இட்லி தோசைக்கு தொட்டு கொள்ள சூப்பரான கறிவேப்பிலைப் பொடி!
*தேவையானவை*
கறிவேப்பிலை - 2 கப்
தனியா தூள் - 2 டீஸ்பூள்
தேங்காய் - 1/2 மூடி
எண்ணெய் - 4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 10
கடலை பருப்பு - 1/2 கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
*செய்முறை*
முதலில் வாணலியில் எண்ணெய் விடாமல் தேங்காய் துருவி வறுக்கவும். தேங்காய் நன்றாக வாசனை வந்து சிவந்து கருகும் பதத்துக்கு வருவதற்கு முன்பு எடுத்து விடவும்.
அடுத்து வெறும் வாணலியில் தனியாவைப் போட்டு வெடிக்கவிட்டு வறுக்கவும். இதுவும் நன்றாக மணம் வரும் வரை சிவக்க வேண்டும்.
அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு முதலில் மிளகாய் வற்றலை சிவக்க வைத்துக் கொண்டு கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு சேர்த்து வறுக்கவும். பருப்புகள் பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்கவும். இதற்குள் கறிவேப்பிலையும் நீர் வற்றி வரும்.
அடுத்து எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நன்றாகப் பொடிக்கவும். இதைச் சாதத்தோடு நெய் விட்டு சூடாகக் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக