வியாழன், 3 ஆகஸ்ட், 2017

நெத்திலி மீன் வறுவல்...



நெத்திலி மீன் வறுவல்...

*☆தேவையான பொருட்கள்☆*

நெத்திலி மீன் – 1 /2 கிலோ
மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
தனியாத்தூள் – 4 ஸ்பூன்
மஞ்சள்தூள் -1 /2 ஸ்பூன்
எலுமிச்சம்பழம் – 2
எண்ணெய் – 4 தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 2 சிறிதளவு
இஞ்சி,பூண்டு விழுது – 1 ஸ்பூன்

*☆செய்முறை☆*

நெத்திலி மீனின் தலை மற்றும் குடல் பாகத்தை நீக்கி,ஒன்றுக்கு இரண்டு முறை தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து அலச வேண்டும்.

பாத்திரத்தில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், எலுமிச்சம்பழச்சாசாரு பிழிந்து தேவையான அளவு உப்பு சேர்த்து சுத்தம் செய்த நெத்திலியை அதில் சேர்த்து நன்கு பிசறி குறைந்தது 15 நிமிடம் ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும், கறிவேப்பிலையை பொரித்து எடுத்த பிறகு, நெத்திலியைப் போட்டு மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.

சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார். பொரித்து வைத்துள்ள நெத்திலி மீன்களின் மேல் பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலையைத் தூவி பரிமாறவும்.

*இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக