ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

தில் பஹார்



தில் பஹார்

தேவையானவை: பசும்பால் – 2 லிட்டர், பே வாட்டர் – 2 கப், சர்க்கரை -ஒரு கிலோ, தண்ணீர்- 8 டம்ளர், பாதாம், முந்திரி, செர்ரி – சிறிதளவு.

சாஸ் செய்ய:

கோவா, சர்க்கரை – சம அளவு.

செய்முறை: பாலைக்கொதிக்க வைத் து, பே வாட்டர் சேர்த்து பாலை திரித்து, ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி எடுத்து அழுத்திப் பிசைந்து பனீர் தயா ரித்து தனியே வைத்துக் கொள்ளவும். அரை கிலோ சர்க்கரை, 4 டம்ளர் தண் ணீரைக் கலந்து கொதிக்கவிடவும். நன்றாக கொதி வந்தவுடன் பனீ ரை இதய வடிவில் ஷேப் செய்து சர்க்கரைப் பாகில் ஒவ்வொன்றா கப் போட்டு இறக்கி, ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும். இரு மடங் கு பெரியதாக மாறியதும்… மீதமுள்ள சர்க்கரையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசுக்கு பதத்தில் பாகு தயாரித்து, இதய வடிவ பனீரை மீண்டும் சர்க்கரைப் பாகில் போட்டு 4 மணி நேரம் ஊற வைக்கவும். இதுதான் தில் பஹார்.

பிறகு, சர்க்கரையையும் கோவாவையும் சம அளவில் கலந்து அடுப் பில் 2 நிமிடம் வைத்து, ஆற விடவும். தில்பஹாரை சர்க்கரைப் பாகி லிருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்து, ரெடியாக உள்ள கோவா சாஸை அதன்மீது பரத்தவும். பாதாம், முந்திரி, செர்ரி கொண்டு அலங்கரிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக