ஆந்திரா ஸ்டைல்: சிக்கன் 65 ரெசிபி
சிக்கன் ரெசிபிக்களிலேயே சிக்கன் 65 அனைவருக்குமே பிடித்த ஒன்று. இந்த சிக்கன் 65 ரெசிபியை தென்னிந்தியாவில் பலவாறு சமைப்பார்கள். அவற்றில் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி மிகவும் காரமாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும். எனவே இந்த வாரம், வீட்டில் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள். இப்போது ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ (சிறியதாக நறுக்கியது) எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு - 1 டீஸ்பூன் முட்டை - 1 கறிவேப்பிலை - சிறிது பச்சை மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: சிக்கன் துண்டுகள நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பொளலில் சோள மாவு, அரிசி மாவு, முட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மிளகு தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை, சோள மாவு கலவையில் சேர்த்து கலந்து, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக