சனி, 10 ஜூன், 2017

செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு | கருப்பு கொண்டைக்கடலை கறி


செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு | கருப்பு கொண்டைக்கடலை கறி


செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பு | கருப்பு கொண்டைக்கடலை கறி என்றவுடனே அனைவருக்கும் கேரளப்  புட்டும், கடலைக் கறியும் தான் ஞாபகத்தில் வரும்.

நான் இங்கு கொடுத்திருக்கும் ரெசிபி, செட்டிநாடு சமையலை அடிப்படையாகக் கொண்டது.

இது சாதம் மற்றும் டிபன் வகைகளுடன் சாப்பிட, சுவை அபாரமாக இருக்கும்.


*தேவையான பொருட்கள்:*

கருப்பு கொண்டக்கடலை – 150 கி

பெரிய  வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1

பூண்டு (நசுக்கியது) – 3 பல்

தக்காளி (பொடியாக நறுக்கியது)– 2

மிளகாய் தூள்  – 2 டீஸ்பூன்

மல்லித்தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு


*அரைத்துக் கொள்ள:*

தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

கசகசா – கால் டீஸ்பூன்

முந்திரி (விரும்பினால்) – 5


*தாளிக்க:*

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

பட்டை  – 1” துண்டு

சோம்பு  – 1 டீஸ்பூன்

கருவேப்பிலை – சிறிதளவு


*செய்முறை:*

கொண்டைகடலையை குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைத்து, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில்  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.

பிறகு வெங்காயம்,பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின்  தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

இத்துடன்  மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி, வேக வைத்த கொண்டைகடலை சேர்க்கவும். இத்துடன் 1 கப்  தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.

பிறகு  உப்பு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

சுவையான செட்டிநாடு கொண்டைக்கடலை குழம்பை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடவும், இட்லி, தோசை, ரொட்டி, இடியாப்பம் போன்ற டிபன் ஐட்டங்களுடன் தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக