ஞாயிறு, 3 டிசம்பர், 2017

வாத்து கறி - சன்டே சமையல்


வாத்து கறி - சன்டே சமையல்

வாத்து கறி - 1 கிலோ
தக்காளி - 2
பல்லாரி - 2 பெரியது
புளிப்பு இல்லாத தயிர் - 4 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 6 மேசைக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
நச்சீரக தூள் - 1/4 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக் கரண்டி
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 3 மேசைக்கரண்டி
கருவா - 4 பெரிய துண்டுகள்
ஏலக்காய் - 6
கிராம்பு - 5
கசகசா விழுது - 2 மேசைக்கரண்டி
தேங்காய் பால் - 1/2 கப்
முருங்கைக்காய் - 2

வாத்து கறியை சுத்தம் செய்து துண்டுகளாக்கி மசாலா தூள் 3 மேசைக்கரண்டி, உப்பு, 2 மேசைக்கரண்டி தயிர் சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும்,

முருங்கைகாயினை தேவையான அளவு துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி கொள்ளவும்.

தேங்காய் பாலில் கசகசா விழுதை கரைத்து வைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் கருவா, கிராம்பு, ஏலம் போடவும். நறுக்கிய பல்லாரியை சிறிதளவு போட்டு நன்றாக வதக்கவும்.

பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் தயிர் 2 மேசைக்கரண்டி சேர்க்கவும். தாளிப்பில் கறிவேப்பிலை, ரம்பை இலை சேர்க்கவும்.

அரிந்து வைத்துள்ள தக்காளி, பல்லாரி, பச்சை மிளகாயினை தாளிப்பில் போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் மீதி இருக்கும் மசாலா தூள், மஞ்சள் தூள், சோம்பு, மிளகு, நச்சீரகதூள் , உப்பு அனைத்தையும் சேர்த்து பிரட்டவும்.

சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல வந்ததும் மசாலா பிரட்டி வைத்துள்ள வாத்து கறியை சேர்த்து நன்றாக பிரட்டவும்.

தீயை குறைத்து வைத்து மசாலா கறியில் சேரும் வரை எண்ணெயிலேயே 10 நிமிடங்கள் பிரட்டி கொண்டு இருக்கவும்.

பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தீயின் அளவை கூட்டி குக்கரை மூடி விடவும்.

கறி நன்றாக வெந்ததும் கசகசா கரைத்த தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.

கொதித்ததும் நறுக்கிய முருங்கைகாயினை போட்டு குக்கரை மூடாமல் தீயை குறைத்து வைத்து வேக விடவும். இப்போது கறியின் மேல் நெய்யை ஊற்றி விடவும்.

முருங்கைக்காய் வெந்து மணம் வந்ததும் இறக்கி விடவும்.

வாத்து கறி வேக நேரம் ஆகும். குக்கரில் ஆக்கினா நன்று!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக