ஞாயிறு, 11 ஜூன், 2017

மதுரை மட்டன் குழம்பு



மதுரை மட்டன் குழம்பு
   

*மட்டன் குழம்பு என்றால், மதுரை மட்டன் குழப்பு தான் அனைவரின் முதல் தேர்வும்.*

*காரம், சுவை, வாசனை அனைவரையும் சுண்டி ஈர்க்கும்.*

 இந்த மட்டன் குழம்பை எப்படி வைப்பது என்று பார்ப்போம்.



*தேவையானவை:*

எலும்புடன் ஆட்டுக்கறி -1/2 kg

தக்காளி பெரியது -2

சின்ன வெங்காயம் _50 கிராம்

கசகசா _2 டேபிள்ஸ்பூன்

சீரகம் -2 டேபிள்ஸ்பூன்

குழம்பு மசாலா பொடி -2 குழிக்கரண்டி

கருவேப்பிலை -சிறிது

கொத்தமல்லி -சிறிது

தேங்காய் -1/2 மூடி

இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டேபிள்ஸ்பூன்

*செய்முறை:*

கசகசா ,சீரகம் இரண்டையும் அம்மியில் அரைக்கவும்.

அம்மியில அரைத்தால் குழம்பு சுவையாக இருக்கும்.

நன்றாக அரைத்ததும் 5 சின்ன வெங்காயத்தை அதனுடன் தட்டி எடுக்கவும்.

கறியை நன்றாகக் கழுவி அரைத்த மசாலா ,தக்காளி , இஞ்சி பூண்டு பேஸ்ட், குழம்பு மசாலாப்பொடி உப்பு போட்டு குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும்.

கறி நன்றாக வெந்ததும் வாணலியில் நல்லஎண்ணை ஊற்றி சோம்பு ,கறிவேப்பிலை ,வெங்காயம் போட்டு தாளிக்க வேண்டும் .

அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய்ப்பால் ஊற்ற வேண்டும் .அதிகம் கொதிக்க விடக்கூடாது .

எண்ணெய் தெளிந்து மேலே மிதந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

*கமகமன்னு மதுரை மட்டன் குழம்பு ரெடி!*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக