பனீர் பாதாம் மிக்ஸ் ஃப்ரை
*என்னென்ன தேவை? *
பனீர் - 350 கிராம்,
உப்பு - தேவைக்கு,
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
பாதாம் - 50 கிராம்,
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கவும்).
*எப்படிச் செய்வது? *
பாதாமை தண்ணீரில் 6 மணி நேரம் ஊறவைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பனீரை சிறிய சதுர துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடங்கள் வேகவிட்டு பனீரைப் பிழிந்து எடுத்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெயை விட்டு சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் அரைத்த பாதாம் விழுதைச் சேர்த்து கிளறி, பனீர், உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். கறிவேப்பிலையை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்பு: பேலியோ டயட்டில் அதிக காரம், எந்தவொரு பாக்கெட் மசாலாவையும் சேர்க்கக் கூடாது.
செக்கில் ஆட்டிய எண்ணெயை மட்டும் பயன்படுத்தவும். ரீபைண்ட் ஆயில் மற்றும் ஹைட்ரோஜெனேடட் ஆயிலைப் பயன்படுத்தக் கூடாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக