திங்கள், 5 ஜூன், 2017

உடல் பருமனைக் குறைக்க எளிய உணவான முள்ளங்கி சப்பாத்தி!


உடல் பருமனைக் குறைக்க எளிய உணவான முள்ளங்கி சப்பாத்தி!
   

உடல் பருமனாக உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க முள்ளங்கி சப்பாத்தியை சாப்பிடலாம்.

 எனெனில் முள்ளங்கி கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.

 இப்போது முள்ளங்கி சப்பாத்தி எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.


*தேவையான பொருட்கள்*

முள்ளங்கி – 3

பச்சை மிளகாய் – 2 சிறிதாக (நறுக்கவும்)

கொத்துமல்லி தழை – சிறிதளவு (நறுக்கவும்)

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் -  சிறிதளவு

கோதுமை மாவு – 2 கப்

*செய்முறை*

முதலில் கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். (சப்பாத்தி மிருதுவாக இருக்க சூடு தண்ணீர் உபயோகியுங்கள்) முள்ளங்கிகளை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

முள்ளங்கித்துருவலைப் பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும்.

(உங்களுக்கு விருப்பமானால் இந்த நீரை உபயோகித்தும் சப்பாத்தி மாவு பிசையலாம்,
 பிசைந்த மாவை 1 மணி நேரம் ஊரவிட்டால் சப்பாத்தியை மிருதுவாக்கும்).

ஒரு பாத்திரத்தில் இந்தத் துருவல், பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.

 பின்பு மிளகாய் தூள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

சப்பாத்தி மாவை பெரிய உருண்டைகளாக உருட்டவும்.

வட்டமாக சப்பாத்தி இட்டு அதில் இரண்டு டீஸ்பூன் முள்ளங்கி கலவையை வைத்து உருட்டி கனமான சப்பாத்தியாக இடவும்.

சிறிது எண்னை விட்டு சப்பாத்திகளை சுட்டெடுக்கவும். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக