திங்கள், 5 ஜூன், 2017

தக்காளி தொக்கு..



தக்காளி தொக்கு..

சூப்பரான சுவையில் தக்காளி சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.



*தேவையான பொருட்கள்*

தக்காளி - 4

நல்லெண்ணெய் - 1 12 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

பூண்டு - 10 பல்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - சுவைக்கேற்ப

வெங்காயம் - 1 ( நறுக்கவும்)

மஞ்சள்தூள்  - 1/2 டீஸ்பூன்

*செய்முறை*

தக்காளியை தண்ணீரில் இட்டு  வேக வைத்து அதன் தோலை உரித்து வெட்டிக் கொள்ளவும்.

பிறகு, அடுப்பில் கடாயை 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்தம் பருப்பு,  1 டீஸ்பூன் கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பூண்டு தாளிக்கவும்.

அதனுடன்,  பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து மென்மையாக வதக்ககி விட்டு தேவையான அளவு உப்பு, 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியாக வதக்கவும். எண்ணெய் தனியாக பிரிந்து வர வேண்டும்.

தக்காளி தொக்கு ரெடி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக