கலவைக் காய் சாம்பார்
தேவையானவை:
அவரைக்காய் - 4, பறங்கிக்காய் - ஒரு சிறு துண்டு, கத்திரிக்காய், கேரட், பச்சை மிளகாய் - தலா ஒன்று, புளி - எலுமிச்சைப் பழ அளவு, துவரம்பருப்பு - 100 கிராம், சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
துவரம்பருப்பை வேகவைக்கவும். அவரைக்காய், பறங்கிக்காய், கத்திரிக்காய், கேரட் ஆகிய வற்றை நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய காய்கறிகள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவைக்கவும். காய்கள் வெந்ததும் துவரம்பருப்பை சேர்த்து, நன்கு கொதித்த உடன் இறக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்க்கவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக