வியாழன், 21 டிசம்பர், 2017

பிரகாஷ் செஃப் பெருந்துறை பாரம்பரிய ஆட்டிறைச்சி குழம்பு


பிரகாஷ் செஃப் பெருந்துறை பாரம்பரிய ஆட்டிறைச்சி குழம்பு

இந்த செஃப் எனது ஓட்டலின் மாஸ்டரே ஆகும்.

கேட்டரிங் படித்துவிட்டு எனது ஓட்டலில் உதவியாளராக வந்து சேர்ந்தார். இன்று இவருடைய சமையல் வித்தைகளுக்கு நமது நாவின் ஆனந்தமே சாட்சி.

இவர் பாரம்பரிய உணவு வகைகளை சமைப்பதில் கைத்தேர்ந்தவர்.

மண்பானையில் சமைத்தால் மட்டும் போதாது, விறகு அடுப்புல சமைத்தால் மட்டும் போதாது இன்று நிறைய உணவகங்கள் இப்படி சொல்லி தான் உங்கள் பணமூட்டைகளை திவால் ஆக்குகிறார்கள் !!!

அதற்கு இராசயானம் உணவுகள் தவிர்தல், பாக்கேட் மசாலா பொருட்கள் தவிர்த்தல், அம்மிகல் மற்றும் ஆட்டுகல் பயன்படுத்துதல் , சரியான பொருள் விகிதம், சரியான நேரத்தில் உட்பொருளை சேர்த்துதல் , அனைத்திற்கும் மேலாக ஒன்று அதுதான் கைப்பக்குவமே ஆகும் !!

மாஸ்டர் சுப்பையா நாயுடு க்கு அடுத்த படியாக மாஸ்டர் பிரகாஷ் ஐயரின் சமையல் வித்தைகளே எனது பலம் !!!

தேவையான பொருட்கள்
ஆட்டிறைச்சி முன்னங்கால் 1/2 கிலோ
திக்கான தேங்காய் பால் 1 1/2 கப்
மரசெக்கு கடலெண்ணய் 1/4 கப்
சின்ன வெங்காயம் 12 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி 2 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
கறிவேப்பில்ல ஒரு கைப்பிடி
கொத்தமல்லி இலைகள் கொஞ்சமாக

பிரிஞ்சி இலை 1
பட்டை 2 இன்ச்
குருமிளகு 1 தேக்கரதண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
கிராம்பு 4
அண்ணாச்சி மொக்கு 1

மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 2 தேக்கரண்டி
காஸ்மீரி மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 2 தேக்கரண்டி
சோம்பு தூள் 2 தேக்கரண்டி
சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1/2  தேக்கரண்டி

செய்முறை

1. ஆட்டிறைச்சியை நன்றாக சுத்தமாக ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு நன்றாக கழுவி வைத்து கொள்ள வேண்டும்.

2. இப்பொழுது பிரஷர் குக்கரில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் பிரிஞ்சி இலை, மராட்டிய மொக்கு , அண்ணாச்சி மொக்கு, பட்டை, கிராம்பு, சோம்பு, மற்றும் குரு மிளகு சேர்த்து நன்றாக மணம் வீசும் வரை வதக்கவும்.

3. அதில் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்கவும்.

4. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

5. இச்சமயத்துல அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

6. இப்பொழுது அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக மசியும் வரை 3 நிமிடங்கள் சிறுதீயிலேயே வதக்க வேண்டும்.

7. இச்சமயத்துல அனைத்து மசாலா தூள்களையும் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூளையும் பிரஷர் குக்கரில் சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.

8. இந்த கலவையை நன்றாக சிறுதீயிலேயே எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.

9. இப்பொழுது நன்றாக சுத்தமாக கழுவி வைத்துள்ள ஆட்டிறைச்சியை பிரஷர் குக்கரில் சேர்த்துகோங்க நன்றாக கிளற வேண்டும். 5 நிமிடங்கள் சிறுதீயிலேயே வேக வைக்க வேண்டும்.

10. அதன் பிறகு திக்கான தேங்காய் பாலை சேர்த்துகோங்க அதனுடன் அரைகப் தண்ணீர் சேர்த்துகோங்க மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயிலேயே கொதிக்க வைக்க வேண்டும்.

11. நன்றாக கொதிக்க ஆரம்பித்த உடன் பிரஷர் குக்கரின் மூடியை மூடி மிதமான தீயில் 7-8 விசில் வரை விட்டுகோங்க. அதன்பிறகு ஆவி அடங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவவும்.

12. இப்பொழுது  எடுத்து சுடச்சுட இட்லி , சுடுசாதம், தோசையுடன் பரிமாறவும். சப்பாத்தி உடன் சாப்பிடவும் டக்கராக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக