வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

இறால் முருங்கைக்காய் கிரேவி



இறால் முருங்கைக்காய் கிரேவி

தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் - 1இறால் -  கால்  கிலோநறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 2பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன்மிளகாய் தூள்  - 2  ஸ்பூன்கரம் மசால் பொடி - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்எண்ணெய் - 2  ஸ்பூன்அரைத்த தேங்காய் விழுது - 2 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுகடுகு - அரை ஸ்பூன்உப்பு - தேவையான அளவு

செய்முறை :

இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி காய் ந்ததும்  கடுகு  கறிவேப்பிலை,  போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்,   பொடித்த மிளகு சீரகம்  சேர்த்து வதக்கவும்.

பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு வதங்கியவுடன்   முருங்கைக்காய்  இறால் சேர்த்து    கிளரி  விடவும்.

5 நிமிடம்  கழித்து  கரம் மசாலா சேர்த்து, தேவைாயன  அளவு  தண்ணீர் ,  அரைத்த தேங்காய் விழுது  சேர்த்து  கடாயை  மூடிவைத்து  15 நிமிடம்  அடுப்பை  சிம்மில்  வைத்து  வேக விடவும். எண்ணெய் மேலே மிதந்து வந்தவுடன் இறக்கவும்.சுவைாயன

*இறால்  முருங்கைக்காய் கிரேவி ரெடி.*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக