திங்கள், 5 ஜூன், 2017

சிக்கன் சப்பாத்தி ரோல்



சிக்கன் சப்பாத்தி ரோல்
 

சிக்கன் சப்பாத்தி ரோலை எளிய முறையில் எப்படி செய்து எனக் காணலாம்.



*தேவையான பொருட்கள்*

சதைப்பகுதியான சிக்கன் - 250 கிராம்

எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்

தயிர் - 2 டீஸ்பூன்

புதினா இலை  - சிறிதளவு ( நறுக்கவும்)

கொத்தமல்லி தழை - சிறிதளவு ( நறுக்கவும்)

எண்ணெய் - 1 டீஸ்பூன்

வெங்காயம் -  1 (நீளமாக நறுக்கவும்)

குடைமிளகாய் - சிறிதளவு

தக்காளி - 1

முட்டை - 1

உப்பு - சுவைக்கேற்ப

மிளகு - தேவையான அளவு

சப்பாத்தி

*செய்முறை*

ஒரு கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளைப் போட்டு எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, தயிர், நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து குக்கரில் இட்டு விசில் விட்டு வேக வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி  சேர்த்து நன்றாக வதக்கியதும் வேக வைத்த சிக்கனைப் போட்டு தண்ணீர் சுண்ட வைக்கவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

மீண்டும் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி அதன் மேலாக சப்பாத்தி வைத்து சப்பாத்தியை திருப்பி போடவும்.

 திருப்பி போட்டசப்பாத்தி மேல் சிக்கன் கலவையை வைத்து அதன் மேலாக புதினா சட்னி விட்டு சப்பாத்தியை ரோல் பண்ணவும்.

*சிக்கன் சப்பாத்தி ரோல் ரெடி!*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக