கொங்கு கொத்தமல்லி இலை புலாவ்
இந்த கொங்கு கொத்தமல்லி புலாவ் அல்லது பிரியாணி சமையல் நிபுணரான மாதம்பட்டி தங்கவேலுவின் ஸ்பெசல் சமையல் செய்முறை ஆகும்.
பெரும்பாலான கொங்கு விசேஷங்களில் இந்த உணவு இடம்பெற்றுவிடும்.
ஒரு தடவை செய்து பார்த்து விட்டு உங்கள் அணுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி 2 கப்
கொத்தமல்லி இலைகள் 1 கட்டு
பசு நெய் 3 மேஜைக்கரண்டி
மரசெக்கு கடலெண்ணய் 2 மேஜைக்கரண்டி
பட்டை 2 இன்ச்
மராட்டிய மொக்கு 2
கிராம்பு 4
அண்ணாச்சி மொக்கு 2
ஏலக்காய் 3
சோம்பு 1 தேக்கரண்டி
அரைவேக்காடு வேகவைத்துள்ள பட்டாணி 1 கப்
இஞ்சி-பூண்டு விழுது 2 1/2 மேஜைகரண்டி
வரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் விழுது 1 மேஜைக்கரண்டி ( 6 மிளகாய்)
தயிர் 1 கப்
பெரிய வெங்காயம் 1 ( பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் 12 ( அம்மிகல்லில் நசுக்கியது)
முழு முந்திரி பருப்பு 12
பசு வெண்ணை 1 மேஜைக்கரண்டி
திக்கான தேங்காய் பால் 2 கப்
இரண்டாம் தேங்காய் பால் 1 கப்
உப்புதூள் தேவையான அளவு
செய்முறை
1. அரிசியை நன்றாக 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும்.
2. கொத்தமல்லி இலைகளை நன்றாக தண்ணீரில் அலசி அதனுடன் தண்ணீர் சேர்த்துகோங்க அதை மிக்ஸியில் சேர்த்துகோங்க நன்றாக மையமாக விழுதாக நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.
3. இப்பொழுது பிரஷர் குக்கரில் நன்றாக காய்ந்ததும் பசு நெய் மற்றும் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி மொக்கு மற்றும் மராட்டிய மொக்கு சேர்த்துகோங்க நன்றாக மணம் வீசும் வரை வதக்க வேண்டும்.
4. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்க வேண்டும்.
5. அதில் அம்மிகல்லில் நசுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும்.
6. அதில் பச்சை மிளகாய் விழுதை சேர்த்துகோங்க , பிறகு அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.
7. அதில் முந்திரி பருப்பு விழுதையும் சேர்த்துகோங்க ஒரு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். அதில் பச்சை பட்டாணி சேர்த்துகோங்க.
8. பிறகு அதில் வரமிளகாய் தூள் , கரம்மசாலா தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
9. இப்பொழுது அதில் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி இலைகள் விழுதை சேர்த்துகோங்க அதனுடன் தயிரை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.
10. அதில் 3 கப் தேங்காய் பால் சேர்த்துகோங்க நன்றாக கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்துகோங்க அதனுடன் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க.
11. இப்பொழுது பிரஷர் குக்கரின் மூடியை மூடி இரண்டு விசில் வரை விட்டுகோங்க திறந்த உடன் பசு வெண்ணையை மேலே விட்டுகோங்க பிறகு பபரிமாவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக