ஞாயிறு, 4 ஜூன், 2017

ருசியான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி!!



ருசியான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி!!


 வெஜிடபிள் பிரியாணி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். தேங்காய்ப்பால், வெஜிடபிள் சேர்த்து செய்யும் இந்தப் பிரியாணி மிக சுவையாக இருக்கும். இப்போது இந்த தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

பாசுமதி அரிசி - 2 கப்

தேங்காய்ப்பால் - 3 கப்

காளிஃப்ளவர் - அரை கப்

பச்சைப் பட்டாணி - 4 டேபிள்ஸ்பு+ன் (வேக வைத்தது)

பிரியாணி இலை - 2

கிராம்பு - 4

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

பீன்ஸ் - 12

பெரிய வெங்காயம் - 3

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 4

பிரியாணி மசாலாத்தூள் - 2 டீஸ்பு+ன்

எண்ணெய் - தேவையான அளவு

நெய் - 2 டீஸ்பு+ன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

🍝 முதலில் கொத்தமல்லித்தழை, தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் பச்சை மிளகாய், பீன்ஸை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். பின்பு அரிசியை நீரில் அலசி 30 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு நீரை வடிக்க வேண்டும்.

🍝 பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சு+டானதும், அரிசியை ஈரம் போகும் வரை சில நிமிடங்கள் வறுக்கவும். பிறகு குக்கரில் எண்ணெய் - நெய் சேர்த்து, சு+டானதும் பிரியாணி இலை, கிராம்பு சேர்த்து தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

🍝 பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதனுடன் தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் பச்சைப் பட்டாணி, காளிஃப்ளவர், பீன்ஸ், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வதங்கியதும் அதில் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, வறுத்த அரிசி சேர்த்து கலக்கி, மிதமான தீயில் வைத்து, விசில் போட வேண்டும்.

🍝 பின்னர் 20 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். ஆவி போனவுடன் குக்கரைத் திறந்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறினால், ருசியான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி தயார்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக