம்பார் பொடியை சேர்த்து வறுக்கவும். பிறகு, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
காய்கறிகள் கைவசம் இல்லாத சமயத்தில், இந்தக் குழம்பு கை கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக