திங்கள், 5 ஜூன், 2017

மதுரமான மாம்பழ சிக்கன் குழம்பு...



மதுரமான மாம்பழ சிக்கன் குழம்பு...  

சிக்கன் குழம்பு இயல்பாகவே கார சாரமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

 அதனுடன் மாம்பழம் சேர்த்தால் எப்படி இருக்கும் என தெரியுமா?.

அதன் சுவை சொல்லவே தேவையில்லை. அவ்வளவு ருசியாக இருக்கும்.

 வாருங்கள் நாவை சொட்ட வைக்கும் மாம்பழ சிக்கன் சமைத்து சாப்பிடலாம்.


*தேவையான பொருட்கள்*

எண்ணெய் - 2 டீஸ்பூன்

வெங்காயம் - 170 கிராம்

சிகப்பு குடை மிளகாய் - 70 கிராம்

பூண்டு - 1 டீஸ்பூன்

இஞ்சி - 1 டீஸ்பூன்

கறி பொடி- 2 டீஸ்பூன்

சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்

வினிகர் - 2 டீஸ்பூன்

தேங்காய் பால் - 420 மில்லி லிட்டர்

மாம்பழம் - 380 கிராம்

சதைப்பகுதியான சிக்கன் - 560 கிராம்

திராட்சை - 60 கிராம்

உப்பு - 1/2 டீஸ்பூன்

மிளகு - 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை - அழகுப்படுத்த

*செய்முறை*

கடாயை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில், வெங்காயம், சிகப்பு குடைமிளகாய்  சேர்த்து வதக்கவும்.

அதனுடன், 1 டீஸ்பூன் பூண்டு, இஞ்சி  விழுது, வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அதில், 2 டீஸ்பூன் கறி மசால் தூள், 1/2 டீஸ்பூன் சீரகம், வினிகர், தேங்காய்பால், மாம்பழம் சேர்த்து நன்றாக கிளறி விட்டு கொதிக்க வைக்கவும்.

கொதிக்க வைத்த மாம்பழ கலவையை மிக்சியில் இட்டு அரைக்கவும்.

மீண்டும் அடுப்பில் கடாயை வைத்து அரைத்த கலவையை ஊற்றி

சிக்கனைப் போட்டு திராட்சை சேர்த்து நன்றாக கிளறி விட்டு 8 அல்லது 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து கிளறி விடவும். மேலும், அதில் மாம்பழத்துண்டுகளை இட்டு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

 மாம்பழ சிக்கன் குழம்பு ரெடி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக