ஞாயிறு, 3 டிசம்பர், 2017

மத்தி மீன் கேரள வறுவல்


மத்தி மீன் கேரள வறுவல்

தேவையான பொருள்கள்:

மத்தி மீன்...1 /2 கிலோ
மிளகு..10 தேக்கரண்டி
சீரகம்......1 தேக்கரண்டி
சோம்ப.......1 /2 தேக்கரண்டி
இஞ்சி... 2 இன்ச் நீளம்
பூண்டு..... 20 பல்
எலுமிச்சை சாறு....1 தேக்கரண்டி
தயிர்..1 /2 தேக்கரண்டி
உப்பு...தேவையான அளவு
எண்ணெய் ....200 மில்லி
கறிவேப்பிலை ....அலங்கரிக்க

செய்முறை:

1.மீனை நன்கு சுத்தம் செய்யவும். மிளகு, சீரகம், சோம்பு இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைக்கவும்.

2. இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சி,பூண்டு விழுது, மிளகு, சீரகம், எலுமிச்சை சாறு, தயிர் + உப்பு போட்டு நன்கு கலந்து, அதனை கழுவிய மீனில் நன்கு தடவி வைக்கவும்.

3.தேவையானால் மஞ்சள் பொடி சேர்க்கலாம். இதனை குளிர்சாதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும். 3 -4 மணி நேரம் வைக்கலாம்.

4.அதன்பின், அடுப்பில் கடாயை வைத்து, அதில் பாதி எண்ணெய் ஊற்றி சூடானதும்,மசாலா பிசறிய 10மீனை மெதுவாக அடுக்கி வைத்து, அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும்.

5.அதனை கொஞ்ச நேரம் கழித்து, மீன் உடைந்து விடாமல் மெதுவாக புரட்டிவிடவும்.

6.எண்ணெய் போதவில்லை என்றால் ஊற்றவும். அடுத்த பக்கமும் வெந்ததும், மீனை உடையாமல் புரட்டவும்.

7.இரு பக்கமும் மீன் மொறு மொறு என வெந்ததும் எடுத்து தட்டில் வைத்து கறிவேப்பிலை தூவி சூடாக பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக