வெள்ளி, 30 ஜூன், 2017

வாழை இலை விருந்து பறிமாறும் முறை...


வாழை இலை விருந்து பறிமாறும் முறை...

1. உப்பு (Salt)
2. ஊறுகாய் (Pickles)
3. சட்னி பொடி (Chutney Powder)
4. பச்சை பயிர் கூட்டு (Green Gram Salad)
5. பருப்பு கூட்டு (Bengal Gram Salad)
6. தேங்கய் சட்னி (Coconut Chutney)
7. பீன்… பல்யா (Fogath)
8. பலாப்பழ உண்டி (Jack Fruit Fogath)
9. சித்ரண்ணம் (Lemon Rice)
10. அப்பளம் (Papad)
11. கொரிப்பு (Crispies)
12. இட்லி (Steamed Rice Cake)
13. சாதம் (Rice)
14. பருப்பு (Dal)
15. தயிர் வெங்காயம் (Raitha)
16. ரசம் (Rasam)
17. உளுந்து வடை (Black Gram Paste Fired Cake)
18. கத்திரிக்காய் பக்கோடா (Brinjal Pakoda)
19. இனிப்பும் புளிப்பும் கலந்த கூட்டு (Sweet And Sour Gravy)
20. காய்கறி பொரியல்(Vegetable Fry)
21. காய்கறி அவியல் (Vegetabel Mix)
22. வெண்டைக் காய் பக்கோடா (Ladies Finger Pakoda)
23. கத்திரிக்காய் சாம்பார் (Brinjal Sambar)
24. இனிப்பு (Sweet)
25. வடைகறி (Masalwada Curry)
26. இனிப்பு தேங்கய் போளி (Sweet Coconut Chapati)
27. கிச்சடி (Vegetable Upma)
28. இஞ்சி துவையல் (Sour Ginger Gravy)
29. பாயசம் (Sweet)
30. தயிர் (Curds)
31. மோர் (Butter Milk )

ஓட்ஸ் உப்புமா



ஓட்ஸ் உப்புமா

என்னென்ன தேவை?

ஓட்ஸ்- 1 கப்
கடுகு-1/2 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்(விரும்பினால்)-1 டீஸ்பூன்
மல்லி இலை-2
துண்டாக்கப்பட்ட  வெங்காயம்-1 ,
துண்டாக்கப்பட்ட  பச்சை மிளகாய்-1 ,
துண்டாக்கப்பட்ட கேரட்-1/4 கப்
துண்டாக்கப்பட்ட மிளகாய்-1/4 கப்
துண்டாக்கப்பட்ட  தக்காளி-1,
வறுத்த முந்திரி கொட்டைகள் (விரும்பினால்)-5-6
கொத்தமல்லி இலை நறுக்கப்பட்ட- 2 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் அல்லது நெய்  2 தேக்கரண்டி
சூடான நீர்-2 கப்

*எப்படி செய்வது?*

ஒரு கடாயில் ஓட்ஸ் போட்டு பழுப்பு நிறமாக மாறும் வரை கிளறிவிட்டு பிறகு ஒரு பாத்திரத்தில் தனியாக கொட்டி வைத்துவிட்டு கடாயில் எண்ணெய்விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து கிளறிவிட்டு மல்லி இழை, கறிவேப்பிலையை சேர்த்து கிளறவும்.

 நறுக்கி வைக்கப்பட்டுள்ள கேரட், மிளகாய்,தக்காளி சேர்த்து 2-3 நிமிடங்கள் வேகவைத்து சிறிது உப்பு தூவவும்.

 பின்னர் வறுத்து வைத்த ஓட்ஸ்சை சேர்த்து சில நிமிடங்கள் கிளறி விடவும்.

சூடான தண்ணீரை கலந்து ஒரு சில நிமிடங்கள் கிளறி கொதிக்க ஆரம்பிக்கும் போது மூடி வைத்து மிதமான சூட்டில் தீயை வைக்கவும்.

 தண்ணீர் உறிஞ்சும் வரை ஓட்ஸ்சை முழுமையாக வேகவைக்கவும்.

 பின்னர் முந்திரிபருப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி பரிமாறலாம்.
 நீரிழிவுகாரர்களுக்கு சிறந்த உணவாகும்.

ஸ்வீட்லெஸ் தேங்காய்ப்பால் ..


ஸ்வீட்லெஸ் தேங்காய்ப்பால் ..



*என்னென்ன தேவை?*

தேங்காய்த்துண்டுகள் – 2 கப் (முற்றியது),

தண்ணீர் – 50 மி.லி.,

சுக்குத்தூள் – 1/2 டீஸ்பூன்,

சீரகம் – 1 டீஸ்பூன்,

ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்.


*எப்படிச் செய்வது?*

மிக்சியில் தேங்காய்த்துண்டுகள், தேவையான தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து தேங்காய்ப்பால் எடுத்து வடித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பால், சீரகம், சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிதமான சூட்டில் கிளறி இறக்கி பரிமாறவும்.

தொப்பையால் கஷ்டப்படுபவர்களுக்கான ஓர் நற்செய்தி



தொப்பையால் கஷ்டப்படுபவர்களுக்கான ஓர் நற்செய்தி.

அது என்னவெனில் சமீபத்தில் காளானை சாப்பிட்டால், குறிப்பாக அதன் திரவச்சாற்றினை குடித்தால், தொப்பையைக் குறைக்க முடியும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்த குறிப்பிட்ட சாற்றிற்கு உடல் பருமன் அதிகமாவதைத் தடுக்கும் திறன் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியானது எலியின் மீது நடத்தப்பட்டு, அதனால் சாதகமான முடிவு வந்ததுள்ளதாம்.

சரி, இப்போது அந்த ஆராய்ச்சி குறித்து விரிவாக காண்போம்.

தைவான் பல்கலைகழக ஆராய்ச்சி தைவானில் உள்ள சாங் கங் பல்கலைகழக ஆய்வாளர்கள் லிங்க்ழி என்னும் காளானைப் பரிசோதித்தனர்.
 அப்பரிசோதனையில் காளானிற்கு குடலில் உள்ள ஆரோக்கியமற்ற கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் குடலில் இருக்கும் ஆரோக்கியமற்ற கிருமிகள் தான் தொப்பை வருவதற்கு காரணம் என்றும் கண்டறிந்துள்ளனர்.

*எலி சோதனை*

 இந்த ஆராய்ச்சிக்கு எலியைப் பயன்படுத்தினர். இந்த ஆராய்ச்சியில் எலிக்கு கொழுப்புமிக்க உணவுகளைக் கொடுத்து வந்ததோடு, காளானும் கொடுக்கப்பட்டது.

 அப்படி கொடுத்ததில், காளான் எலியின் குடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிப்பது தெரிய வந்ததோடு, எலியும் குண்டாகாமல் இருந்தது.

மற்ற பிரச்சனைகள் இந்த ஆராய்ச்சியில் காளானில் உள்ள சத்துக்களானது உடலில் கொழுப்புக்கள் தங்குவதைத் தடுப்பதோடு, இதர பிரச்சனைகளான இன்சுலின் பிரச்சனை, கல்லீரல் நோய்கள், புற்றுநோய், தூக்கமின்மை, டைப்-2 நீரிழிவு போன்றவற்றையும் குறைப்பதாக தெரிய வந்தது.

*உடல் பருமன்*

உலகில் சுமார் 500 மில்லியன் மக்கள் தொப்பையாலும், 1.4 பில்லியன் மக்கள் உடல் பருமனாலும் கஷ்டப்படுகின்றனர்.

 நிச்சயம் அத்தகையவர்களுக்கு இச்செய்தி சந்தோஷமான ஒன்றாக இருக்கும்.

 *எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், காளான் சாற்றினை குடிக்க முடியாவிட்டாலும், தங்களின் உணவில் காளானை அதிகம் சேர்த்தாலே போதும், எடை தானாக குறையும்.*

வியாழன், 29 ஜூன், 2017

பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி



பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி

*தேவையான பொருட்கள் :*

பெரிய பாகற்காய் – 250 கிராம்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
நசுக்கிய பூண்டு – ஒரு டேபிள்ஸ்பூன்,
கடலை மாவு – 5 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

*செய்முறை :*

* பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்து விடவும்.

* வெட்டிய பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு, மஞ்சள்தூள், தயிர் சேர்த்துப் பிசிறி 20 நிமிடங்கள் ஊறவிடவும்.

* பிறகு தண்ணீர் விட்டுக் கழுவி நீர்போக பாகற்காயை வடிகட்டவும். (இப்படிச் செய்வதால் கசப்பு தெரியாது).

* வடிகட்டிய பாகற்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டு சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்துப் பிசிறவும்.

* கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காயைப் போட்டு பொரித்து எடுக்கவும்.

* எண்ணெயை வடியவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். இவ்வாறு செய்து 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிறுதானிய காய்கறி இட்லி



சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிறுதானிய காய்கறி இட்லி


சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள் சிறுதானிய உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது.

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிறுதானிய காய்கறி இட்லி
தேவையான பொருட்கள் :

வரகு, சாமை, திணை, குதிரை வாலி (நான்கு தானியங்களின் குருணைகள்) – ஒரு கப்
பயத்தம் பருப்பு – கால் கப்
உளுத்தம் பருப்பு – அரை கப்
இஞ்சி – சிறிய துண்டு
பீன்ஸ் – 10,
பச்சைமிளகாய் – 3
கேரட் – 1
பட்டாணி – அரை கப்
கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு, நெய் – தேவையான அளவு

செய்முறை :

* சிறுதானிய குருணைகளை 1 மணி நேரம் ஊறவிடவும்.

* கேரட்டை துருவிக்கொள்ளவும்.

* கொத்தமல்லி, பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பயத்தம் பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் ஊறவிட்டு, பின் தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த குருணைகள், பச்சைமிளகாய், தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் கொத்தமல்லி, உப்பு, பீன்ஸ், கேரட் துருவல், பட்டாணி சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.(தேவைப்பட்டால் சிறிதளவு தயிர் சேர்க்கவும்).

* பின்னர் இட்லி தட்டில் சிறிதளவு நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை ஊற்றி, வேகவைத்து எடுக்கவும்.

* இந்த இட்லி சத்தானது, எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது இந்த இட்லி.

கைமா இட்லி



கைமா இட்லி

என்னென்ன தேவை?

இட்லி – 6,
தக்காளி சாஸ் – 3 டேபிள்ஸ்பூன்,
லெமன் ஜூஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு – தாளிக்க,
எண்ணெய் – சிறிதளவு,
வெங்காயம் – 1,
பூண்டு – 6 பல்,
கறிவேப்பிலை இலைகள்- 5,
பச்சைமிளகாய் – 1,
வெங்காயத்தாள் – 1,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலாத் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய் போன்றவற்றை நறுக்கி தனியாக வைக்கவும். இட்லியினை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பூண்டினை போட்டு வதக்கவும். பூண்டு வதங்கியதும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் தக்காளி சாஸ், தூள் வகைகள் சேர்த்து நன்றாக 5 முதல் 6 நிமிடங்கள் வதக்கவும்.

எல்லாம் நன்றாக வதங்கியவுடன், இட்லி துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியில் வெங்காயத்தாள், எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி மேலும் 3 நிமிடங்கள் வேக விட்டுப் பரிமாறவும். இதனை தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

இதயத்திற்கும் புத்துணர்வு ஊட்டும் பொன்னாங்கன்னிக் கீரை அடை!..



இதயத்திற்கும் புத்துணர்வு ஊட்டும் பொன்னாங்கன்னிக் கீரை அடை!..

தேவையானவை

பொன்னாங்கன்னி கீரை -1  கட்டு
அரிசி - 1 கப்
இஞ்சி  -  1/2 அங்குலம்
பூண்டு - 1 ( விருப்பமானால்)
சோம்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 1/2 கப்
பெருங்காயம் - புளியங்கொட்டை அளவு
துவரம் பருப்பு - 1/4 கப்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் வற்றல் - 4
கடலை பருப்பு - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை

பொன்னாங்கன்னி கீரையை ஆய்ந்து கொள்ளவும். வெங்காயம், பச்சை ளிமகாய், தோல் நீக்கிய இஞ்சி, உரித்த பூண்டு பொடியாக நறுக்கவும். அரிசையும், கடலைபருப்பையும் தனித்தனியாக ஊற விடவும். கடலைப் பருப்போடு, துவரம்பருப்பையும் சேர்த்து ஊற விடவும்.
அரிசியைக் கழுவி கிரைண்டரில் போட்டு உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும். பப்பை கரரகப்பாக அரைத்தச் சேர்த்து அதனோடு நறுக்கிய கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கிளறவும்.
தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் ஒரு விரல் கனத்துக்கு மாவை வட்டமாகத் தட்டி மேலும் சிறிது எண்ணெய் விட்டு இரண்டு புறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.
சுடச்சுட அடையுடன் தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, ஸ்வீட் சட்னி, வெண்ணெய், பொடித்த வெல்லம், அவியல், புதினா சட்னியோடு பரிமாறவும்.

பசலைக்கீரை பொரியல்...



 பசலைக்கீரை பொரியல்...

*♨என்னென்ன தேவை?*

பசலைக்கீரை - 1/2 கட்டு,
தேங்காய்த்துருவல் - 1 கப்,
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
காய்ந்த மிளகாய் - 2,
சீரகம் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.

*♨எப்படிச் செய்வது?*

கீரையை கழுவி சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து, வெங்காயம், காய்ந்தமிளகாயை போட்டு வதக்கி, கீரையைச் சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து வேக விடவும்.

பின்பு உப்பு, தேங்காய்த்துருவலைச் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
குறிப்பு: கூடுமானவரை கீரையைக் குக்கரில் வேகவைத்தால் அதில் உள்ள சத்துக்கள் வீணாகாது.

செங்கீரை, முருங்கைக்கீரை, தண்டுக்கீரை, மணத்தக்காளிக்கீரை போன்ற கீரைகளிலும் பொரியல் செய்யலாம்.

பூசணி விதைகளின் எக்கச்சக்க மருத்துவ மகிமை!...



பூசணி விதைகளின் எக்கச்சக்க மருத்துவ மகிமை!...


பூசணியின் காய் மட்டுமல்ல, அதன் விதைகளும் தூக்கி எறியக்கூடிய பொருளல்ல என்பதை நினைவில் வைத்திருந்தால் போதும். இவற்றின் மருத்துவக் குணங்கள் அபாரமானவை’ என்கிறார் சித்த மருத்துவர் ரமேஷ். பூசணி விதைகளில் உள்ள சத்துகளையும், நம் ஆரோக்கியத்துக்கு அள்ளி வழங்கும் நலன்களையும் பட்டியலிடுகிறார்...

*♨சத்துகள்*

இதில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.

*♨இதயம் காக்கும்*

இவற்றில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம் கிடைத்துவிடும். மக்னீசியம் ரத்த அழுத்தம் மற்றும் `சடர்ன் கார்டியாக் அரெஸ்ட்’ (Sudden Cardiac Arrest) எனப்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும்.

*♨நோய் எதிர்ப்புச் சக்தி*

இவற்றில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும். துத்தநாகச் தாதுசத்து குறைபாட்டால் சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மனஅழுத்தம், முகப்பரு, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்தக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மிகச் சிறந்த உணவு இந்த விதைகள்.

*♨சர்க்கரைநோய் தடுக்கும்*

தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.

*♨கல்லீரல் நலம் காக்கும்*

ஆரோக்கியமான கொழுப்பு விதைகளில் நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்டுகள் கல்லீரல் இயக்கத்தைச் சீராக்கும். இதனுடன் ஆளி விதைகளைச் சேர்த்து உண்டால் பலன் மேலும் அதிகரிக்கும்.

*♨ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்!*

இந்த விதைகளில் உள்ள டிரிப்தோபான் (Tryptophan) என்னும் அமினோ அமிலங்கள் தூக்கத்தைத் தூண்டும் `செரொட்டோனின்’ (serotonin) என்ற ஹார்மோன் சுரக்க உதவும். இதனால் தூங்குவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்னர் இந்த விதைகளைச் சாப்பிட்டால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

*♨உள்காயங்களைச் சரியாக்கும்*

இந்த விதைகளில் உள்ள ஆன்டி இன்ஃப்ளாமேட்டரி பொருள்கள் உள்காயங்களை ஆற்றும் தன்மைகொண்டவை.

*♨உடல் வலிமை தரும்*

இந்த விதைகளைக் காயவைத்து, பொடி செய்து, அந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால், உடல் வலிமை அதிகரிக்கும்.

*♨மாதவிடாய்க் கோளாறு நீக்கும்*

பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

*♨உஷ்ணம் குறைக்கும்!*

ஆண்களின் பாலியல் ஹார்மோன்களைத் தூண்டி, . இந்த விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறையும். விந்தணுக்களின் திறன் அதிகரிக்கும்.

தினமும் கடைபிடிக்கக்கூடிய எளிய ஆரோக்கிய உணவுமுறை..



தினமும் கடைபிடிக்கக்கூடிய எளிய ஆரோக்கிய உணவுமுறை..

உடல் ஆரோக்கியத்தில் உணவு, உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் அமைதியான வாழ்க்கை முறை ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. இருப்பினும் இதில் உணவுக்குச் சிறப்பிடம் உண்டு. சத்தான உணவை முறையாகச் சாப்பிட்டால் பல நோய்களைத் தவிர்க்கலாம்.

வீட்டில் தயாரித்த உணவே சிறந்தது. அதுவும் சமைத்த இரண்டு மணி நேரத்துக்குள் உண்பது நல்லது.

காலை உணவைத் தவறாமல் உண்ண வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதை வாழ்க்கை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

உப்பு, புளி, மிளகாய் போன்றவற்றை அளவோடு பயன்படுத்த வேண்டும்.

ஜங்க்ஃபுட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பழம், சிறுதானியம், வறுத்த கடலை போன்ற வற்றைத் தினசரி சேர்த்துக்கொள்வது நல்லது.

இரண்டு வேளைக்கு மேல் காபி, டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். கோடையில் நுங்கு, இளநீர், பழரசம் அருந்தலாம்.

தயிருக்குப் பதிலாக மோர், உருக்கிய நெய் பயன்படுத்துவதால் வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்.

டயட்டீஷியனின் ஆலோசனையின்பேரில் கார்போஹைட்ரேட், மினரல், வைட்டமின், கால்சியம், புரோட்டீன் போன்றவை அடங்கிய உணவை உண்ணலாம்.

புதன், 28 ஜூன், 2017

உங்க தோல் மினு மினுக்கனுமா... சைவ உணவு சாப்பிடுங்கள்..


உங்க தோல் மினு மினுக்கனுமா... சைவ உணவு சாப்பிடுங்கள்..


சாப்பாடு என்று வந்துவிட்டால் பொதுவாக அனைவரின் விருப்பமும் அசைவ உணவாகத் தான் இருக்கும்.

*ஆனால் அசைவ உணவில் இருப்பதை விட சைவ உணவில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன.*

 இவை உடலின் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கிறது.

சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கங்கள் இவை,

*நச்சுக்களை அகற்றுபவை*

நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.

 உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.

அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.

*எலும்புகளை வலுவாக்குபவை*

இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.

 மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது.

 அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை.

*கார்போஹைட்ரேட் பற்றாக்குறை*

அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.

 இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.

*எளிதில் ஜீரணம்*

சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை சீராக அளிக்கும்.

 அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

 சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.

*ஆரோக்கியமான மேனி*

பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கிறது.

 அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பைக் கூட்டும்.

செவ்வாய், 27 ஜூன், 2017

மூங்கில் பிரியாணி



மூங்கில் பிரியாணி

*தேவையானவை:*

பாஸ்மதி அரிசி - 200 கிராம்
மூங்கில் குழல் - அரை அங்குல நீளம் கொண்டது (டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)
சீரகம் - கால் டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
பட்டை - 1 பீஸ்
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பிரியாணி இலை - 1
இரண்டாக கீறிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி-பூண்டுக் கலவை - ஒன்றரை டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
வெங்காயம் - 150 கிராம் (நீளமாக நறுக்கவும்)
முந்திரி, உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) - - அரை டேபிள்ஸ்பூன்
மீடியம் சைஸ் தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி - 200 கிராம்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா - அரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு



*செய்முறை:*

அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

 இதில் இஞ்சி-பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

 வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து நன்கு வதக்கவும்.

இதில் முந்திரி, திராட்சை (கிஸ்மிஸ்) பழம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

 தக்காளியை இதில் சேர்த்து, நன்கு மசியும் வரை வதக்கவும்.

காய்கறி மற்றும் பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி, தயிர் சேர்க்கவும்.

 கொத்தமல்லித்தழை புதினா இலைகளைச் சேர்த்து நன்குக் கிளறவும்.

பிறகு கழுவிய அரிசியைச் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு வேக விடவும்.

 பிரியாணி அரைவேக்காடு வெந்ததும் அதை அப்படியே எடுத்து, மூங்கில் கட்டையின் உள்ளே எவ்வளவு நிரப்ப முடியுமோ அவ்வளவு நிரப்பவும்.

 வாய்ப்பகுதியை ஒரு சிறிய சுட்ட சப்பாத்தியை வைத்து மூடவும்.

 சப்பாத்தியை மூடும்படியான ஒரு வாழை இலையை எடுத்து மூடி அப்படியே மூங்கில் கம்போடு வாழை இலையைச் சேர்த்து இறுக்கக் கயிற்றால் கட்டவும்.

 அப்போதுதான் உள்ளே இருக்கும் பிரியாணி வெளியே வராது.

*இந்த மூங்கில் கட்டையை நேரடியாக தீயில் இருபது நிமிடம் காட்டி எடுத்தால் அற்புதமான மூங்கில் பிரியாணி ரெடி.*

வாழைப்பூ-65



வாழைப்பூ-65

*தேவையானவை:*

வாழைப்பூ - 1 (அதில் உள்ள தனித்தனிப் பூக்களாக 30 ஐ எடுக்கவும்)
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 3 டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
கெட்டித் தயிர் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு


*செய்முறை:*

வாழைப்பூவில் உள்ள தனித்தனிப் பூக்களின் நடு நரம்பை எடுத்துவிட்டுக் கழுவி வைக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் எண்ணெய், வாழைப்பூ நீங்கலாக தேவையானவற்றில் உள்ள மற்ற அனைத்தையும் ஒன்றாக்கி தண்ணீர் சிறிது தெளித்து சேர்த்துக் கிளறவும்.

 இந்த மாவுக்கலவையை இருபது நிமிடம் ஊற விடவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் வாழைப்பூவை நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

பீட்டல் லீவ்ஸ் (வெற்றிலை) பஜ்ஜி


பீட்டல் லீவ்ஸ் (வெற்றிலை) பஜ்ஜி

*தேவையானவை:*

பீட்டல் லீவ்ஸ் (காம்புடன் கூடிய வெற்றிலை) - 12
கடலை மாவு - கால் கிலோ
பேக்கிங் சோடா சிறிதளவு
எண்ணெய் - 1 லிட்டர்
மிளகாய்த்தூள் - 20 கிராம்
உப்பு - தேவையான அளவு
ஓமம் - 10 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - சிறிதளவு

*செய்முறை:*

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பேக்கிங் சோடா, மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, ஓமம், தேவையான அளவு தண்ணீர் விட்டு, வழக்கமான பஜ்ஜி மாவை விட குறைவான அளவு தண்ணீர் இருக்குமாறு கரைத்து வைக்கவும்.

 வெற்றிலைகளைக் கழுவி ஈரம் போகத் துடைத்து வைக்கவும்.

 அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெற்றிலையை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து, எண்ணெயில் போட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

 பஜ்ஜியை ஒரு பேப்பர் டவலில் வைத்து, அதிகப்படியான எண்ணெய் போன பின்பு பரிமாறவும்.

புதன், 21 ஜூன், 2017

தயிர் இட்லி



தயிர் இட்லி


*தேவையானவை:*

இட்லி மாவு - 2 கப்,
புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன்,

ஓமப்பொடி - 3 டீஸ்பூன்,
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
மல்லித்தழை - சிறிதளவு.

*அரைக்க:*

தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
முந்திரிப்பருப்பு - 6.

*தாளிக்க:*

கடுகு - அரை டீஸ்பூன்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

*செய்முறை:*

மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.
அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள்.

பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம். அல்லது வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம். இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.

உருளைகிழங்கு காளிஃபிளவர் பொரியல்..



உருளைகிழங்கு காளிஃபிளவர் பொரியல்..


*தேவையானவை*

உருளைகிழங்கு -2
காலிஃபிளவர் -சிறிது
வெங்காயம் -1
இஞ்சிபூண்டு விழுது -1/2ஸ்பூன்
தக்காளி -1
கறிமசால்தூள் -2ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணை -2ஸ்பூன்
பட்டை,கிராம்பு,ஏலக்காய் -1
கொத்தமல்லிதழை -சிறிது

*செய்முறை*

உருளைகிழங்கை வேகவைத்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.

காலிஃபிளவரை சுத்தம்செய்து சுடுதண்ணீரில் 5நிமிடம் போட்டு எடுக்கவும்.
வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சிபூண்டு விழுது போட்டு வதக்கவும்.


தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள்தூள்,கறிமசால்தூள் சேர்த்து வதக்கி உருளைகிழங்கு,காலிஃபிளவர் போட்டு பிரட்டி,உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும்.

தண்ணீர் சுண்டியவுடன் கொத்தமல்லிதூவி இறக்கவும்
சப்பாத்தி,பரோட்டாவுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

வெள்ளரி சாதம்



வெள்ளரி சாதம்

*தேவையானவை:*

பச்சரிசி  ஒரு கப்,
வெள்ளரித் துருவல்  அரை கப்,

பச்சை மிளகாய்  4,
இஞ்சி  ஒரு துண்டு,
எலுமிச்சம்பழச் சாறு  ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
பெருங்காயத்தூள்  அரை டீஸ்பூன்,
உப்பு  தேவையான அளவு,
கறிவேப்பிலை  சிறிதளவு.

*தாளிக்க:*

கடுகு, உளுத்தம்பருப்பு  தலா அரை டீஸ்பூன்,
நெய்  ஒரு டேபிள்ஸ்பூன்.

*செய்முறை:*

அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.

பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள்.

நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து, வெள்ளரி துருவலையும் உப்பையும் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி இறக்குங்கள்.

அந்தக் கலவையுடன் சாதம், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துக் கிளறிப் பரிமாறுங்கள்.

கோவை மதுக்கரை மிளகு சிக்கன் வறுவல்...



கோவை மதுக்கரை மிளகு சிக்கன் வறுவல்...

*தேவையான பொருட்கள்:*

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளுகுத்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
தாளிக்க
பட்டை – 3 துண்டு
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
பிரியாணி இலை - 1
கருவேப்பிலை – சிறிது
சோம்பு – 1 தேக்கரண்டி

*செய்முறை :*

1.சிக்கனில் 1 மேசைக்கரண்டி மிளகாய்த்தூள், 1 தேக்கரண்டி மஞ்சள்தூள், பாதி இஞ்சி, பூண்டு விழுது, பாதி உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

2.கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு செய்து, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

3.பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

4.மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5.பின் தக்காளி சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும். பின் மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

6.பின் 1 /4 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

7.எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது, சிக்கன் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

8.மீதமுள்ள உப்பு சேர்த்து மூடி போட்டு 8 – 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

9.சிக்கன் வெந்தவுடன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, இறக்கவும்.

10.கடைசியாக எலுமிச்சம்பழ சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.

திங்கள், 19 ஜூன், 2017

முருங்கையை சேர்ப்போம் முன்னூறு நோய்களை விரட்டுவோம் !!



முருங்கையை சேர்ப்போம் முன்னூறு நோய்களை விரட்டுவோம் !!

முருங்கைக்கீரை:

முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக
நிரூபிக்கப்பட்டுள்ளது.

மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும்.  ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமைக்கலாம்.

வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சேர்த்து வந்தாலே குடும்ப ஆரேக்கியம் மேம்படும்.

மருத்துவக் குணங்கள்

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.

நீரிழிவுக்காரர்களுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இல்லை என்கிறார்கள். குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது முருங்கை.

சைவ உணவுக்காரர்களுக்கு சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவுத் துறை நிபுணர்கள், இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். முருங்கையின் மூலம் கிடைக்கிற புரதமானது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய
புரதத்துக்கு இணையானது.

மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இறைச்சியில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு எகிறும்.

குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுண்டு. முருங்கைப்பூவை பொடிமாஸ் மாதிரி செய்து சாப்பிடலாம். அரைவேக்காடு வேக வைத்த பாசிப்பருப்புடன், முருங்கைப்பூவையும் பொடியாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது குழந்தையின்மைப் பிரச்னை தீர உதவும். கர்ப்பப்பைகோளாறுகளை சரி செய்யும்.

ஒரே ஒரு கைப்பிடி பருப்பு சேர்த்து வைக்கிற தண்ணி சாம்பாரில், கொதிக்கும் போது நான்கைந்து கொத்து முருங்கைக்கீரையை அப்படியே கொத்தாகச் சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு அந்தக் கொத்தை அப்படியே எடுத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட,  நுரையீரலில் கட்டிக் கொண்ட கபத்தை வெளியேற்றும். அடிக்கடி சளி, இருமல், அலர்ஜியால் அவதிப் படுவோருக்கும் இது அருமையான மருந்து.

தினமும் சாப்பிட வேண்டிய அளவு
பெண்கள்    100 கிராம்
ஆண்கள்    40 கிராம்
10 வயதுக்கு மேலான குழந்தைகள்    50 கிராம்

முருங்கைச் சத்து முழுமையானது!

முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் சியும், வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4  மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம். மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

முருங்கைக்கீரை சூப்

என்னென்ன தேவை?

முருங்கைக்கீரை (இளம் காம்புடன் சேர்த்து) - 2 கப், பூண்டு- 5பல், சாம்பார் வெங்காயம் - 6, மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, மிளகு - 1 டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், உப்பு- தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

உப்பு தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு, குக்கரில் 1 விசில் வைக்கவும். ஆறியதும் மிக்சியில் அரைத்து, கீரை வடிகட்டியில் வடிகட்டி உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

வாரத்துக்கு 3 முறை என 6 வாரங்கள் எடுத்துக் கொண்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்  (காலை வேளை). இதில் பால் சேர்க்கக்கூடாது. அதில் கால்சியம் இருப்பதால் கீரையில் உள்ள இரும்பை முறித்து விடும்.

எப்படி சமைக்கக்கூடாது?

முருங்கைக்கீரையின் சத்துகள் முழுமையாகக் கிடைக்க  கீரையை நீண்ட நேரம் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் சமைப்பதால் பார்வைத்திறனுக்கு உதவக்கூடிய கரோட்டின் சிதைந்து விடும். முருங்கைக்கீரையை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

முருங்கைக்கீரை கூட்டு

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு-  1 கப், முருங்கைக்கீரை - 2 கப், பூண்டு - 5 பல், சீரகம் - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் (கீறியது) - 3, உப்பு, மஞ்சள் தூள்- சிறிதளவு.

தாளிக்க...

கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பு, பூண்டு, பச்சைமிளகாய், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். முக்கால் பாகம் வெந்ததும் அலசி வைத்துள்ள கீரையை அதில் சேர்க்கவும். 10 நிமிடங்கள் வேக வைத்து, இறக்கி, உப்பு சேர்த்து தாளித்துக் கொட்டவும்.

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு - 2 கப், இஞ்சி- 1 துண்டு, பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 1 கப், முருங்கைக்கீரை - 1 கப், பச்சை மிளகாய் - 3, கடூகு, சீரகம், கடலைப்பருப்பு - தாளிக்க, எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பையும் பச்சை மிளகாயையும், இஞ்சி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, வெங்காயம் தாளித்து, அலசி வைத்துள்ள முருங்கைக்கீரை சேர்த்து ஒரே ஒரு முறை வதக்கி, அரைத்த விழுதுடன் சேர்த்து, உப்பு சேர்த்து சின்ன அடைகளாக ஊற்றி  சூடாக சாப்பிடவும். காலை மற்றும் மாலை உணவுக்கு ஏற்றது. இரவு உணவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம். செரிமானமாவதில் சிரமம் இருக்கும்.

என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)

ஆற்றல்    64 கிலோ
கலோரிகள்
கால்சியம்    185 மி.கி.
பாஸ்பரஸ்    112 மி.கி.
இரும்பு    4 மி.கி.
புரதம்     9.40 கிராம்
கொழுப்பு    1.40 கிராம்
நார்ச்சத்து    2 கிராம்
தண்ணீர்    78.66 கிராம்

முருங்கைக்கீரை கூட்டு / மிளகூட்டல்

 தேவையான பொருட்கள்;-
முருங்கைக்கீரை - 3 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க :
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு,உ.பருப்பு - தலா அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1

வறுத்து அரைக்க:
லேசாக வெதுப்பிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றல் - 1
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மணம் வர வறுக்கவும்.அத்துடன்
தேங்காய்த்துருவல்  - 3 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5

சேர்த்து அரைக்கவும்.

 தேவைக்கு தண்ணீர் சிறிது சேர்த்து அரைத்து எடுக்கவும்.

செய்முறை:
கீரையை உருவி நன்கு அலசி தண்ணீர் வடித்து எடுக்கவும்.

 ஊற வைத்த பாசிப்பருப்பை தேவைக்கு தண்ணீர் மஞ்சள் தூள் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சூடு செய்யவும்.

 கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல் கிள்ளி போடவும்.

 கீரை சேர்த்து வதக்கவும்.

 அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.

ஒன்று சேர்ந்து சிறிது வேக விடவும்.கீரையை திறந்தே சமைக்கவும்.நிறம் மாறாமல் இருக்கும்.

பின்பு வேக வைத்த பருப்பு சேர்க்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

 தேவைக்கு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

சுவையான கீரை கூட்டு அல்லது மிளகூட்டல் ரெடி.

வெறும் சோற்றில் பிரட்டியோ தொட்டுக் கொண்டு சாப்பிடவோ சூப்பராக இருக்கும்.நீங்களும் செய்து பாருங்க.

வாழைப்பூ---முருங்கைக்கீரை துவட்டல்

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வாழைப்பூ --ஒரு கப்
முருங்கைக்கீரை ---ஒரு கப்
தேங்காய்த்துருவல்---ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் --ஒரு டீஸ்பூன்
கடுகு --  கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு--தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் ---1
பெருங்காயத்தூள்---கால் டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு

செய்முறை :

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காய்த்தூள், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, அதில் முருங்கைக்கீரை நன்றாக அலசி போடவும், வாழைப்பூ சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடியவிடவும், தண்ணீர் வடிந்தது, அதை வதங்கிக் கொண்டிருக்கும் முருங்கைக்கீரையுடன் போடவும், சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, கடைசியாக தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி இறக்கவும்.

வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்... பிரண்டை!



வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்... பிரண்டை!

பி ரண்டை... சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை... என பல வகைப்படும். இதற்கு, `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு. `Cissus quadrangularis’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இது, கொடி வகையைச் சேர்ந்தது.
இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது. இதன் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.

அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.
எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.
மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும். மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டத்தின் வேகம் குறையும். இதனால் இதயத்துக்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்பட்டு, இதய வால்வுகள் பாதிப்படையும். இந்த பாதிப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும்; இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து.
எலும்பு முறிவு ஏற்பட்டால், இதன் துவையலைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம். இளம் தண்டுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்து, நன்றாகக் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப் போடுவதன் (பாதிக்கப்பட்ட இடத்தில் பூசுவது) மூலம் பலன் கிடைக்கும். எலும்பு முறிவு மட்டுமல்லாமல், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வலி உள்ள இடங்களிலும் இதைப் பூசிவர நிவாரணம் கிடைக்கும்.


துவையல்
பிரண்டைத் தண்டுகளின் மேல் தோலை அகற்ற்றி, அதில் உள்ள நாரையும் அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்க வேண்டும். அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். சுவைக்காக தேங்காய், உளுந்து சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்த துவையலை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
இலைத் துவையல்
பிரண்டையின் இலையிலும் துவையல் செய்யலாம். இதைச் சாப்பிட்டு வருவதால் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும்.
இலை 100 கிராம், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு - 3 பல், மிளகு - 5, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் மஞ்சள், உப்பு ஆகியவை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். முதலில் இஞ்சி, பூண்டு, மிளகு, காய்ந்த மிளகாய், மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பிரண்டை இலை, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டு வதக்கி, ஏற்கெனவே அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்தால் துவையல் தயார்.

வற்றல்
நன்கு முற்றிய இதன் தண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி, மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊறவைத்து உலர்த்தி வற்றலாக்க வேண்டும். அந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் பசியின்மை, நாக்குச் சுவையின்மை போன்றவை குணமாகும்.
பிரண்டை உப்பு
பிரண்டையை உலர்த்தி எடுத்து தீயில் எரித்துச் சாம்பலாக்க வேண்டும். அப்படிக் கிடைக்கும் ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து, வடிகட்டி, அரை நாள் தெளியவைக்க வேண்டும். அப்படி தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 முதல் 10 நாள்கள் வெயிலில் உலரவைக்க வேண்டும். நீர் முழுவதும் வற்றி உலர்ந்த பிறகு கீழே படிந்திருக்கும் உப்பைச் சேகரித்து வைக்கவும்.
பிரண்டை உப்பில் 2 முதல் 3 கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன் பால் சேர்த்துச் சாப்பிட 2 மாதத்தில் உடல்பருமன் குறைந்து, ஊளைச் சதையும் குறையும்.
2 கிராம் பிரண்டை உப்புடன் ஜாதிக்காய்த்தூள் 5 கிராம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், ஆண்மைக்கோளாறு பிரச்னை தீரும். வீரியம் பெருகும்; உடல் வலிமை பெறும்.
வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு வெடிப்பு போன்ற பிரச்னைகளுக்கு 2 கிராம் வெண்ணெயுடன் இந்த உப்பைக் கலந்து இரண்டு தடவை கொடுத்தால், மூன்று நாளில் குணமாகும்.
நன்றி விகடன்.

புதன், 14 ஜூன், 2017

30 வகை கேரள சமையல் !




30 வகை கேரள சமையல் !



கேரளா என்றாலே பசுமை போர்த்திய மலைப் பிரதேசங்களுடன் நேந்திரம்  சிப்ஸ் உள்ளிட்ட ஸ்பெஷல் உணவுகளும் கண்முன்னே வந்து நிற்கும். அந்த அளவுக்கு உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது கேரளா. அவற்றிலிருந்து 30 அயிட்டங் களை 'கேரளா சமையல்’ என இந்த இணைப்பிதழில் செய்து காட்டி அசத்து கிறார், சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.
 ''அடைப் பிரதமன், ஓலன், எரிசேரி, உண்ணியப்பம், நேந்திரம் பழ சாண்ட்விச் என்று வரிசை கட்டி நிற்கும் இந்த ரெசிபிகள் வழக்கமான சமையலில் இருந்து ஒரு 'சேஞ்ச்’ தருவதுடன், 'சமையல் ஸ்டார்’ என்ற பெருமையையும் உங்களுக்குப் பெற்றுத் தரும்'' என்று என்கரேஜ் செய்யும் தீபாவின் ரெசிபி களை... கலை நயம் மிளிர அலங்கரித் திருக்கிறார் செஃப் ரஜினி.
அடைப் பிரதமன்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், வெல்லம் - 100 கிராம், தேங்காய் - ஒன்று, முந்திரி, திராட்சை - தலா 10, ஏலக்காய்த் தூள் - ஒரு சிட்டிகை, நெய் - தேவையான அளவு, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: தேங்காயை அரைத்து பால் எடுக்கவும். பச்சரிசியை ஊற வைத்து நைஸாக அரைக்கவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி பச்சரிசி மாவை ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின்பு சிறு சிறு துண்டு களாக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டவும். அடிகன மான ஒரு பாத்திரத்தில் அடை துண்டுகளுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு வெல்லக் கரைசல், ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். பிறகு, தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகவும். கேரளாவின் பாரம்பரியமான டிஷ் இது!
நேந்திரம் பழ ஜாம்
தேவையானவை: நன்கு கனிந்த நேந்திரம் பழம் -  இரண்டு, வெல்லம் - ஒரு கப், நெய் -  கால் கப்.
செய்முறை: நேந்திரம் பழத்தை தோல் நீக்கி, மிக்ஸியில் அரைத்து ஒரு கப் அளவுக்கு விழுதாக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அடிகனமான ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். அரைத்த நேந்திரம் பழ விழுது, நெய் சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்கவும்.
குறிப்பு: இந்த ஜாமுடன் தேங்காய்ப் பால் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்க... பாயசம் ரெடி! பலாச் சுளையிலும் இதே முறையில் செய்யலாம்.
பரங்கி  பூசணி புளிப் பச்சடி
தேவையானவை: பரங்கி - ஒரு   கீற்று, பூசணி - ஒரு கீற்று, புளி - நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்), வெல்லம் - சிறிதளவு, தேங்காய் துருவல் - கால் கப். பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்), தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பரங்கி, பூசணியை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பிறகு புளிக்கரைசல்  விட்டு கொதிக்கவிடவும். இதில்  உப்பு, வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.
 இஞ்சி தயிர் பச்சடி
தேவையானவை: தயிர் - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 10, கடுகு, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
 
செய்முறை: வெங்காயத்தை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி சிறிய துண்டுகளாக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை தயிருடன் கலக்கி உப்பு சேர்க்கவும். சிறிதளவு எண்ணெயை காய வைத்து... கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
 பொடித்தூவல்
தேவையானவை: புடலங்காய் (சிறியது) - ஒன்று, மிளகாய் வற்றல் - 2, கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புடலங்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்து, வேக வைத்த புடலங்காயை சேர்த்துக் கிளறி... உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். கடைசியாக, பொடித்து வைத் திருக்கும் தேங்காய் - மிளகாய் பொடியை மேலே தூவி புரட்டி இறக்கவும்.
பலாப்பழ வறுவல்
தேவையானவை: பலாச்சுளை - 10,  எண் ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு.
செய்முறை: பலாச் சுளை சற்று காயாக இருக்கும்படி எடுத்துக் கொண்டு, கொட்டை களை நீக்கி, நீளவாக்கில் மெல்லிய குச்சி போல நறுக்கவும். எண் ணெயை காய வைத்து பலாச்சுளைகளை நன்கு வறுத்து எடுத்து உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கி வைக்கவும்.
நேந்திரங்காய் தோல் கறி
தேவையானவை: நேந்திரங்காய் - 2, தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - 4, புளி - நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்), எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு - தாளிக்க தேவையான அளவு, உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு,
செய்முறை: நேந்திரங்காயின் தோலை சிறிதளவு சதைப் பற்றோடு சீவி எடுத்து பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும். சீவிய நேந்திரங்காய் தோலுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். பிறகு புளிக் கரைசல், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு, அரைத்த தேங்காய், பச்சை மிளகாய் விழுது சேர்த்து கெட்டியான பிறகு இறக்கவும். அத்துடன் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: மீதமுள்ள சதைப்பற்றை வெயிலில் காய வைத்து கஞ்சி செய்ய பயன்படுத்தலாம்.
பச்சரிசி  பருப்பு லாடு
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், பொடித்த வெல்லம் - அரை கப், நெய் - கால் கப், சுக்குப்பொடி - தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி, பாசிப்பருப்பை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் சற்று கொர கொரப்பாக பொடிக்க வும். வெல்லத்தை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கரைத்து வடி கட்டவும். பின் பாகு காய்ச்சவும் (பாகை தண்ணீரில் போட்டால் கரையக் கூடாது). இதனுடன் சுக்குப்பொடி, நெய், தேங்காய் துருவல், வறுத்து அரைத்து வைத்திருக்கும் பொடி சேர்த்துக் கிளறி இறக்கி, சூடாக இருக்கும்போதே சிறிதளவு நெய்யை கையில் தடவிக் கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
குறிப்பு: தேங்காயை சிறுசிறு துண்டுகளாக்கியும் இதில் சேர்க்கலாம்
கப்பங்கிழங்கு ஸ்வீட் சிப்ஸ்
தேவையானவை: கப்பங்கிழங்கு (மரவள்ளிக் கிழங்கு) - ஒன்று, சுக்குப் பொடி - ஒரு சிட்டிகை, பொடித்த வெல்லம் - ஒரு கப், நெய் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: கப்பங்கிழங்கின் தோலை சீவிவிட்டு. சிப்ஸ் கட்டையில் சீவி நிழலில் உலர்த்தவும். எண் ணெயை காய வைத்து, உலர்த்திய கிழங்கு வில்லைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி... அதில் நெய், சுக்குப்பொடி சேர்த்து பாகு தயாரித்து, பொரித்த சிப்ஸ்களை போட்டு பக்குவமாகப் புரட்டி எடுத்தால்... ஸ்வீட் சிப்ஸ் ரெடி!
தக்காளி குழம்பு
தேவையானவை: தக்காளி - 4, வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, பூண்டுப் பல் - 6, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள், எண்ணெய், கடுகு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பூண் டின் தோலை உரித்து தட்ட வும். கடாயில் எண்ணெயை காய விட்டு கடுகு தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உரித்த பூண்டு சேர்த்து வதக்கி,     மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டு புரட்டி ஒரு கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
கேரள உண்ணியப்பம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், வாழைப்பழம் - ஒன்று, வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய் துண்டுகள் - தேவையான அளவு, நெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசியை சுத்தம் செய்து மாவாக அரைக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி, பச்சரிசி மாவுடன் சேர்த்து... ஏலக் காய்த்தூள், பிசைந்த வாழைப்பழம் சேர்க்கவும். இதில் தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கலந்து கரைத்து வைக்கவும். நெய்யை காய வைத்து கரைத்த மாவை சிறு சிறு அப்பங்களாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: குழிப்பணியாரக் கல்லிலும் நெய் விட்டு மாவை அப்பங்களாக சுட்டு எடுக்கலாம்.
சேனை பிரட்டி
தேவையானவை: சேனைக்கிழங்கு - கால் கிலோ,  மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு.
செய்முறை: சேனைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும். வெந்த பின்பு இறக்கி நீரை வடிய வைத்து எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, வேக வைத்த சேனையை சேர்த்து, மிளகுத்தூள் தூவிக் கிளறி இறக்கவும்.
மைதா  எள் பிஸ்கெட்
தேவையானவை: மைதா - ஒரு கப், எள் - ஒரு டீஸ்பூன்,  எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவை ஆவியில் வேகவிடவும், வேக வைத்த மாவுடன் உப்பு, வெண்ணெய், எள் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும். பிசைந்த மாவை சிறிய அப்பளமாக இட்டு, விரும்பிய வடிவில் வெட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பலாக்கொட்டை  கத்திரி கூட்டு
தேவையானவை: கத்திரிக்காய் - 100 கிராம், பலாக்கொட்டை - 10, தேங்காய் - ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்), பூண்டு - 4 பல்,  மிளகாய் வற்றல் - 4, தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காயை கழுவி பொடியாக நறுக்கவும். பலாக்கொட்டையையும் கத்திரியையும் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தேங்காய் துருவலுடன் மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து அரைத்து, காயுடன் சேர்த்து  கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். கடாயில் தேங்காய் எண் ணெயை காய வைத்து... கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு: கத்திரிக்கு பதிலாக கோவைக்காயிலும் இதை செய்யலாம்.
நேந்திரம் பழ சாண்ட்விட்ச்
தேவையானவை: நேந்திரம் பழம் - ஒன்று, பொடித்த வெல்லம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். இதனுடன் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து பூரணம் போல சுருள கிளறி இறக்கவும். நேந்திரம் பழத்தின் தோலை நீக்கி நீளவாக்கில் இரண்டாக வெட்டவும். ஒரு பாதியின் மீது பூரணத்தை தடவி, மேலே இன்னொரு பாதியை வைத்து மூடி சாண்ட்விச் போல பரிமாறவும்.
மைதா பக்கோடா
தேவையானவை: மைதா - ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு - தலா அரை கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4 (பொடியாக, நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் - ஒன்று நறுக்கவும்), இஞ்சி - சிறு துண்டு (துருவிக் கொள்ள வும்), எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவை ஆவியில் வேகவிடவும். இதனுடன் கடலை மாவு அரிசி மாவு, இஞ்சித் துருவல், உப்பு, வெண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் பிசிறவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, பிசிறிய மாவில் இருந்து சிறிது சிறிதாக எடுத்து பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.
ஓலன்
தேவையானவை: பரங்கிக்காய், பூசணிக்காய் - தலா ஒரு கீற்று, தேங்காய்ப் பால் - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பரங்கி, பூசணியின் தோலை சீவி வில்லைகளாக்கி,  பச்சை மிளகாயைக் கீறி அதனுடன் சேர்த்து வேகவிடவும். இதனுடன் தேங்காய் எண்ணெய், உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்து, மிதமான சூட்டில் ஒரு கொதி விட்டு இறக்கவும்.
அவல் உப்புமா
தேவையானவை: அவல் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் - கால் கப், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: அவலை களைந்து ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்துக் கிளறவும். இதனுடன் ஊற வைத்த அவல், தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து கிளறி இறக்கி, சூடாக பரிமாறவும்.
 புளிசேரி
தேவையானவை: வெள்ளரிக்காய் - ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு மூடி, பச்சை மிளகாய் - 4, சீரகம் - ஒரு டீஸ்பூன், மோர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெள்ளரிக்காயை தோல் சீவி, துண்டுகளாக்கி வேகவிடவும். தேங்காய் துருவலுடன் சீரகம், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். வேக வைத்த காயுடன் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, மோருடன் கலந்தால்... புளிசேரி தயார்!
நேந்திரம் பழ பர்ஃபி
தேவையானவை: நேந்திரம் பழ விழுது -  ஒரு கப், பால் - அரை கப், தேங்காய் துருவல் - அரை கப், சர்க்கரை - ஒரு கப், நெய் - கால் கப்.
செய்முறை: தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். பாலைக் காய்ச்சி ஆறவிடவும். சர்க்கரையை கம்பி பாகு பதமாக காய்ச்சி... பால், தேங்காய் துருவல், நெய், நேந்திரம் பழ விழுது சேர்த்துக் கிளறவும். கெட்டியானவுடன் இறக்கி, தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.
பூசணி கூட்டான்
தேவையானவை: பூசணிக்காய் - 100 கிராம், வாழைக்காய் - ஒன்று, தேங்காய் துருவல் - அரை கப், புளிப்புத் தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, கடுகு, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளை தோல் சீவி பொடியாக நறுக்கி வேகவிடவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். வேக வைத்த காய்கறியுடன் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, கடைந்த தயிரை சேர்த்து நுரை வந்தவுடன் இறக்கிவிடவும். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.
வெஜ் தீயல்
தேவையானவை: முருங்கைக்காய், கத்திரிக்காய், தக்காளி - தலா ஒன்று, தேங்காய் - ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்), தனியா -  ஒரு டீஸ்பூன், வெந்தயம் - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, மிளகு - 4, புளி - நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்), வெல்லம் - சிறிதளவு, மிளகாய் வற்றல் - 4, உப்பு,  மஞ்சள்தூள், கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை: முருங்கை, கத்திரியை சுத்தம் செய்து துண்டுகளாக்கி தண்ணீரில் போடவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். மிளகாய் வற்றல், தனியா, வெந்தயம், மிளகு ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய காய்கள், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், புளிக் கரைசல், வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும், பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா சேர்த்து கொதி விட்டு இறக்கி, சாதத்துடன் பரிமாறலாம்.
பழம் பொரிச்சது
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், நேந்திரம் பழம் (முழுக்க கனியாதது)  - ஒன்று,  சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, சீரகம், உப்பு - சிறிதளவு.
செய்முறை: நேந்திரம் பழத்தை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கவும். மைதா மாவை சலித்து உப்பு, சீரகம், சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். எண்ணெயை காய வைத்து, கரைத்து வைத்துள்ள கலவையில் நறுக்கிய பழத் துண்டுகளைத் தோய்த்து பொரித்து எடுக்கவும்.
அரிசி அடை
தேவையானவை: இட்லி அரிசி - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப்,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இட்லி அரிசியை ஊற வைத்து அரைத்து... உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கி வைக்கவும். சிறிது நேரம் கழித்து, மாவை அடைகளாக தோசைக் கல்லில் வார்த்து, எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
மயப்போளி (வடை)
தேவையானவை: பச்சரிசி, துவரம்பருப்பு - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, மிளகாய் வற்றல் - 4, உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை - தேவையான அளவு,
செய்முறை: அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாக ஊற வைத்து மிளகாய் வற்றல் சேர்த்து கெட்டியாக அரைத்து... உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து வைக்கவும். மாவை சிறு உருண்டைகளாக செய்து ஈரத்துணியில் (அ) வாழை இலையில் தட்டி, காயும் தேங்காய் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பிளாக் டீ
தேவையானவை: டீத்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - ஒரு கப்
செய்முறை: டீத்தூளில் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டவும். சர்க்கரை, எலுமிச்சைச் சாறு கலந்து பருகவும்.
குறிப்பு: பிரியாணி சாப்பிட்ட பின்பு இந்த டீயை பருகு வது வழக்கம்.
வெஜ் மொள பூஷியம்
தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். மிளகு, சீரகத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வேக வைத்த காயுடன் சேர்க்கவும். உப்பு போட்டு கிளறவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும.
எரிசேரி
தேவையானவை: வாழைக்காய் - ஒன்று, சேனைக் கிழங்கு - 100 கிராம், மிளகு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு மூடி, அரிசி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேனைக்கிழங்கைத் தோல் சீவி துண்டுகளாக்கி வேகவிடவும். இதனுடன், தோல் சீவி, நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை சேர்த்து ஒரு கொதிவிட்டு... உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தேங்காய் துருவலுடன் மிளகு, அரிசி சேர்த்து அரைத்து, காயுடன் கலந்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால்... எரிசேரி தயார்!
 நேந்திரங்காய் கஞ்சி
தேவையானவை: நேந்திரங்காய் - ஒன்று, பால் - அரை கப், சர்க்கரை - 4 டீஸ்பூன்.
செய்முறை: நேந்திரங்காயை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். தேவையானபோது சிறிதளவு காய்ந்த துண்டுகளை மிக்ஸியில் பொடிக்கவும். இதனுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு நன்கு வேகவிட்டு காய்ச்சிய பால் சேர்த்து இறக்கி, சர்க்கரை போட்டு கலந்து... கெட்டியாகவோ, நீர்க்கவோ அருந்தலாம்.
மைதா  மோர் தோசை
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், மோர் - கால் கப், சீரகம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா, அரிசி மாவுடன் உப்பு, சீரகம், மோர், தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். தோசைக் கல்லை காய வைத்து, மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து, முறுகலாக எடுக்கவும்.  
நன்றி -விகடன்