ஞாயிறு, 3 டிசம்பர், 2017

இறால் சில்லி 65 (prawn chilli 65)


இறால் சில்லி 65 (prawn chilli 65)

தேவையான பொருட்கள் :
இறால் - 20
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

மசாலாவிற்கு :

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
சோள மாவு - 1 கிண்ணம்
கொத்துமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - சிறிது

செய்முறை :

* முதலில் இறாலை தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவிற்கு கொடுத்துள்ளவற்றை சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடேற்றி இறால் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், இறால் சில்லி 65 ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக