வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கோதுமை பக்கோடா



கோதுமை பக்கோடா

*தேவையானவை:*

கோதுமை மாவு - 200 கிராம்
ராகி மாவு - 100 கிராம்
கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
(பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன் நறுக்கியது
கறிவேப்பிலை - 4 டீஸ்பூன் நறுக்கியது
பச்சைமிளகாய் - 2
(பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

*செய்முறை:*

எண்ணெய் தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக ஒரு பவுலில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், பிசைந்து வைத்த மாவை எண்ணெயில் பிய்த்துப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக