வியாழன், 21 டிசம்பர், 2017

கிறிஸ்துமஸ் ரெசிப்பி கருப்பட்டி முட்டை புடிங் தேவையானவை:


கிறிஸ்துமஸ் ரெசிப்பி கருப்பட்டி முட்டை புடிங் தேவையானவை:

கருப்பட்டி - 100 கிராம்

தண்ணீர் - 5 டேபிள்ஸ்பூன்

முட்டை - 2 (90 -100 கிராம் இருக்க வேண்டும்)

வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்

வெண்ணெய்/எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

கருப்பட்டியை நன்றாகப் பொடித்துத் தூளாக்கவும். அடுப்பில் வாணலி வைத்து பொடித்த கருப்பட்டி, 5 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். அதிக நேரம் அடுப்பில் வைக்க வேண்டாம். கரைந்ததும் வடிகட்டி ஆறவிடவும். முட்டையை லேசாக அடித்து (நுரை வரும்வரை அடிக்கக் கூடாது), ஆறிய கருப்பட்டிப் பாகு, எசன்ஸ் சேர்த்து லேசாகக் கலக்கவும். மோல்டு அல்லது டம்ளரில் சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் (வாசனையில்லா எண்ணெய்) தடவி, முட்டை - கருப்பட்டிக் கலவையை அதில் ஊற்றவும். வாய்ப்பகுதியை ஃபாயில் பேப்பரால் மூடவும் (இல்லையென்றால் வேகவைக்கும்போது தண்ணீர் உள்ளே சென்றுவிடும்).

அடுப்பில் ஒரு பான் வைத்து தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இந்த மோல்டு/டம்ப்ளரை தண்ணீரில் மூழ்கிவிடாதபடி உள்ளே வைக்கவும். மூடி போட்டு 30 நிமிடங்கள் வேகவிடவும். வெந்துவிட்டதா என்று பதம் பார்க்க, கத்தியை கலவையின் நடுவே விட்டுப் பார்க்கவும். ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம். இல்லை என்றால் சிறிது நேரம் வேகவிடவும். வெந்ததும் வெளியே எடுத்து கட் செய்து பரிமாறவும். ஜெல்லிபோல இருக்கும் இந்த புடிங்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக