வெள்ளி, 22 டிசம்பர், 2017

பல தொற்றா நோய்களுக்கு கதவு திறக்கும் பரோட்டா கவனம்!


பல தொற்றா நோய்களுக்கு கதவு திறக்கும் பரோட்டா கவனம்!


தென் இந்தியாவை மட்டும் எடுத்துக்கொள்வோம் எத்தனை வகை பரோட்டாக்கள்! மைதாவின் ஆதாரத்தால் பிறந்த பரோட்டாக்களின் பரம்பரை வழிவந்த மெலிதான வீச்சு பரோட்டா, சிதைந்து காட்சித் தரும் கொத்துப் பரோட்டா, முட்டை பரப்பிய முட்டை பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிதான மலபார் பரோட்டா… எனப் பல வகைகள். அப்படியே கொஞ்சம் தெற்குப் பக்கமாக இந்திய வரைபடத்தில் சரிந்தால், `இலங்கை பரோட்டா’ என்று மற்றொரு வகை. இன்னும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப சில பெயர்களில் பரோட்டாக்கள் வலம்வருகின்றன. மேலே குறிப்பிட்ட அனைத்து வகைகளும் ஒரே உணவகத்தில் கிடைக்கும் அளவுக்கு பரோட்டாக்கள் பிரபலமடைந்திருக்கின்றன.

*மவுசு!*

எந்த உணவகத்துக்குச் சென்றாலும், பரோட்டாவின் பெயரை உச்சரிக்காத ஹோட்டல் சர்வர்கள் இருக்க மாட்டார்கள். அவர்கள் வாயிலிருந்து தன்னிச்சையாக வெளிவரும் வார்த்தை அதுவாகத்தான் இருக்கும். ஜி.ஸ்.டி இல்லாத சிறிய ரோட்டோரக் கடைகள் முதல் ஜி.ஸ்.டி வரி விதிக்கப்படும் ஹோட்டல்கள் வரை, அனைத்திலும் மெனுக்களிலும் இதற்கு தனித்துவமான ஓர் இடம் நிச்சயம் உண்டு. வரி இருக்கிறதோ, இல்லையோ இவற்றின் விற்பனையில் குறைவிருக்காது. பரோட்டா சுவைக்கு மயங்காதவர்கள் எவருமில்லை; அனைவருக்கும் பிடித்த ரெசிப்பியும்கூட. காலை, மாலை, இரவு என முப்பொழுதும் பல கடைகளில் இவை கிடைக்கும். காரணம் இவற்றின் மீது நம் மக்களுக்கு இருக்கும் தீராத மோகம்.

சரி… இதன் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசிவிட்டோம். தொடர்ந்து இதைப் பிரதான உணவாக நமது மெனுவில் சேர்த்துக்கொண்டால் உண்டாகும் பிரச்னைகள் என்னென்ன… சால்னா கலந்த பரோட்டாவின் சுவையை உணரும் நாம், அதன் அடிப்படையான மைதாவின் ஆபத்துகளை உணர்ந்திருக்கிறோமா… மைதாவால் தயாரிக்கப்படும் உணவுகள் உண்டாக்கும் விளைவுகளை அறிந்துவைத்திருக்கிறோமா?

*மைதா*

கேக், நாண், பிஸ்கட், ரொட்டி வகைகள், சிற்றுண்டிகள், பிரதான உணவுகள்… என அனைத்திலும் இன்றைக்கு மைதாவின் ஆதிக்கம் இருக்கிறது. `கோதுமையில் இருக்கும் நுண்ணூட்டச் சத்துகள் அனைத்தும் நீக்கப்பட்டு, வியாபார கட்டாயத்தினால் மங்கிய நிறத்தை வெண்மையாக்க ரசாயனத் தாக்குதலால் ’பிளீச்’ செய்யப்பட்டு, இறுதியில் வெண்மையாக வெள்ளந்தியாகக் காட்சியளிக்கும் மைதாவால், உடலுக்கு உண்டாகும் ஆபத்துகள் மிக அதிகம்’ என எச்சரிக்கிறது மருத்துவ உலகம். மைதா என்பது இயற்கையாக, கோதுமையிலிருந்து உருவாக்கப்படும் மாவு அல்ல. செயற்கையாக, கோதுமையில் பலவிதமான ரசாயனத் தாக்குதல்களை நடத்தி உருவாக்கப்படும் மெல்லிய மாவு. இதை பிளீச் செய்யப் பயன்படும் ரசாயனம் பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl peroxide).

சர்க்கரைநோய்… கவனம்!

மைதா சேர்த்த உணவுகளுக்கு கிளைசெமிக் அளவீடு (Glycemic index) அதிகம். அதாவது, சாப்பிட்டவுடன், விரைவில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தடை விதிக்கவேண்டிய முக்கிய உணவு பரோட்டா. மைதாவைப் பட்டுப்போல மென்மையாக்க பயன்படும் `அல்லோக்ஸான்’ (Alloxan) எனும் வேதிப்பொருள், நேரடியாக கணையத்தைத் (Pancreas) தாக்கி, சர்க்கரைநோயை உண்டாக்கலாம் என்பது அண்மைக் காலமாக பொதுவெளியில் உள்ள கருத்து. சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் திறனை ஆய்வு செய்வதற்காக, ஆய்வக விலங்குகளில் செயற்கையாக சர்க்கரைநோயை உண்டாக்கப் பயன்படும் பொருள்தான் அல்லோக்ஸான். ஆக, மைதாவின் துணையோடு செய்யப்படும் பரோட்டாக்களை அதிகளவில் சாப்பிட்டுவந்தால், சர்க்கரைநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

தொற்றா நோய்கள்

இன்றைக்கு சர்க்கரைநோய், உடல் பருமன் போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்திருப்பதற்கு, பல்வேறு காரணங்களோடு, பரோட்டாவையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். சத்துகள் ஏதுமில்லாத, வெற்று கலோரிகளை மட்டுமே கொடுக்கும் மைதாவின் குழந்தையான பரோட்டா, உடல் எடையைக் கூட்டும். அதுவும் குழந்தைப் பருவம் முதலே பரோட்டாவுக்கு ரசிகராக இருப்பவர்களுக்கு இள வயது உடல் பருமன் நிச்சயம். எண்ணெயில் பொரித்த மைதா சார்ந்த உணவுகள், கெட்டக் கொழுப்பை (LDL) அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதய நோய்களையும் உண்டாக்கலாம்.

நார்ச்சத்து இல்லாத மைதா

உடலுக்குத் தேவையான நார்ச்சத்து இல்லாமலிருப்பதாலும், மைதா சேர்த்த உணவுகளை ஆரோக்கியத்துக்கு எதிராகப் பார்க்கவேண்டியிருக்கிறது. மலச்சிக்கலை உருவாக்குவதில் மைதாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. குடல் பகுதியில் பசைபோல உருவாகி, செரிமானத்துக்குத் தடங்கலை ஏற்படுத்துவதால், மைதாவைச் செல்லமாக ’Glue of the gut’ என்று அழைக்கின்றனர். குடலின் இயக்கத்தை மந்தமாக்கி மலச்சிக்கலை உண்டாக்கும். கார சாரமான குருமாவோடு சேர்த்து மூன்று பரோட்டாக்களைச் சாப்பிட்ட பிறகு, வயிற்றுக்குள் உண்டாகும் செரிமானச் சண்டைகளை கவனித்திருக்கிறீர்களா? தவறியவர்கள் இனிமேல் கவனியுங்கள்!

மைதா உருவான பாதை

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கற்களைக் கொண்டு, கோதுமையை நசுக்கி மாவு தயாரிக்கப்பட்டதாக தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வரலாற்றுப் பாதையில் கோதுமை மாவை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உணவுகள் தயாரிக்கப்பட்டன. பின்னர் காலப்போக்கில், தொழிற்புரட்சியின் விளைவாக இயந்திரங்களின் மூலம் பெருமளவில் மாவு தயாரிக்கப்பட்டது. உணவு வகைகளும் தேவைகளும் அதிகரித்தன. ஆனால், கோதுமையின் உட்கருவில் (Wheat germ) இருந்த சில இயற்கையான பொருள்கள் காரணமாக, விரைவில் அந்த மாவு கெட்டுப்போகக் கூடியதாக இருந்தது. (உட்கருவில் எண்ணற்றச் சத்துகள் இருப்பது குறிப்பிடத்தக்கது). இது பெருமளவில் மாவைச் சேமித்துவைத்து வியாபாரம் செய்வதற்கு இடைஞ்சலாக இருந்தது. வியாபாரத்தைப் பெருக்க என்ன செய்யலாம் என்று ஒரு கூட்டம் யோசனை செய்தது.

`பல சத்துக்கள் நிறைந்த கோதுமையின் உட்கருவை நீக்கிவிட்டு, மாவாகப் பயன்படுத்தினால் நீண்ட நாள்களுக்கு கெடாமல் நிலைத்திருக்கும்’ என்ற விடை கிடைத்தது. கோதுமையின் உயிர் பறிக்கப்பட்டு, சத்தற்ற மாவாக புழக்கத்துக்கு வந்தது. பல ஆண்டுகள் கழித்து, ’கோதுமையின் உட்கருவை நீக்கும்போது, அதிலிருக்கும் வைட்டமின் பி, துத்தநாகம், செம்புச் சத்து, மக்னீசியம், மாங்கனீஸ் போன்ற பல ஊட்டங்களும் அழிந்துவிடுமே’ என்று சிலர் போர்க்கொடி தூக்கியவுடன், செயற்கையாகச் சில சத்துகள் சேர்க்கப்பட்ட மாவாக வெளிவந்தது. பின்னர் நிறத்துக்காகவும், சில பிரத்யேக உணவுகளைத் தயாரிக்கத் தேவைப்படும் மென்மைக்காகவும், ரசாயனக் குளத்தில் மூழ்கி, இப்போது வியாபாரத்தில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது, கோதுமையிலிருந்து திரிந்து வந்த மைதா! ’மண்ணின் மைந்தன்’ எனப் பெயர் சூட்டும் அளவுக்கு, பாரம்பர்ய உணவுகளின் இடத்தை நிரப்பிவிட்டன மைதா சார்ந்த தயாரிப்புகள்! இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மைதாவின் தாக்கம் அதிகரித்ததாகவும் ஒரு கருத்து உள்ளது.

பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட மைதா, நம் நாட்டில் மட்டும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறது. மேலும், மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மைதாவின் மூலம் தயாரிக்கப்படும் உணவு வகைகள் ஏராளம் இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர், கேரளாவில் பரோட்டாக்களுக்கு எதிராகச் சில சர்ச்சைகள் கிளம்பியது பலருக்கு நினைவிருக்கலாம்.

’கோதுமையை அரைத்து மாவாக்குகிறார்கள்… ஏதோ கொஞ்சம் நிறத்தை வெளுப்பாக்கித் தருகிறார்கள். அதனால் என்ன… கோதுமையில் உள்ள சத்துகள் அனைத்தும் மைதாவில் இருக்கப் போகின்றன…’ இதுதான் மைதாவைப் பற்றிய பெரும்பான்மை மக்களின் கருத்து. இப்படி மைதாவின் தயாரிப்பைப் பற்றி முழுமையான விழிப்பு உணர்வு மக்களிடையே இல்லாததையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

பரோட்டா… நாண்… என இவற்றை எப்போதாவது சாப்பிட்டால் பிரச்னை இல்லை. ஆனால், காலையில் மைதாவில் தயாரிக்கப்பட்ட டிபன்… 11 மணி அளவில் பிஸ்கட், கேக்… மதியம் சாதத்துக்குப் பதிலாக பீட்ஸா, பர்கர்… மாலையில் பானி பூரி போன்ற சாட் வகைகள்… இரவில் பிரியமான பரோட்டாக்கள்… என மைதாவின் பிடியில் இறுகிக்கிடந்தால் பாதிப்புகள் வரப்போவது உறுதி. உண்மையில், இன்றைய இளம் தலைமுறை மேற்சொன்ன உணவுப் பட்டியலில் தானே சிக்கித்தவிக்கிறது. மைதாவை கிண்ணத்தில் போட்டு, ‘நான் அப்படியே சாப்பிடுவேன்’ என்ற விளம்பரம்தான் மிச்சம். இந்த நிலை நீடித்தால், சர்க்கரை நோயின் தலைநகரம் மட்டுமல்ல, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம்… என அனைத்து தொற்றா நோய்களின் தலைநகரமாகவும் நமது தேசம் மாறக்கூடும்.


வியாழன், 21 டிசம்பர், 2017

மீன் குழம்பு



மீன் குழம்பு
                 
தேவையான பொருள்கள் :

 மீன் - 10
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிய எலுமிச்சை அளவு      
             
வறுத்து அரைக்க :

மிளகாய் வத்தல் -3
கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு-1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

தாளிக்க :

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு -1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு -1/2 தேக்கரண்டி
வெந்தயம் -1/2 தேக்கரண்டி
வெங்காயம் -1/4
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

1.முதலில் மீனை சுத்தமாக கழுவி வைக்கவும். புளியை ஒரு கப் (200மில்லி) தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்.

2.அடுப்பில் கடாயைமிதமான சூட்டில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு எல்லாவற்றையும் சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை ஆப் பண்ணவும்.

3.வறுத்த பொருள்களுடன் சீரகம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆற விடவும்.
நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.

4.அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.

5. கடுகு  வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

6.வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளித்து கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றவும்.

7.புளித் தண்ணீர் கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

8.மசாலா வாடை போனதும் மீன்களை சேர்த்து வேக விடவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணி விடவும்.

9.சுவையான  மீன் குழம்பு ரெடி.

தக்காளி மீன் வறுவல்



தக்காளி மீன் வறுவல்

 தக்காளி - 4
மீன் - 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பொடித்த சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

தக்காளியை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடித்த சோம்பு, மிளகுத்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து மீன் துண்டுகள் மீது தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகு எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

பிரகாஷ் செஃப் பெருந்துறை பாரம்பரிய ஆட்டிறைச்சி குழம்பு


பிரகாஷ் செஃப் பெருந்துறை பாரம்பரிய ஆட்டிறைச்சி குழம்பு

இந்த செஃப் எனது ஓட்டலின் மாஸ்டரே ஆகும்.

கேட்டரிங் படித்துவிட்டு எனது ஓட்டலில் உதவியாளராக வந்து சேர்ந்தார். இன்று இவருடைய சமையல் வித்தைகளுக்கு நமது நாவின் ஆனந்தமே சாட்சி.

இவர் பாரம்பரிய உணவு வகைகளை சமைப்பதில் கைத்தேர்ந்தவர்.

மண்பானையில் சமைத்தால் மட்டும் போதாது, விறகு அடுப்புல சமைத்தால் மட்டும் போதாது இன்று நிறைய உணவகங்கள் இப்படி சொல்லி தான் உங்கள் பணமூட்டைகளை திவால் ஆக்குகிறார்கள் !!!

அதற்கு இராசயானம் உணவுகள் தவிர்தல், பாக்கேட் மசாலா பொருட்கள் தவிர்த்தல், அம்மிகல் மற்றும் ஆட்டுகல் பயன்படுத்துதல் , சரியான பொருள் விகிதம், சரியான நேரத்தில் உட்பொருளை சேர்த்துதல் , அனைத்திற்கும் மேலாக ஒன்று அதுதான் கைப்பக்குவமே ஆகும் !!

மாஸ்டர் சுப்பையா நாயுடு க்கு அடுத்த படியாக மாஸ்டர் பிரகாஷ் ஐயரின் சமையல் வித்தைகளே எனது பலம் !!!

தேவையான பொருட்கள்
ஆட்டிறைச்சி முன்னங்கால் 1/2 கிலோ
திக்கான தேங்காய் பால் 1 1/2 கப்
மரசெக்கு கடலெண்ணய் 1/4 கப்
சின்ன வெங்காயம் 12 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி 2 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
கறிவேப்பில்ல ஒரு கைப்பிடி
கொத்தமல்லி இலைகள் கொஞ்சமாக

பிரிஞ்சி இலை 1
பட்டை 2 இன்ச்
குருமிளகு 1 தேக்கரதண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
கிராம்பு 4
அண்ணாச்சி மொக்கு 1

மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 2 தேக்கரண்டி
காஸ்மீரி மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 2 தேக்கரண்டி
சோம்பு தூள் 2 தேக்கரண்டி
சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1/2  தேக்கரண்டி

செய்முறை

1. ஆட்டிறைச்சியை நன்றாக சுத்தமாக ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு நன்றாக கழுவி வைத்து கொள்ள வேண்டும்.

2. இப்பொழுது பிரஷர் குக்கரில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் பிரிஞ்சி இலை, மராட்டிய மொக்கு , அண்ணாச்சி மொக்கு, பட்டை, கிராம்பு, சோம்பு, மற்றும் குரு மிளகு சேர்த்து நன்றாக மணம் வீசும் வரை வதக்கவும்.

3. அதில் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்கவும்.

4. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

5. இச்சமயத்துல அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

6. இப்பொழுது அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக மசியும் வரை 3 நிமிடங்கள் சிறுதீயிலேயே வதக்க வேண்டும்.

7. இச்சமயத்துல அனைத்து மசாலா தூள்களையும் மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூளையும் பிரஷர் குக்கரில் சேர்த்துகோங்க நன்றாக கிளறவும்.

8. இந்த கலவையை நன்றாக சிறுதீயிலேயே எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.

9. இப்பொழுது நன்றாக சுத்தமாக கழுவி வைத்துள்ள ஆட்டிறைச்சியை பிரஷர் குக்கரில் சேர்த்துகோங்க நன்றாக கிளற வேண்டும். 5 நிமிடங்கள் சிறுதீயிலேயே வேக வைக்க வேண்டும்.

10. அதன் பிறகு திக்கான தேங்காய் பாலை சேர்த்துகோங்க அதனுடன் அரைகப் தண்ணீர் சேர்த்துகோங்க மற்றும் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயிலேயே கொதிக்க வைக்க வேண்டும்.

11. நன்றாக கொதிக்க ஆரம்பித்த உடன் பிரஷர் குக்கரின் மூடியை மூடி மிதமான தீயில் 7-8 விசில் வரை விட்டுகோங்க. அதன்பிறகு ஆவி அடங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவவும்.

12. இப்பொழுது  எடுத்து சுடச்சுட இட்லி , சுடுசாதம், தோசையுடன் பரிமாறவும். சப்பாத்தி உடன் சாப்பிடவும் டக்கராக இருக்கும்.

மூன்று வேளை உணவும் பயன்களும் காலை


மூன்று வேளை உணவும் பயன்களும் காலை

காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட் டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப் பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம். சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலா ம் என்று நினைப்பதுண்டு.

தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை. காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதியம்

மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வ தால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும். காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதியஉணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள். மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள்,திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

இரவு

இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக் கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவ தாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது . இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

மற்றொரு ஆய்வு:

பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது.

கடப்பா


கடப்பா

தஞ்சை, மற்றும் கும்பகோணம் பகுதியில் பிரசித்தமான கடப்பா (பெயர் காரணம் தெரியவில்லை)அப்பகுதியிலுள்ள பெரும்பாலான ஓட்டல்களில் கிடைக்கும். திருமண விருந்துகளின் போதும் பரிமாறப்படும். இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும்.

தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டுப்பற்கள் - 4
கிராம்பு - 2
பட்டை - 1 துண்டு
சோம்பு - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
பட்டை இலை - 2
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.

பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, பொட்டுகடலை, தேங்காய் ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் ஏலக்காய், பட்டை இலையைப் போடவும். பட்டை இலை சற்று வறுபட்டதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும், உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் வரை கிளறவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைப் போட்டு நன்றாகக் கிளறி விடவும். அத்துடன் உருளைக்கிழங்கு மூழ்கும் அளவிற்கு தேவையான தண்ணீரைச் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, சற்று சேர்ந்தால் போல் வந்ததும் இறக்கி விடவும்.

குறிப்பு:

பொட்டுக்கடலைக்குப்பதில், சிறிது கடலைமாவை உபயோகித்தும் இதைச் செய்யலாம்.

சிலர் இதில் வேகவைத்த பயத்தம் பருப்பையும் சேர்ப்பார்கள்.

சேப்பங்கிழங்கு பொரியல் TARO ROOT FRY COCOCASIA FRY


சேப்பங்கிழங்கு பொரியல் TARO ROOT FRY  COCOCASIA FRY


தேவையான பொருட்கள்

சேப்பங்கிழங்கு        –        250 கிராம்

ஓமம்                  –        1.5 தேக்கரண்டி

மல்லி தூள்            –        1 தேக்கரண்டி

மிளகாய் தூள்          –        1 தேக்கரண்டி

ட்ரை மாங்கோ தூள்   –       1 தேக்கரண்டி

எண்ணெய்             –        பொரிக்க

புதினா                 –        சிறிது

உப்பு                   –        தேவையான அளவு

நீா்                     –        தேவையான அளவு

செய்முறை

சேப்பங்கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு மைக்ரோ வேவ் பாதுகாப்பு பாத்திரத்தில் சேப்பங்கிழங்கை போட்டு 5-6 நிமிடங்கள் அல்லது கிழங்கு வேக வைக்கவும்.

பின்பு அதனை வெளியே எடுத்து சிறிது நேரம் ஆற வைக்கவும்.
ஆறிய பின் நீரை வடிகட்டி விட்டு தேலை நீக்கி விடவும். லேசாக கைகளினால் மசித்துக் கொள்ளவும். அல்லது சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
அதன் பின் மிதமான தீயில் கிழங்குகளை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
அதனை எடுத்து கிச்சன் நாப்கின்னில் வைக்கவும்

வேறொரு பானில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் ஓமம் சேர்க்கவும்

பின்பு குறைந்த தீயில் வைத்து மிளகாய் தூள் சேர்க்கவும். நன்கு கிளறவும்

பின்பு பொரித்த சேப்பங்கிழங்கு சேர்க்கவும

ட்ரை மாங்கோ தூள் சேர்க்கவும். நன்கு கிளறவும்.

உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

புதினா சேர்க்கவும்.
சேப்பங்கிழங்கு பொரியல் ரெடி!!!!!

கிரீன் டீயின் நன்மைகள் மற்றும் செய்முறை விளக்கம்.



கிரீன் டீயின் நன்மைகள் மற்றும் செய்முறை விளக்கம்.

கிரீன் டீயின் நன்மைகள்:

1. மன அழுத்தம் மற்றும் கவலையைப் போக்குகிறது கிரீன் டீயில் இருக்கும் அமினோ அமிலங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தினை குறைக்கும் நிவாரணியாக உதவுகிறது.

2. வைரஸ் கிருமி பரவுவதிலிருந்து தடுக்கிறது. ஜப்பனீஸ் விஞ்ஞானிகள் கிரீன் டீயிலுள்ள இஜிசிஜி ஆரோக்கியமான செல்களை ஊக்குவிக்கிறது, மேலும் இது ஹெச்.ஐ.வி வைரஸை தடுக்கவும் உதவுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3. பார்கின்சன் நோய் ஆபத்தைக் குறைக்கிறது.
கிரீன் டீ, பார்கின்சன் நோய் ஏற்படுத்தும் சேதத்திலிருந்து மூளை செல்களை பாதுகாக்க உதவுகிறது.

4. இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.
கிரீன் டீ உயர் இரத்த அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய, ஆன்ஜியோடென்ஷனை குறைப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை சமமாக வைத்திருக்க உதவுகிறது.

5. நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துகிறது:
கிரீன் டீ உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பாலிபினால்களில் மற்றும் ஃபிளாவனாய்டுகளினால் ஒரு வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. இது நோய்களுக்கு எதிராக நல்ல திறனை உருவாக்குகிறது.

6. நோய் எதிர்ப்பு ஊக்கியாக உள்ளது:
இதில் வைட்டமின் சி இருப்பதன் மூலம் குளிர் மற்றும் காய்ச்சலில் இருந்து பாதுகாப்பாக வைத்திருகிறது. மேலும் உங்கள் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

7. உணவு நச்சு தன்மையின் ஆபத்தைக் குறைக்கிறது:
கிரீன் டீ உணவில் இருக்கும் நச்சு தன்மையின்ஆபத்தை குறைக்கும் திறன் பெற்றுள்ளது; மேலும் அது சிறுநீரக செயலிழப்பு மற்றும் மற்ற சிறுநீரக நோய்களுக்கான வாய்ப்புகளை பெருமளவில் குறைக்க உதவுகிறது.

8. எலும்பின் அடர்த்தி பராமரிக்கப்படுகிறது:
நீங்கள் ஒவ்வொரு நாளும் கிரீன் டீ குடித்தால், இது ஆரோக்கியமான ஃப்ளோரைடு அழிவிலிருந்து காப்பாற்றி உங்கள் எலும்புகளை அடர்த்தியாக வைத்திருக்க உதவுகிறது.

9. உடல் பருமன் மற்றும் உடல் கொழுப்பின் அளவை குறைக்கிறது:
கிரீன் டீ கொழுப்பு செல்களிலுள்ள குளுக்கோஸ் இயக்கத்தை கட்டுபடுத்தி உடல் பருமனை தடுக்கிறது. மேலும் கிரீன் டீ கொழுப்பின் அளவுகளை அதிக அளவில் குறைக்க உதவுகிறது மற்றும் நம் உடம்பிற்கு தேவையான நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

10.தோலைப் பளபளப்பாக்குகிறது:
கிரீன் டீ உங்கள் தோலின் தோற்றத்தை இளமையானதாக வைத்திருக்க உதவுகிறது.

11. புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது:
கிரீன் டீ உயர் ஆக்ஸிஜனேற்ற அளவைக் கொண்டுள்ளதால் புற்றுநோய் வருவதற்கான ஆபத்தைக் குறைகிறது. பசும் தேநீரில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்டுகள் புற்றுநோயை தடுக்கிற்து என நம்பப்படுகிறது, இது செல் சேதத்தை பாதுகாக்கவும் உதவுகின்றது.

12. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது:
கிரீன் டீ இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை குறைத்து இதய நோய்களுக்கு விடுதலையளிக்கிறது.

13. ஒல்லியாவதற்கு தீர்வாகிறது.
கிரீன் டீ எடை இழக்க முயற்சி செய்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒல்லியாக வேண்டி நீங்கள் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தால் அது அதிக பலனைக் கொடுக்காது, இத்துடன் கிரீன் டீ சேர்க்கும் போது எளிதில் நீங்கள் எடையை குறைக்க முடியும்.

கிரீன் டீயில் பல பயனுள்ள பண்புகள் உள்ளது. இதில் பல்வேறு நொதிகள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இது அதிக அளவிலான கார்போஹைட்ரேட், மற்றும் கொழுப்பு அமிலங்களை போக்குகிறது. இந்த க்ரீன் டீயில் ஸ்டெரொல்ஸ், பாலிஃபினால்கள், கரோட்டினாய்டுகள், டோக்கோஃபேரல்கள் போன்றவை இதில் கலந்துள்ளது.

சிறந்த கிரீன் டீயானது பல விலையுயர்ந்தவற்றில் ஒன்றாக உள்ளது. உதாரணமாக டிராகன் வெல் அல்லது லங் சிங்க். இது விலையுயர்ந்த கிரீன் டீக்களில் ஒன்றாகும். இதன் நிறம் பிரகாசமான பச்சை நிறமாகவும், குறைந்த அளவிலும் மற்றும் இதன் விலை மிக அதிகமாகவும் இருக்கிறது.

இவைகளில் பல வகைகள் உள்ளன உதாரணமாக.

மாச்சா, கியோகுரோ, ஜென்மைச்சா, ஹொஜிச்சா இவை போன்றவைகள். இவைகள் இதன் சுவை, நிறம் , நறுமணம் போன்றவைகளைப் பொருத்து இதன். விலை வேறுபடுகிறது.

கிரீன் டீ தயார் செய்யும் முறை:

நம் வீட்டில் செய்யும் சராசரி கருப்பு தேநீரை விட வித்தியாசமானது இந்த கிரீன் டீ.

குறிப்பு:

க்ரீன் டீ தயாரிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை, டீ இலைகள் 90° நீரில் மூழ்கியிருக்கிறது என்றால் அவை கசப்பாக மாறும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எப்போதும் சூடாக (80-85 டிகிரி செல்சியஸ்) அல்லது கொதிக்கும் நீரில் தூளை சேர்க்கவும். சிறந்த வெப்பநிலையில் டீயை மிகவும் சிறப்பாக செய்ய முடியும்.

தேவையானப் பொருட்கள்:

1. கிரீன் டீத்தூள் (அல்லது) கிரீன் டீ இலைகள் - 1½ டீஸ்பூன்,
2. தண்ணீர் – 1 கப்,
3. சர்க்கரை – 1 டீஸ்பூன்.
( நீங்கள் டயட்டில் இருந்தால் சர்க்கரைக்கு மாற்றாக தேன் 1 டீஸ்பூன் பயன்படுத்தலாம் )

* ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து சுடுபடுத்திக் கொள்ளவும். பின் கிரீன் டீத்தூளை அதில் சேர்க்க வேண்டும்.
( இது கசப்பாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது சுமார் 85°, வெப்பனிலையில் தான் இதை சூடுபடுத்த வேண்டும்)

* இது நன்கு கொதினிலைக்கு வரும் போது அடுப்பை அணைத்து விடவும். இதை சிறிது நேரம் ஆற விடவும்.

* இது ஊறுவதற்கு சுமார் 3 நிமிடங்கள் ஆகும். ஆனால் நீங்கள் இதன் சுவை போதுமானதாக இருக்கிறதா என்பதை சரிபார்க்க 1 ½ நிமிடங்கள் கழித்து ஒரு வாய் குடித்து பார்க்கலாம்.

* 3 நிமிடங்களுக்கு பிறகு, இதன் நிறம் பழுப்பாக மாறிவிடும். இப்பொழுது ஒரு வடிகட்டி பயன்படுத்தி தேயிலை தூளை தனியே வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

* தேநீரில் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து பரிமாறவும்.

( நீங்கள் மேலும் சுவையைக் கூட்ட ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை சேர்க்கலாம்.)

நீரிழிவு நோயாளிகளுக்கான கிறிஸ்துமஸ் கேக்


நீரிழிவு நோயாளிகளுக்கான கிறிஸ்துமஸ் கேக்

பொதுவாக கேக்கில் அதிகப்படியான சர்க்கரையானது இருக்கும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் கேக்கை தொடக்கூட மாட்டார்கள். ஆனால் அத்தகையவர்கள் சர்க்கரை சேர்க்காத கேக் செய்து சாப்பிடலாம். ஆம், சர்க்கரை சேர்க்காமலும் அருமையான சுவையில் இந்த கிறிஸ்துமஸிற்கு கேக் செய்ய முடியும். மேலும் இப்போது அந்த சர்க்கரை சேர்க்காத கிறிஸ்துமஸ் கேக்கின் செய்முறையைத் தான் பார்க்கப் போகிறோம். இது மிகவும் ஆரோக்கியமான ஒரு கேக் ரெசிபி. ஆகவே இந்த கிறிஸ்துமஸ் ஆரோக்கியமானதாக இருக்க, இந்த சுகர்லெஸ் கேக்கை செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்: உலர் திராட்சை - 2 கப் பிராந்தி - 2 டீஸ்பூன் தண்ணீர் - 1 1/2 டீஸ்பூன் அரைத்த பூசணிக்காய் - 1 கப் (இனிப்புக்காக) முட்டை - 2 ஆப்பிள் சாஸ் - 1/2 கப் பால் - 1/2 கப் பொடித்த விருப்பமான நட்ஸ் - 1/2 கப் பட்டைத் தூள் - 1 டீஸ்பூன் கிராம்பு - 1 டீஸ்பூன் மைதா - 1 கப் பேக்கிங் சோடா - 1 சிட்டிகை செய்முறை: * முதலில் மைக்ரோ ஓவனை 250 டிகிரி செல்சியஸில் சூடேற்ற வேண்டும். * பின் பிராந்தி மற்றும் நீரை ஒரு பாத்திரத்தில் ஒன்றாக ஊற்றி, அதில் உலர் திராட்சையை போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். * பின்னர் ஒரு பௌலில் அரைத்த பூசணிக்காய், முட்டை, ஆப்பிள் சாஸ் மற்றும் பாலை ஒன்றாக ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். * பின்பு அதில் ஊற வைத்துள்ள உலர் திராட்சையை போட்டு, அத்துடன் பொடித்த நட்ஸ், பட்டைத் தூள், கிராம்பு, மைதா மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும். * வேண்டுமானால் அத்துடன் 1 டீஸ்பூன் பிராந்தி சேர்த்துக் கொள்ளலாம். * பிறகு பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி, பின் அதில் மாவை ஊற்றி, ஓவனில் 200 டிகிரி செல்சியஸில் பேக் செய்ய வேண்டும். பின் 180 டிகிரி செல்சியஸில் வைத்து, 10 நிமிடம் பேக் செய்து எடுத்தால், நீரிழிவு நோயாளிகளுக்கான இனிப்பில்லாத கிறிஸ்துமஸ் கேக் ரெடி!!!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யலாம் கப் கேக்




கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யலாம் கப் கேக்  

தேவையான பொருட்கள் :

முட்டை - 5
சர்க்கரை - கால் கிலோ
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
மைதா - 200 கிராம்
பேக்கிங் பவுடர் - முக்கால் டீஸ்பூன்
வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்
முந்திரி, டூட்டி ஃப்ரூட்டி, கோகோ பவுடர், செர்ரி - சிறிதளவு
பேப்பர் கப் மோல்டு - தேவையான அளவு    செய்முறை :

* மைதாவுடன் பேக்கிங் பவுடரைச் சேர்த்து 3 முறை நன்றாக சலித்து வைக்கவும்.

* சர்க்கரையைப் பொடித்துக்கொள்ளவும்.

* பொடித்த சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும்.

* சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக முட்டைக் கலவையுடன் சேர்த்து கட்டி விழாமல் நன்றாகக் கலந்து மூன்று பங்காகப் பிரித்து வைக்கவும்.

* ஒரு பங்குடன் கோகோ பவுடரைக் கலக்கவும்.

* இரண்டாவது பங்குடன் டூட்டி ஃப்ரூட்டீயைக் கலக்கவும்.

* மூன்றாவது பங்குடன் செர்ரியைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

* பேப்பர் கப்பில் வெண்ணெய் தடவி, அதனை மோல்டினுள் வைக்கவும். அதனுள் கலந்து வைத்துள்ள மாவு கலவையை ஊற்றவும்.

* மைக்ரோ வேவ் அவனில் 160 டிகிரி வெப்பநிலையில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.

* 7 நிமிடம் ஆனவுடன் சிறிய மரக்குச்சியை வைத்து கேக் வெந்துவிட்டதா எனப் பார்த்து, எடுக்கவும்.

* விரும்பினால் கேக் வகைகளின் மேல் ஐசிங்கைப் பரப்பலாம்.

* சூப்பரான கப் கேக் ரெடி.

தேங்காய் மட்டன் குழம்பு


தேங்காய் மட்டன் குழம்பு

தேவையான பொருட்கள்:

மட்டன் – 500 கிராம்
தேங்காய் – 1/2 கப் (துருவியது) வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்
 பச்சை மிளகாய் – 3
சோம்பு – 1டீஸ்பூன்
பட்டை – 1
 பச்சை ஏலக்காய் – 2
 கிராம்பு – 3
கறிவேப்பிலை – சிறிது
 மிளகாய் தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு
 எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
 தண்ணீர் – 2 கப்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

1.முதலில் மட்டன் துண்டுகளை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

2.பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய மட்டனைப் போட்டு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.

3.பிறகு மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

4. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.

5.அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட்டு, தக்காளி சேர்த்து மற்றொரு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

6.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளறி, வேக வைத்துள்ள மட்டன் துண்டுகளை நீருடன் ஊற்றி, வேண்டுமெனில் சிறிது உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

7.குழம்பானது நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதன் மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து, சாதத்துடன் பரிமாறினால், அருமையான தேங்காய் மட்டன் குழம்பு ரெடி!!!

கிறிஸ்துமஸ் ரெசிப்பி கருப்பட்டி முட்டை புடிங் தேவையானவை:


கிறிஸ்துமஸ் ரெசிப்பி கருப்பட்டி முட்டை புடிங் தேவையானவை:

கருப்பட்டி - 100 கிராம்

தண்ணீர் - 5 டேபிள்ஸ்பூன்

முட்டை - 2 (90 -100 கிராம் இருக்க வேண்டும்)

வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்

வெண்ணெய்/எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

கருப்பட்டியை நன்றாகப் பொடித்துத் தூளாக்கவும். அடுப்பில் வாணலி வைத்து பொடித்த கருப்பட்டி, 5 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். அதிக நேரம் அடுப்பில் வைக்க வேண்டாம். கரைந்ததும் வடிகட்டி ஆறவிடவும். முட்டையை லேசாக அடித்து (நுரை வரும்வரை அடிக்கக் கூடாது), ஆறிய கருப்பட்டிப் பாகு, எசன்ஸ் சேர்த்து லேசாகக் கலக்கவும். மோல்டு அல்லது டம்ளரில் சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் (வாசனையில்லா எண்ணெய்) தடவி, முட்டை - கருப்பட்டிக் கலவையை அதில் ஊற்றவும். வாய்ப்பகுதியை ஃபாயில் பேப்பரால் மூடவும் (இல்லையென்றால் வேகவைக்கும்போது தண்ணீர் உள்ளே சென்றுவிடும்).

அடுப்பில் ஒரு பான் வைத்து தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இந்த மோல்டு/டம்ப்ளரை தண்ணீரில் மூழ்கிவிடாதபடி உள்ளே வைக்கவும். மூடி போட்டு 30 நிமிடங்கள் வேகவிடவும். வெந்துவிட்டதா என்று பதம் பார்க்க, கத்தியை கலவையின் நடுவே விட்டுப் பார்க்கவும். ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம். இல்லை என்றால் சிறிது நேரம் வேகவிடவும். வெந்ததும் வெளியே எடுத்து கட் செய்து பரிமாறவும். ஜெல்லிபோல இருக்கும் இந்த புடிங்..

சனி, 16 டிசம்பர், 2017

மிளகு வடை (ஆஞ்சநேயர் வடை)


மிளகு வடை (ஆஞ்சநேயர் வடை)

இந்த மிளகு வடை, ஆஞ்சநேயருக்கு வடைமாலையாக சாற்றுவதற்காக கோவில்களில் செய்யப்படுவது.

தேவையானப்பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம் பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஒரு வடிகட்டியில் போட்டு வைக்கவும்.

மிளகை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் உளுத்தம் பருப்பை போட்டு, தண்ணீர் எதுவும் சேர்க்காமல், கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும்.

ஒரு சுத்தமான ஈரத்துணியில், ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து வைத்து, மெல்லிய வடையாகத் தட்டவும்.  வடையை துணியிலிருந்து கவனமாக எடுத்து, காய்ந்த எண்ணையில் போட்டு, அரை வேக்காடாகப் பொரித்தெடுக்கவும். எல்லா மாவையும் இப்படியே பொரித்தெடுக்கவும்.  பின்னர், மீண்டும் 4 அல்லது 5 பொரித்த வடைகளை எண்ணையில் போட்டு, நன்றாக சிவக்கும் வரை பொரித்தெடுக்கவும்

தேங்காய் ஒப்பட்டு ரெசிபி


தேங்காய் ஒப்பட்டு ரெசிபி

 இந்த இனிமையான ரெசிபி தேங்காய் துருவல் மற்றும் வெல்லத்தை கொண்டு செய்யப்படுகிறது.

இந்த கொப்பரி ஒப்பட்டு ரெசிபி தென்னிந்தியாவிலிருந்து தோன்றிய உணவு முறையாகும். பீலி ஒப்பட்டு அல்லது பூரண போளி போன்றவை மகாராஷ்டிர பாரம்பரிய உணவிலிருந்து வந்தவை. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அந்த போளியை நிரப்புவது தான்.
வெல்லத்தின் மொறு மொறுப்பான டேஸ்ட்டும் மென்மையான வெளிப்பகுதியும் இதன் சுவையை பலமடங்கு பெருகச் செய்கிறது. காயி ஹோலிச் ரெசிபி செய்வதற்கு கொஞ்சம் முன் அனுபவம் உள்ள பெரியவர்களின் உதவி இருந்தால் நல்லது. ஆனால் அந்த கவலை வேண்டாம் நாங்கள் உங்களுக்கு இங்கே கூறும் பொருட்களின் அளவு களையும் செய்முறைகளையும் பயன்படுத்தி வீட்டிலேயே நீங்கள் இதை எளிதாக செய்து விடலாம்.

INGREDIENTS
ரவை (சிரோட்டி ரவை) - 1 கப்
மைதா - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 1/4 கப்
தேங்காய் துருவல் - 1 பெளல்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 8 டேபிள் ஸ்பூன் +1 கப்
பிளாஸ்டிக் சீட்

HOW TO PREPARE
1. ரவையை ஒரு கலக்கின்ற பெளலில் எடுத்து கொள்ளவும்
2. அதனுடன் மைதா மற்றும் மஞ்சள் தூளை சேர்க்கவும்
3. நன்றாக கலக்கவும்
4. இப்பொழுது 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்
5. கொஞ்சம் கொஞ்சமாக 3/4 கப் தண்ணீர் ஊற்றி பிசைந்து நல்ல கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும்
6. பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். 5 நிமிடங்கள் மறுபடியும் பிசையவும்.
7. பிறகு 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் திரும்பவும் சேர்க்க வேண்டும்
8. ஒரு தட்டை கொண்டு 5 மணி நேரம் மூடி விட வேண்டும்.
9. தேங்காய் துருவலை மிக்ஸி சாரில் போடவும்
10. இதனுடன் 1/4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்
11. நன்றாக வழுவழுவென அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
12. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் வெல்லத்தை சேர்க்க வேண்டும்
13. உடனடியாக 1/4 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்
14. வெல்லம் முழுவதுமாக கரைந்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
15. அரைத்த தேங்காயை வெல்லத்துடன் சேர்க்கவும்.
16. நன்றாக கிளறிக் கொண்டே இருக்கே வேண்டும். அப்பொழுது தான் கருகுவதை தவிர்க்கலாம்.
17. 10-15 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும். கலவையானது கெட்டியான பதம் வந்ததும் அடுப்பிலிருந்து கடாயை எடுத்து விடவும்.
18. இப்பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறவும்
19. 10 நிமிடங்கள் குளிர வைக்க வேண்டும்
20. கலவையானது ஆறிய பிறகு சின்ன சின்ன பந்துகளாக உள்ளே வைக்கும் பூரணத்தை உருட்டவும்
21. தேய்க்கும் பலகையை எடுத்து கொள்ளவும்.
22. அதன் மேல் பிளாஸ்டிக் சீட் வைக்க வேண்டும்.
23. சீட் டின் மீது எண்ணெய் கொண்டு தடவ வேண்டும்
24. மீடியம் வடிவில் மாவை எடுத்து கொள்ளவும்
25. மாவை தட்டையாக அப்பளம் மாதிரி தட்டி பூரணத்தை நடுவில் வைக்க வேண்டும்
26. திறந்த எல்லா பக்கங்களையும் மாவை கொண்டு மூடி தட்டையாக தட்டிக் கொள்ளவும்
27. எண்ணெய் தடவிய சீட்டில் வைத்து கையை கொண்டு இன்னும் தட்டையாக்கி கொள்ளவும்.
28. தேய்க்கும் கட்டையிலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும்
29. மெல்லிய ரொட்டியாக தேய்க்கும் கட்டையை கொண்டு தேய்க்க வேண்டும்.
30. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடுபடுத்த வேண்டும்.
31. பிளாஸ்டிக் சீட்டை தோசைக் கல்லுக்கு மேலாக பிடித்து கொண்டு,ரொட்டியை மெதுவாக பிளாஸ்டிக் சீட்டிலிருந்து எடுத்து தோசைக் கல்லில் போடவும்.
32. ஒரு பக்கம் வேகும் போது மறுபக்கம் எண்ணெய் விடவும்
33. பொன்னிறமாக மாறியதும் திருப்பி போட்டு வேக வைக்கவும்
34. சூடாக எடுத்து பரிமாறவும்.

INSTRUCTIONS
1.மாவானது மென்மையான பதம் வரும் வரை நன்றாக பிசையவும்
2.பூரணத்தை சமைக்கும் போது பக்கவாட்டில் ஒட்டியிருப்பதை சேர்த்து மையப்பகுதிக்கு கொண்டு வந்து சமைக்க வேண்டும். அல்வா சமைப்பது போல் சமைக்க வேண்டும்.

NUTRITIONAL INFORMATION
பரிமாறும் அளவு - 1 போளி
கலோரிகள் - 256 கலோரிகள்
கொழுப்பு


கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி?


கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி?

கோதுமை இடியாப்பம் கோதுமை மாவினைக் கொண்டு செய்யப்படும் எண்ணை இல்லாத உணவுப் பொருள் ஆகும்.

கோதுமை பொதுவாக நார்ச்சத்து மிக்கது. எனவே இதனை ஆவியில் வேகவைத்து உண்ணும்போது முழு நார்சத்தும் கிடைப்பதோடு எளிதில் செரிமானமும் ஆகிறது.

கோதுமையில் சப்பாத்தி, தோசை போன்ற உணவுகளையே நாம் வழக்கமாகச் செய்வோம்.

பொதுவாக நாம் அரிசியில் இருந்து இடியாப்பம் தயார் செய்வோம்.

கோதுமை இடியாப்பம் என்பது கோதுமையினைக் கொண்டு செய்யப்படும் மாற்று உணவு ஆகும். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

இனி சுவையான, சத்தான கோதுமை இடியாப்பம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – ¼ கிலோ கிராம்

கல் உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு


செய்முறை

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நன்கு சூடேறியதும் கோதுமை மாவை போட்டு வறுக்கவும். மாவு நன்கு சூடேறியதும் இறக்கி விடவும்.

மாவினை வறுக்கும்போது
பின் அதனை நன்கு ஆறவிடவும்.

தேவையான அளவு கல் உப்பினை தண்ணீரில் சேர்த்து சூடேற்றவும்.

வறுத்து ஆறவிட்ட கோதுமை மாவில் உப்பு சேர்த்த சுடு தண்ணீரைச் சேர்த்து மாவாகப் பிசையவும்.

இந்த மாவானது திரட்டும் போது கைகளில் ஒட்டாமல் வரும். இதுவே சரியான பதமாகும்.

சரியான பதத்தில் மாவு

இம்மாவினை தேவையான அளவு எடுத்து இடியாப்பக் குழலில் இட்டு இட்லித் தட்டில் இடியாப்பமாகப் பிழியவும்.

மாவினைப் பிழியும்போது
வரிசையாகப் பிழிய வேண்டும்

அவிப்பதற்கு முன்பு


பின் இதனை இட்லிப் பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

அவித்த பின்

சுவையான கோதுமை இடியாப்பம் தயார்.

சுவையான கோதுமை இடியாப்பம்
சத்துக்கள் நிறைந்த இதனை சிறு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இவ்வுணவு மிகவும் ஏற்றது.

இந்த இடியாப்பத்துடன் தேங்காய் பால், தேங்காய்ப் பூ, குருமா, சாம்பார் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினைச் சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் கோதுமையை முதலில் வறுத்து பின் அதனை அரைத்து தண்ணீர் ஊற்றி இடியாப்பம் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் கடுகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து அதனுடன் இடியாப்பம் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கார இடியாப்பமாகவும் உண்ணலாம்.

சப்பாத்திக்கு சத்தான பாலக் கீரை பருப்பு கூட்டு


சப்பாத்திக்கு சத்தான பாலக் கீரை பருப்பு கூட்டு

சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பாலக் கீரை பருப்பு கூட்டு. இந்த கீரை கூட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

#தேவையான #பொருட்கள் :

பாலக்கீரை - 2 கைப்பிடி,
துவரம்பருப்பு - 1/4 கப்,
தேங்காய்ப்பூ - 2 டேபிள்ஸ்பூன்,
பூண்டு பற்கள் - 4,
மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி - தலா 1/2 டீஸ்பூன்,
சீரகப்பொடி- 1 டீஸ்பூன்,
மஞ்சள்பொடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு

#தாளிக்க :

காய்ந்த மிளகாய் - 2
கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்.

#செய்முறை :

பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

சீரகப்பொடி, தேங்காய்ப்பூவை நைசாக அரைத்து கொள்ளவும்.

துவரம்பருப்பை நன்றாக கழுவி மஞ்சள்பொடி, பூண்டு சேர்த்து மூழ்கும் வரை நீர் விட்டு மலர வேகவைத்து எடுக்கவும்.

பாலக்கீரையை நறுக்கி நீர் சேர்த்து மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விட்டு இறக்கி மத்தினால் மசிக்கவும். அல்லது மிக்சியில் சுற்றவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து பருப்புடன் கீரை, அரைத்த தேங்காய் சேர்த்து கொதித்ததும் இறக்கிப் பரிமாறவும்.

சூப்பரான பாலக் கீரைக் கூட்டு ரெடி.

இந்தப் பாலக் கீரை கூட்டை சப்பாத்திக்கு சைடு டிஷ் ஆகவும் மதிய உணவுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.

மார்கழிப் பொங்கலும் மதி நிறைந்த நினைவுகளும்...


மார்கழிப் பொங்கலும் மதி நிறைந்த நினைவுகளும்...

மார்கழி முதல் நாளும் எங்கள் இல்லத்தில் சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுதல் வழக்கம். கோலங்கள், கோதையர்கள், கோயில் தெய்வீகக் கீதங்கள் என்று குளிர் காலை அதி சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருக்கும். காற்றில் தெய்வீக மணம் கமழ, பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகள் விடிகாலையிலேயே துவங்கி இருக்கும்.
அச்சு வெல்லத்தை உருண்டையான ஒரு கருங்கல்லால் உடைத்துக்கொடுப்பதே என் பணி. செய்தித்தாள் கிழியாமல் கருங்கல்லில் ஒட்டாமல் வெல்லத்தைச் செல்லமாக உடைக்க வேண்டும். ஏலக்காயைப் பிரித்து விதைகள் எடுத்து பொடித்துக் கொடுப்பதும் அடுத்த வேலை. மற்றபடி ஏதேனும் மறந்துபோன அயிட்டங்கள் இல்லையென்றால் கடைக்கு ஓடுதலும் கடைக்குட்டியாகிய எம் கடன். எப்போது எப்படி பொங்கல் ஆயிற்று என்றெல்லாம் தெரியாது. அப்பாவிற்கு அவர் சொல்லும் மந்திரங்களுக்கு ஏற்ற இடைவெளிகளில் விக்ரகங்கள் முன் துளசியையும், மலர்களையும் தூவ வேண்டும்.

“பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு!
பலகோடி நூறாயிரம்!!
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வி திருக்காப்பு!”

என ஆரம்பித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தெய்வத் திருமந்திரங்களையும், பாடல்களையும் சிரத்தையாய் வாசிப்பார். பரிபூரண வைஷ்ணவராக வாழ்ந்தவர். பூஜையறையில் அவர் வாசித்த சொற்களே என்னில் தமிழ் மீது தனித்த பற்றை உருவாக்கியிருக்க வேண்டும். வீட்டில் சௌராஷ்டிரா மொழியைப் பேசினாலும் தமிழ் மீது எனக்கு எப்போதும் காதல் உண்டு.

உயர்நிலைப்பள்ளியின் தமிழாசியர்களும் மொழியின் மீது ஈர்ப்பு உண்டாகும் விதத்தில் தமிழைக் கற்பித்தனர். அந்த ஊக்குவிப்பே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் தமிழ் பாடத்தில் முதன்மை பெற்று “திருவாசகத்தை”ப் பரிசாகப் பெறும் வாய்ப்பை நல்கியது. இன்று முகநூல் வாசகர்கள் என் பதிவுகளை சிலாகித்துப் பேசுவதைக் காணும்போது அதற்கு வித்திட்ட ஆசிரியப் பெருமக்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வருவோம். மேற்குறிப்பிட்ட நினைவலைகளால் இன்றைய சிறப்புணவு சர்க்கரைப் பொங்கல் என முடிவாகி, முதலில் நித்ய படைப்பான குழம்பு, பொரியலை அதிக ஆர்ப்பாட்டமின்றி எளிமையாக முடித்தேன்.

கருணை கிழங்குக் குழம்பும், கோஸ் பொரியலும். கருணைக் கிழங்கைப் பார்க்கும்போது அது மேல் தோல் காய்ந்துபோய் கருணையற்ற கரடுமுரனான கிழங்காய்த் தோன்றியது. கத்தி வளைந்தது. மாற்றுக் கத்தியை எடுத்து அழுத்தி வெட்டிக் தோலைக் களைந்தேன். கல்லுக்குள் ஈரமாய் உள்ளே நீர்ப்பதம் அப்படியே இருந்தது. சிறுசிறு செவ்வகங்களாய் வெட்டவும் கையில் வலிமை வேண்டியிருந்தது. ஆனால் கோஸ் அப்படியல்ல. அது புல்லை நறுக்குவதுபோல் எளிதாக இருந்தது. குறுக்கிலும் நெடுக்கிலும் கத்தி குதித்துக் குதித்து வெட்டி விளாசித் தள்ளியது. வாழ்க்கையும் இப்படித்தான். கடினமான ஒரு விஷயத்தைக் கடந்தபின் எளிதாய் சமாளிக்கும்படியான ஒரு விஷயமும் வரும்.

ஒரு பக்கம் பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டே உருண்டை வெல்லத்தை உடைத்தேன். குக்கரில் இரண்டு கப் நீரும் ஒரு கப் பாலும் சேர்த்துக் கொதிக்கவிட்டேன். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பச்சரிசி எடுத்துக்கொண்டேன். கால் கப் பாசிப்பருப்பு எடுத்துக்கொண்டு லேலாக வறுத்து அதனில் கலந்து அலசி கொதிக்கும் பால், நீருடன் சேர்த்தேன் குக்கரை மூடி அக்கரை சென்று இதர வேலைகள் பார்த்தேன். மூன்று விசிலுக்குப் பின் குக்கரை இறக்கி, வாணலியை அடுப்பேற்றி முந்திரி மற்றும் திராட்சைகளை தனித்தனியாய்ப் பொரித்து ஒன்றாய் இணைத்து ஒரு தட்டில் வைத்துக்கொண்டேன்.

மற்றுமொரு பாத்திரத்தில் வெல்லப்பாகை உருவாக்கி, வெந்த அரிசி, பருப்பில் கலக்கினேன். ஏலக்காய் பொடியைத் தூவினேன். நெய்யை நான்கு ஸ்பூன்கள் காட்டினேன். சில நிமிடங்களில் பொங்கல் பக்கத்து நகர் வரை மணம் பரப்பியதாக செய்தி வந்தது. முந்திரி, திராட்சைகளைக் கலந்து பழங்கள், மற்றும் பூக்களுடன் சூடிக்கொடுத்த சுடர் கொடிக்குப் படைத்தேன்.

வெள்ளி, 15 டிசம்பர், 2017

கற்றாழையின் மருத்துவ பயன்கள்


கற்றாழையின் மருத்துவ பயன்கள்
.
தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும்.

தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். சோற்றை கரண்டியளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர வெப்ப நோய்கள் யாவும் தீரும். அடிபட்ட வீக்கங்களுக்கு வைத்து கட்டி வர வீக்கம் தீரும்.

கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.

இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப் பயன்படுகிறது.

இலை மஞ்சள் நிறத் திரவமும் (கரியபோளம்) தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது.

எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும்.

முக அழகு கொடுக்கும் எல்லா களிம்புகளிலும் கற்றாழை சேர்க்கப்படுகிறது. கற்றாழை சோற்றை நன்றாக மிக்சியில் அரைத்து முகத்தில் பூசி வரலாம். முகம் பளபளப்பாக மாறி விடும். இதனை குமரி களிம்பு என்பர்.

குமரி பக்குவம் – இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான நோய்களுக்கு கற்றாழை சோற்றை சர்க்கரையுடன் கலந்து நன்றாக மிக்சியில் அரைத்து கரண்டியளவு சாப்பிட தீரும்.

குமரி எண்ணெய் – கற்றாழை சோற்றை எண்ணெய் சேர்த்து தைலம் பண்ணி தலைக்கு தேய்த்து வர முடி நன்றாக கருமையாக வளரும். தூக்கம் சிறப்பாக வரும்.

மூசாம்பரம் – கற்றாழையைக் கீறும்போது வடியும் பாலினை காயவைத்து கிடைக்கும் பொருளுக்கு மூசாம்பரம் என்று பெயர். இதனை இரத்த கட்டிற்கு நீரில் அரைத்து போட தீரும். மூட்டு வீக்கத்திற்கு மூசாம்பரத்தை நீரில் அரைத்து போட தீரும்.

ஜெல்லைப் பதப்படுத்தி குளிர்பானமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வேரை சுத்தம் செய்து பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடி செய்து 15 மில்லி பாலுடன் கொடுக்க சூட்டு நோய்கள் தீரும். ஆண்மை நீடிக்கும்.

சோற்றுக் கற்றாழை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, சிறுநீரகம் மற்றும் மண்ணீரல், கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது. எயிட்ஸ் ஐயும் குணமாக்கும் வல்லமை உள்ளது. cancer என்னும் புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

நறுங் கற்றாழைக்கு வாத மேகம், கப கோபம், கிருமிக் குத்தல் (மூலக் குத்தல் ), பெரு வியாதி (குஷ்டம், பால்வினை நோய்கள்), மூலம், உன்மத்தம், பகந்தரம், வயிற்று நோய், தினவுள்ள பித்த கிரிச்சரம் (அரிப்பும், பின் கடுப்பும் உள்ள மூத்திரக் கடுப்பு) ஆகிய வியாதிகள் மருண்டு ஓடும் என்று பொருள். மேலும் மது மேகத்தால் (சர்க்கரை வியாதியில்) அவதிப்படுபவர்களுக்கு 48 நாட்கள் இந்த சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் சதையை மட்டும் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி 7 தடவைக்குக் குறையாமல் தண்ணீரில் கழுவி சீனாக் கற்கண்டோடு கூட்டிச் சாப்பிட மதுமேகம் ஓடியே போகும்.

இந்த சோற்றுக் கற்றாழைச் சோற்றை திரிபலாதிச் சூரணத்துடன் கலந்து கட்டித் தோலாந்தரமாக தொங்கவிட்டு, அதிலிருந்து வடியும் நீர் குமரிச் செய நீர் என்றழைக்கப்படும். அது பல மருந்துகள் தயாரிக்க முக்கிய பொருளாகும். மேலும் அயக்காந்தம், மண்டூரம் முதலியவற்றைச் செந்தூரமாக்குவற்கு இதைவிடச் சிறந்த மூலிகை இல்லை. (இந்த வகை கற்றாழைக்க குமரி கற்றாழை என்றும் பெயருண்டு).

உஷ்ண பிரச்சனைகளைப் போக்கும் கற்றாழை

உஷ்ண வாயு தொடர்பான பிணிகளை மிகவும் துரிதமாகவும், பூரணமாகவும் இது குணப்படுத்தும் கற்றாழை எங்கும் காணக் கிடைக்க கூடியது. கோடைகாலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு சோற்றுக்கற்றாழையின் உள்ளேயுள்ள சோறு போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.

வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும்.

இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும். நன்றாக சதைப்பற்றுள்ள கற்றாழை மடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சதை பகுதியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். இந்த துண்டுகளைப் பலமுறை தண்ணீர் விட்டு கழுவவேண்டும். அவற்றின் வழுவழுப்புத் தன்மையும் நாற்றமும் அகலும் வரை கழுவி சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம்.

வாய் அகன்ற பாத்திரம் ஓன்றை எடுத்து அதில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் கற்றாழைத் துண்டுகளைப் போட்டு பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயம் கால் கிலோ ஆமணக்கு என்ணெய் ஆகியவற்றை சேகரித்து கொள்ள வேண்டும். வெங்காயத்தை மட்டும் இடித்து சாறு எடுத்து மற்ற பொருட்களோடு கலந்து அடுப்பிலிட்டுச் சிறு சிறு தீயாக எரிக்க வேண்டும்.

சாறு சுண்டி சடசடப்பு அடங்கும் வரை வைத்திருந்து பிறகு இறக்கி சூடு ஆறிய பிறகு கண்ணாடி ஜாடியொன்றில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். வயிற்றில் ரணம், மாந்தம், வயிற்றுவலி, புளியேப்பம், பொருமல், மற்றும் உஷ்ண வாயு தொடர்பான பிணிகள் தோன்றினால் வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை,கொடுத்து வர நல்ல முறையில் குணம் தெரியும். கற்றாழை உடல் முதல் உள்ளம் வரை அனைத்தையும் குணப்படுத்தும் சிறந்த மருந்து.

அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் சோற்று கற்றாழை

1. சோற்றுக் கற்றாழையின் சாற்றையோ அல்லது உள்ளிருக்கும் கூழ்ப்பகுதியையோ தினமும் அளவோடு சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவு பெறும்.

2. சோற்றுக் கற்றாழை உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் மேலுக்கு உபயோகப்படுத்துவதாலும் பெண்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.

3. சோற்றுக் கற்றாழையை ஓரிரு சாக்லேட் அளவு வில்லைகளாக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்ட உணவு குடலில் தங்கி நஞ்சாகி நமக்குத் துன்பம் தரும் நோய்களைத் துடைக்கும் வகையில் குடலுக்கு பாதிப்பின்றி தேங்கிய நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் stress தணிந்து ஆரோக்கியம் கிடைக்கின்றது.

4. சோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றை சுத்திகரித்து உடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட குருதியும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.

5. 100கிராம் கற்றாழைச் சோற்றை எடுத்து கொண்டு அத்தோடு 10கிராம் ஊறவைத்த வெந்தயத்தை சிறிதாக அறிந்த ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து 350கிராம் விளக்கெண்ணெயில் இட்டு பதமாகக் காய்ச்சி வடித்து பத்திரப் படுத்திக் கொண்டு அந்தி, சந்தி இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் தணிந்து உடல் பெருகும், அழகான தோற்றம் பெருகும்.

6. சோற்றுக் கற்றாழை மடலை நன்கு முற்றியதாகத் தேர்ந்தெடுத்து இரண்டாகப் பிளந்து அதன் இடையே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை திணித்து கற்றாழையின் மடல்கள் இருபகுதியும் ஒன்றாக சேரும் வண்ணம் நூலால் இறுகக் கட்டி இரவு முழுவதும் வைத் திருந்து மறுநாள் காலையில் எடுத்துப் பார்க்கையில் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை மட்டும் எடுத்து உள் ளுக்கு சாப்பிட்டு வர தீராத வயிற்று வலி, வாய் வேக்காடு, வயிற்றுப்புண், சிறுநீர்த் தாரைப்புண் ஆகியன குணமாகும்.

7. கற்றாழைச் சோற்றை மோரில் கலந்து அன்றாடம் குடித்து வர உடல் சூட்டினால் ஏற்படும் முகப்பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை மற்றும் மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் குணமாகும்.

8. சோற்றுக் கற்றாழையின் வேர்களை சேகரித்து சிறுதுண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து பால்ஆவியில் வைத்து வேகவைத்து எடுத்து வெயிலில் இட்டு உலர்த்தி நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு தினம் இரவு படுக்க போகுமுன் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை மிகும். விந்துக்களின் எண்ணிக்கையும் பெருகும்.

9. சோற்றுக் கற்றாழைச் சோற்றை சுத்தம் செய்து 10 முதல் 15 கிராம் அளவு எடுத்து நீராகாரத்துடன் (பழையது நீர்) சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சிறுநீரில் இரத்தம் போவது குணமாகும். மூத்திரக்கிரிச்சாம் என்னும் சிறுநீர்த்தாரை எரிச்சல் தணியும்.

10. சுத்திகரித்த கற்றாழைச் சோறு ஒருகப் அளவு எடுத்து இதனோடு 5 சிறு வெங்காயத்தைப் பொடித்து நெய் விட்டு சேர்த்து வதக்கிச் சேர்த்து சுடுக்காய் கொட்டை நீக்கியபின் மூன்று கடுக்காயின் தோலைப் பொடித்துச் சேர்த்து ஒன்று கலந்து சிறிதளவு நீர்விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடிவைத் திறந்து அரைமணி நேரம் கழித்துப் பார்க்க அனைத்துப் பொருட்களின் சாரமும் ஒன்றாய்க் கலந்து வடிந்து தெளிவாய் இருக்கும். இதை உள்ளுக்குச் சாப்பிட சில மணித் துளிகளில் சிறுநீர்கட்டு தளர்ந்து தாராளமாக சிறுநீர் வெளியேறும்.

11. சோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் 2 அவுனஸ் உள்ளுக்கு கொடுப்பதால் இதய ரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிவதால், ஏற்படும் இதய நோய்கள் அச்சம் தரும் உயிர் போக்கி நோய்களைத் தணிக்கிறது.

12. சோற்றுக் கற்றாழையில் உள்ள ஹார்போஹைட்ரேட்டு மெட்டபாலிசம் சர்க்கரை நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது இரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும், உணவுக்கு பின் ஆன சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.

13. இதயத்துக்கு போதிய பிராணவாயு கிடைக்க வழிசெய்கிறது. பிராணவாயு சரியான அளவு இதயத்துக்கு கிடைக்காத போது கடும் நெஞ்சுவலி உண்டாகிறது. சோற்றுக் கற்றாழைச் சாறு இப்படி மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.

14. சோற்றுக் கற்றாழையில் உள்ள வேதிப் பொருட்கள் பேகொசைட்டோஸிஸ் மற்றும் ஆண்டிபாடீஸ் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

இறால் சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்...


இறால் சாப்பிடுவதால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்...


எடை குறைப்பு
இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம்.
வயதான தோற்றத்தை நீக்கும்
சருமம் வயதான தோற்றத்தை பெறுவதற்கு சூரிய ஒளி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. எந்தவித பாதுகாப்பும் இன்றி சூரிய ஒளியில் சிறிது நேரம் சருமத்தை வெளிப்படுத்தினால் போதும், அதன் புற ஊதா கதிர்வீச்சுக்கள், சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும். ஆனால் இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால், அவை சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.
இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. அதனால் சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும். அதனால் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், ஒவ்வொரு வாரமும் இறாலை உட்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது இந்த பிரச்சனை மெதுவாக நீங்கும்.
கண் பார்வை சிதைவு
இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். மேலும் இதிலுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக விளங்கும். முக்கியமாக கணினி திரை முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்குநல்ல நிவாரணியாக இருக்கும்.
தலை முடி உதிர்தல்
இறாலில் உள்ள கனிமங்கள் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்கும். ஜிங்க் குறைபாடு இருந்தால், முடி உதிர்தல் ஏற்படும். தலை முடி மற்றும் சரும அணுக்களில் உருவாகும் புதிய அணுக்களை பாதுகாப்பதில் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் முடி கொட்டுதல் ஏற்பட்டாலோ அல்லது முடி வளர்ச்சி நின்று போனாலோ இறால்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.
எலும்பு ஆரோக்கியம்
இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.
உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால், எலும்பின் தரம், திணிவு, திடம் மற்றும் ஒட்டுமொத்த திணிவில் சிதைவு ஏற்படும். இது ஆஸ்டியோபோரோசிஸ்என்ற நோய்க்கான அறிகுறியாகும். எனவே உணவில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், எலும்பில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை நீங்கி, அதற்கு மீண்டும் வலு சேர்க்கும்.
தைராய்டு ஹார்மோன்கள் சுரத்தல்
இறாலில் அயோடின் வளமையாக இருப்பதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க அது உதவும். இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.
உணவு அலர்ஜி
கடல் உணவுகளினால், இறால் உட்பட அலர்ஜி ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். புது வகை மீன் அல்லது இறாலை உண்ணும் போது கவனமாக இருங்கள். அதே போல் அதிக அளவில் உட்கொள்ளும் போதும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பல விதமான அலர்ஜிக்கு உள்ளாக நேரிடும்.


சனி, 9 டிசம்பர், 2017

கிறிஸ்துமஸ் கேக்



கிறிஸ்துமஸ் கேக்  என்னென்ன தேவை?

மைதா - ஒரு கப்

சர்க்கரை - முக்கால் கப்

எண்ணெய் - ஒரு கப்

பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை

தயிர் - 250 மி.லி.

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

வெண்ணெய் - சிறிது

ஜாம் - ஒரு டேபிள்ஸ்பூன்

கேக் டிரே - 1

எப்படிச் செய்வது?

மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா அனைத்தையும் ஒன்றாகக் கலந்து இரண்டு முறை சலித்துக்கொள்ளுங்கள். எண்ணெய், சர்க்கரை, தயிர், ஜாம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக நுரைக்க அடித்துக்கொள்ளுங்கள். சலித்த மாவை இதில் சேர்த்து கட்டியில்லாமல் கலக்குங்கள். பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி, இந்த மாவுக் கலவையை முக்கால் அளவு ஊற்றி கரண்டியால் சமன் செய்யுங்கள். கப் கேக் செய்வது போன்றே குக்கரில் 20 நிமிடங்கள் மிதமான தணலில் சூடாக்கி, வெயிட், கேஸ்கட் போடாமல் மூடி ஒருமணி நேரம் வேகவிடுங்கள். கேக் வாசனை வந்ததும் குச்சியால் குத்திப் பார்த்து எடுங்கள். 20 நிமிடங்கள் ஆறவைத்துச் சாப்பிடலாம்.

அலங்கரிக்க:

வெண்ணெய், சர்க்கரையை நன்றாக அடித்தால் க்ரீம் போல் வரும். அதனை மேலே பரப்பினால் க்ரீம் கேக் தயார். அதனுடன் சாக்லேட் சுவை வேண்டுமென்றால் கோகோ பவுடர் கலந்து அடித்து மேலே பரப்பலாம். அரிசி மிட்டாய், சர்க்கரை உருண்டைகள், பல வண்ண மிட்டாய் கொண்டும் அலங்கரிக்கலாம். இரண்டு டீஸ்பூன் சர்க்கரையில் துளி நீர் விட்டு நன்றாகக் காய்ச்சி, அந்தப் பாகை கேக் மீது ஊற்றி, அது ஆறிய பிறகு மேலே க்ரீம் ஐசிங் டிசைன் செய்தால் சீக்கிரம் அழியாது.

குறிப்பு: மைதா மாவு பிடிக்காதவர்கள் தினை மாவு, சோள மாவு, கோதுமை மாவைக் கலந்து செய்யலாம். இந்த மாவு கலவை வேக கூடுதல் நேரம் ஆகும்.

வெள்ளி, 8 டிசம்பர், 2017

மார்கழி மாத ஸ்பெஷல் உணவுகள்...



மார்கழி மாத ஸ்பெஷல் உணவுகள்...

சர்க்கரைப் பொங்கல்...

தேவையானவை: அரிசி – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், பொடித்த வெல்லம் – 4 கப், நெய் – ஒரு கரண்டி, முந்திரி, திராட்சை – சிறிதளவு, ஏலக்காய் – 2.

செய்முறை: பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும். இதை அரிசியுடன் சேர்த்து, தண்ணீர் விட்டு களைந்து எடுத்து… பிறகு 7 கப் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, 4 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு பொடித்த வெல்லத்தைப் போட்டு நன்றாக கொதித்ததும் வடிகட்டி, பிறகு பாகு காய்ச்சவும். தக்காளி பதம் வருவதற்கு சற்று முன் வேக வைத்த அரிசி – பருப்புக் கலவையை சேர்த்து நன்றாக கிளறவும். கெட்டியானதும் சிறிதளவு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும் (மீதமுள்ள நெய்யையும் சேர்க்கவும்). பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, பரிமாறவும்.

எள்  சுக்கு சாதம்

தேவையானவை: அரிசி – 2 கப், எள் – 2 டீஸ்பூன், சுக்கு – ஒரு சிறிய துண்டு,  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப் பிலை, பெருங்காயத்தூள் – தாளிக்க தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை: அரிசியை உதிர் உதி ரான சாதமாக  வடித்துக் கொள்ளவும். எள்ளை கடாயில் வறுத்து தனியாக வைக்கவும். சுக்கை தட்டி பொடி செய்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, சுக்குப் பொடி, சாதம் சேர்த்துக் கிளறி… எள் பொடி, உப்பு சேர்த்துக் கலந்து இறக்கவும்.

வெண் பொங்கல்

தேவையானவை: அரிசி – 2 கப், பாசிப்பருப்பு – கால் கப், மிளகு, சீரகம் – தலா  2 டீஸ்பூன்,  நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு களைந்து எடுத்து, 7 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைக்கவும். 4 விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் நெய் விட்டு மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, வேக வைத்த அரிசி – பருப்பு கலவையை சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

திருவாதிரை கூட்டு

தேவையானவை: நறுக்கிய பூசணிக்காய், பரங்கிக்காய், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, சௌசௌ, உருளைக்கிழங்கு (சேர்த்து) – 2 கப்,  வேக வைத்த துவரம்பருப்பு – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு, வேக வைத்த கொண்டைக் கடலை – அரை கப், தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ் பூன், தேங்காய் துருவல் – அரை கப், காய்ந்த மிளகாய் – 6, கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் – சிறிதளவு, கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.


செய்முறை: காய்களை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெயில் வறுத்து, தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் புளிக்கரைசலை விட்டு, அரைத்த விழுது துவரம்பருப்பு, கொண்டைக்கடலை எல்லாவற்றையும் சேர்த்து, உப்பு சேர்த்து, காய்களை சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.

உளுந்தோரை

தேவையானவை:  உளுந்து – அரை கப், அரிசி – ஒரு கப், காய்ந்த மிளகாய்  – 3, மிளகு – 4, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, வேர்க்கடலை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை உதிர் உதிரான சாதமாக  வடித்துக் கொள்ளவும். உளுந்து, காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பொடித்து வைக்கவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளித்து, உளுந்து பொடியையும், சாதத்தையும் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து இறக்கவும்.

மிளகோரை

தேவையானவை: அரிசி – ஒரு கப், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை உதிர் உதிரான சாதமாக வடித்துக் கொள்ளவும். வெறும் கடாயில் மிளகு, ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு இரண்டையும் வறுத்து, பொடி செய்து வைக்கவும்.

கடாயில் நெய் விட்டு கடுகு, மீதியுள்ள உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளித்து… செய்து வைத்திருக்கும் பொடியை சேர்த்து ஒரு புரட்டு புரட்டி, சாதத்தை சேர்த்துக் கிளறி, உப்பு சேர்த்துக் கலந்து இறக்கவும்.

இதை வேர்க்கடலை சேர்க்காமலும் செய்யலாம்.

கதம்ப சாதம்

தேவையானவை: அரிசி – 2 கப், துவரம் பருப்பு – ஒரு கப், கேரட் – ஒன்று (நறுக் கவும்), பூசணிக்காய், பரங்கிக்காய் – தலா ஒரு கீற்று (நறுக்கவும்), நறுக்கிய குடமிளகாய் – சிறிதளவு, பீன்ஸ், கத்திரிக்காய், சௌசௌ, பச்சைப் பட்டாணி (சேர்த்து) – 2 கப், தனியா – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத் தம்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந் தயம் –  ஒரு டீஸ்பூன், கடுகு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, புளிக்கரைசல் – ஒரு கப்,  தேங்காய் துருவல் – அரை கப், காய்ந்த மிளகாய் – 8, வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு, எண்ணெய் – அரை கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, துவரம்பருப்பை குக் கரில் தனித் தனியாக வேக வைக்கவும். நறுக்கிய காய்களை தனியாக வேக வைக்க வும். தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் கடுகு ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து, தேங்காயுடன் சேர்த்து விழுதாக  அரைத்து வைக்கவும். அடிகனமான கடாயில் பருப்பு, காய்கள், புளிக்கரைசல், அரைத்து வைத்த விழுது, உப்பு… எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, பிறகு சாதம் சேர்க்கவும். கடைசியில் ஒரு டீஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வேர்க்கடலை ஆகியவற்றை எண்ணெயில் தாளித்து சேர்த்து… நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.

கசகசா  வெள்ளரி விதை சாதம்

தேவையானவை: அரிசி – ஒரு கப், கசகசா, வெள்ளரி விதை – தலா கால் கப், காய்ந்த மிளகாய் – 4, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு,  எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியை உதிர் உதிரான சாதமாக  வடித்துக் கொள்ளவும். கச கசாவை சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலி யில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து… வெள்ளரி விதையை சேர்த்து, சாதத்தையும் சேர்க்கவும். பிறகு உப்பு, கசகசா பொடி சேர்த்துக் கலக்கி, இறக்கவும்.

காஞ்சிபுரம் இட்லி

தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி – தலா ஒரு கப், உளுந்து – ஒன்றரை கப், மிளகு, சீரகம், சுக்குப் பொடி – தலா ஒரு டீஸ்பூன், பெருங் காயத்தூள், கறிவேப்பிலை – சிறி தளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைத்து… உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு, கொரகொரப் பாக (ரவை போல்) அரைத்து, இட்லி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.  மாவு நன்றாக பொங்கியதும், கடாயில் எண்ணெய் விட்டு பொடித்த மிளகு, சீரகம், சுக்குப் பொடி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்து, மாவில் சேர்க்கவும். பாத்திரத்தில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி ஆவியில் வேக வைக்கவும். (சுமார் 15 நிமிடம்). பிறகு, தட்டில் கவிழ்த்துப் போட்டு ‘கட்’ செய்து பரிமாறவும். மாவை எண்ணெய் தடவிய சிறிய கப்களில் ஊற்றியும் ஆவியில் வேக வைக்கலாம்.

புளி அவல்

தேவையானவை: கெட்டி அவல் – ஒரு கப், புளிக்கரைசல் – ஒரு கப், தனியா – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – சிறிதளவு, வெந்தயம் – அரை டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை, கறிவேப்பிலை – சிறிதளவு, வெல்லம் – ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அவலைக் கழுவி புளிக்கரைசலில் ஊற வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து அவலுடன் சேர்க்கவும். பிறகு, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், பொடித்த வெல்லம் ஆகியவற்றை சேர்த்து ஒரு மணி நேரம் அப்ப டியே வைக்கவும். கடாயில் எண் ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க் கடலை, கறிவேப்பிலை தாளித்து, அவல் கலவையை சேர்த்து, நன்றாக கிளறி இறக்கவும்.

தத்யோன்னம்

தேவையானவை: அரிசி – ஒரு கப், தேங்காய் – ஒரு மூடி, தயிர் – ஒரு கப், கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் குழை வான சாதமாக வடித்துக் கொள்ள வும். சாதத்தை  நன்றாக கரண்டியால் மசித்து ஆறவிடவும். தேங்காயை அரைத்து பால் எடுக்கவும். சாதம் ஆறியதும், அதனுடன் தயிர் சேர்க்கவும். பிறகு நெய்யில் கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும். பின்னர் தேங்காய்ப் பால், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதனுடன் மாதுளம் முத்துக்கள், பச்சை திராட்சை சேர்த்தும் பரிமாறலாம்.

கல்கண்டு பாத்

தேவையானவை: அரிசி – ஒரு கப், பால் – 3 கப், கல்கண்டு – ஒன்றரை கப், நெய் – ஒரு கப், முந்திரி – சிறிதளவு, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, திராட்சை, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பச்சைக் கற்பூரம் – கடுகளவு.

செய்முறை: அரிசியைப் பால் விட்டு குக்கரில் குழைவாக வேக வைக்கவும். கல்கண்டை தேவையான நீர் சேர்த்து பாகு வைக்கவும். கம்பி பதம் வந்ததும் குழைந்த சாதத்தை சேர்த்துக் கிளறவும். இதனுடன் குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பிறகு, நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து சேர்த்து (நெய்யையையும் சேர்க்கவும்), கிளறி இறக்கவும்.

திருவாதிரை களி

தேவையானவை: அரிசி – ஒரு கப், பொடித்த வெல்லம் – ஒன்றரை கப், தண்ணீர் – இரண்டரை கப், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு கப், முந்திரி, ஏலக்காய்த்தூள், நெய் – சிறிதளவு.

செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். அரிசியை ரவை போல் உடைத்துக் கொள்ளவும். அரிசி ரவையில் தண்ணீர் தெளித்துப் பிசிறி, ஆவியில் வேக வைக்கவும்.  கடலைப்பருப்பு, பாசிப்பருப்புடன் நீர் சேர்த்து, குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்.

வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்துக் காய வைத்து வடிகட்டி, கொதிக்கவிடவும். கொதிக்கும் பாகில் அரிசி ரவை, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து, கொஞ்சம் நெய் விட்டு கிளறவும். இது வெந்ததும், நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளை தூவிக் கலந்து இறக்கவும்.

திருப்புல்லாணி பாயசம்

தேவையானவை: அரிசி – ஒரு கப், தேங்காய் – அரை மூடி, பொடித்த வெல்லம் – ஒன்றரை கப், ஏலக்காய் – 2.

செய்முறை: அரிசியை வறுத்து, ஒரு கப் அரிசிக்கு 3 கப் என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும் (ரொம்ப குழையக் கூடாது). தேங்காயை துருவி… முதல் பால் எடுத்து தனியாக வைக்கவும். பிறகு, இரண்டாவது பால் எடுக்கவும். வெந்த சாதத்தில் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி, இரண்டாவது தேங்காய்ப் பாலை விட்டு கொதிக்கவிடவும். கடைசியில், முதல் தேங்காய் பாலை விட்டு, 2 நிமிடம் வைத்து இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

கோயில் புளியோதரை

தேவையானவை:  அரிசி – 2 டம்ளர், புளி – 100 கிராம், வெந்தயம், மிளகு – தலா ஒரு டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10 (அல்லது தேவைக்கேற்ப), கடுகு – 2 டீஸ்பூன்,  கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – சிறிதளவு, வெல்லம் – ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.


செய்முறை: அரிசியைத் தண்ணீரில் களைந்து எடுத்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய், மஞ்சள்தூள், 4 டம்ளர் நீர் சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளவும். தட்டில் சாதத்தை ஆற வைக்கவும். வெந்தயம், தனியா, காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் கடுகு, மிளகை வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்து வைக்கவும். புளியைக் கரைத்து வைக்கவும். கடாயில் மீதமுள்ள எண்ணெயை விட்டு… மீதமுள்ள கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து… புளிக்கரைசலை சேர்த்து உப்பு, வெல்லம் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு, கெட்டியானதும் அரைத்து வைத்த பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஆறியதும் சாதத்தில் சேர்த்துக் கலக்கவும்.

புதன், 6 டிசம்பர், 2017

வெஜ் கட்லெட் லொலிபொப்



வெஜ் கட்லெட் லொலிபொப்

தேவையான பொருட்கள்:

சர்க்கரைவள்ளி கிழங்கு - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 50 கிராம்
கரட் - 50 கிராம்
கோலி ஃ ப்ளவர் - 50 கிராம்
பனீர் - 50 கிராம்
முட்டைகோஸ் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
இஞ்சி, பூண்டு - சிறிதளவு
மிளகாய் தூள் - 1/2 தே.க
கரம்மசாலா - 1/2 தே.க
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
சோளமா (Corn flour) - 2  மே.க
பிரெட்தூள் - தேவைக்ககு
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

கிழங்கு வகைகளை வேகவைத்து மசிக்கவும். மற்ற காய்கறிகளை பொடியாக நறுக்கவும்.
எண்ணெயை காயவைத்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு இஞ்சி, பூண்டு, கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு, பனீர், கோலி ஃப்ளவர், முட்டைகோஸ் போன்றவற்றை ஒவ்வொன்றாக வதக்கி ஆறவைத்து அதில் மசித்து வைத்துள்ள கிழங்கு வகைகள், கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து பிசைந்து லாலிபாப் சைசில் பிடித்து, அதை பிடித்து சாப்பிட கேரட்டை 2 இன்ச் நீளம் நீளவாக்கில் கட் செய்து லாலிபாப்பில் சொருகவும்.
கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் லொலிபொப்பை தோய்த்து பிரெட் கிரம்ஸில் கோட்டிங் கொடுத்து வைக்கவும். எண்ணெயை காயவைத்து டீப் ஃப்ரை செய்து எடுக்கவும். வெஜ் கட்லெட் லொலிபொப் ரெடி.

நீங்கள் வாங்கும் ஆயில் உடம்புக்கு நன்மை விளைவிக்குமா அல்லது தீமை விளைவிக்குமா ஏன் இவ்வளவு புது புது நோய்கள், என்றாவது எண்ணி பார்த்தது உண்டா ?



அனைவருக்கும் பகிரவும் உங்கள் குடும்பம் நோய் நொடி இலல்லாமல் வாழ...

நீங்கள் வாங்கும் ஆயில் உடம்புக்கு நன்மை விளைவிக்குமா அல்லது தீமை விளைவிக்குமா ஏன் இவ்வளவு புது புது நோய்கள், என்றாவது எண்ணி பார்த்தது உண்டா ?

உடலில் உள்ள செல்கள் ,மூட்டுகளில் உள்ள அசைவு கொடுக்கும் செல்கள் மற்றும் சுரப்பிகள் (ஹார்மோன்கள் )இயங்க கொழுப்பு மிகவும் முக்கியம் தாவர கொழுப்புகளில் நேரடி கொலஸ்ட்ட்ரல் கிடையாது .தவிர பல விட்டமின்கள் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது பள்ளி கூடத்தில் படித்ததை நினைவு படுத்தி கொள்ளுங்கள் .

உடலை என்றும் இளமையுடனும் பளபளப்பாகவும் 0புத்துணர்வுடன் வைத்து கொள்ளும் தன்மை தாவர என்னைக்கு உண்டு .இயற்கை தாவர எண்ணெய்கள் உடலிலும் ரத்த குழாய்களிலும் கொழுப்பை சேர்க்காது .தொப்பை விழாது பாதுகாக்கும் .இயற்கையில் கிடைக்கும் கடலை எண்ணெய் ,தேங்கா எண்ணெய் ,வேப்ப எண்ணெய் ,விளக்கென்னை , நல்லெண்ணெய் ஆகிய வற்றில் பல வைட்டமின்கள் குறிப்பாக அண்டி ஆக்சிடண்ட்கள் வைட்டமின் , தாது உப்புகளான இரும்புசத்து ,துத்தநாகம் ,மக்னேசியம் ,செம்பு ,கால்சியம் முதலானவை உள்ளன . இந்த தாது பொருட்கள் முலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருட்கள் நம் கை , கால் முட்டுகளுக்கு சென்று எலும்பு தேய்மானத்தை தடுக்கும் .இவை தான்
எண்ணெய்யின் உண்மையான குணங்கள் .
அனால் இன்றைக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது இல்லை , ரத்தகொதிப்பு ,மாரடைப்பு ,உடல் பருமன், கேன்சர்,என்று எல்லா வற்றிற்கும் எண்ணெயை குறை சொல்ல தொடங்கி விட்டோம்

ஆனால் இதற்கெல்லாம் காரணம் ரீபைண்ட் மற்றும் டபுள் ரீபைண்ட் என்று நவீன முறைகள் முலம் கெடுப்பது தான் .இன்றைக்கு புற்றுநோய் ,முட்டுவலி ,போன்ற வற்றுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்துவதே காரணம் .எண்ணெய் சுத்திகரிக்கப்பட பயன்படுத்தும் வேதி பொருட்கள் உடல் நலத்துக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்துபவை. சமையல் எண்ணெய் களை எப்படி சுத்திகரிக்க படுகின்றன என்பதை பார்த்தால் நான் சொன்னதில் உள்ள உண்மை தெரியவரும் பல உல் நாட்டு கம்பனிகள் பெரிய பெரிய இரும்பு இயந்திரங்கள் முலம் கடலை மற்றும் எள்ளை ஆட்டி எண்ணெய் பிழிவர்கள்
அப்போது கடுமையான வெப்பம் இரும்பு உலக்கை உருளை களுக்கு இடையே ஏற்படும் .அந்த வெப்பத்தால் இயற்கையாகவே எண்ணெய்களில் மறைந்திருக்கும் சில அதிசியமான மருத்துவ குணம் குறைந்து போய்விடும் .

இன்று நாம் சமையலுக்கு வாங்கும் ரீபைண்ட் ஆயில்
இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தையும், அதன் கொழகொழப்புத் தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதையே இன்றைக்கு ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் சுத்திகரிப்பு என்று சொல்கிறார்கள். இதற்குச் சோப்புத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் காஸ்டிக் சோடா என்ற சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர் கந்தக அமிலம், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை எண்ணெயில் சேர்க்கிறார்கள். இந்தக் காஸ்டிக் சோடா எண்ணெயில் உள்ள கொழுப்பைப் பிரித்து சோப் ஆயிலாகமாற்றிவிடுகிறது. அந்த சோப் ஆயிலைத் தனியே நீக்கிவிடுவார்கள். எண்ணெயின் நிறத்தைப் போக்க பிளிச்சிங் பவுடர். பின் இந்த வேதிப் பொருள்களையெல்லாம் நீக்கி விட்டு தெளிவான எந்த மருத்துவ குணமும் இல்லாத வேதிய அமிலம் (எண்ணெய்) கிடைக்கும்.

அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு நீக்கிவிடும். இந்த ரீஃபைண்ட் கடலை எண்ணெய், ரீஃபைண்ட் நல்ல எண்ணெய் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். இறுதியாக அந்தந்தக் கம்பெனிகள் தங்களுக்கு என்று நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கிறார்கள்...

சமையலுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்தும் பொழுது சுடு தங்காமல் உருக்குலைந்து (உருக்குலையும் பொழுது தான் பிசுபிசுப்பு தன்மை பாத்திரங்களில் மற்றும் உங்கள் சமையல் கட்டுகளில் ஒட்டி கொள்கிறது ) உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது
இந்த பிசுபிசுப்பு தன்மை நாம் சாப்பிடும் பண்டங்களிலும் இருப்பதால் நாம் உடல்களில் உள்ள நல்ல செல்களில் இணையந்து அந்த செல்லின் வேலைகளை தடுக்கிறது அதுவே பின் நாட்களில் பல வியாதிகளுக்கு நாம் ஆளாகிறோம் .

இப்போதெல்லாம் பதினைந்து வயதிலேயே முடி நரைத்து விடுகிறது முடியின் இயற்கை நிறம் மாறிவிடுகிறது. மூட்டுக்களில் தேய்மானம் மற்றும் மற்றும் மூட்டு வலி ஏற்படுகிறது அதுமட்டுமில்லாமல் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில் தங்கியுள்ள கந்தகஅமிலம் ,மனித உடலில் உள்ள எலும்பை பலவீனம் அடைய செய்து விடும் .
பரம்பரிய எண்ணெய் நல்லதுதான்!

நம் முன்னோர்கள் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும், கடலை எண்ணெயையும், நல்லெண்ணையையும் அப்படியே (எந்தப் பிரத்யேக வடிகட்டுதலும் இன்றி வெய்யிலில் காயவைத்து) உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், கொழகொழப்பாகவும் இருக்கும் இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள்,உயிர் சத்துக்கள் தான் ,உடல் ஆரோக்யத்திற்கு தேவையான ப்ரோடீன்கள் ,வைட்டமின்கள் ,தாது பொருட்கள் ,நார்சத்துக்கள்,குளோரப்பில்.கால்சியம் ,மாக்னீசியம் ,காப்பர் ,இரும்பு ,பாஸ்பரஸ் வைட்டமின் போன்றவையுடன் அறிவியல் அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும் இவற்றில் இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன .உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் கொடுக்கும் எண்ணெய்கள் இவை .
செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் அது உடலில் தேவையட்ட்ற கொலஸ்ட்ட்ரலை குறைக்கும் .செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் தாய்பாலுக்கு இணையான பல நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட அமிலங்கள் உள்ளது .செக்கில் ஆட்டிய விளகெண்ணை அனப்படும் ஆமனெக்கு எண்ணெயில் ரிசிநோலியிக் அசிட் அதிகம் உள்ளது .இந்த அசிட் ஒரு சிறந்த அண்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரி செய்ய கூடியது தவிர குடல் சுத்திகரிப்புக்கும் ஏற்ற தன்மை கொண்டது இந்த எண்ணெய் அழகு பராமரிப்பில் பயன் படுத்தினால் சருமம் அழகாவதோடு ,கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும் .குதிகால் வெடிப்புகள் இருந்தால் தினமும் விளகெண்ணை தடவி வர குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி வெடிப்புகளும் விரைவில் போய்விடும் (நாம் கடைகளில் வாங்கும் பிரான்ச் ஆயில் வேறொன்றும் இல்லை )

செக்கில் அட்டிய நல்லெண்ணெய் நோய் மற்றும் முதுமையை தடுக்கும் வைட்டமின் ஈ யும் கொலஸ்ட்ட்ரலை குறைக்கும் "லெக்சீதீன்" என்ற பொருளும் உள்ளது எள்ளிலிருந்து எடுக்கப்படும்
எண்ணைக்கு நிகரே இல்லை எனலாம் .அதனாலையே இதற்கு " குயின் ஆப் ஆயில் " என்றும் அழைகிறார்கள் மூல தொந்தரவு , மாத விலக்கு தொந்தரவு முச்சுகுழல் பிரச்சனைகள் ,சரும பிரச்சனைகள் முதலிய பிரச்சனை உள்ளவர்கள் நல்லெண்ணை தொடர்ந்து பயன்படுத்த இந்த தொந்தரவுகள் நீங்கும் .செசாமின் என்ற பொருள் நல்லெண்ணையில் இருப்பதால் வாதம் ,இதய நோய் வராமல் முன் கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுபாட்டில் வைத்து கொள்கிறது .

வாழ்க்கையில் வெறுப்பு கவலை மனச்சோர்வு முதலியவற்றை தடுக்கும் பைரோரெசினால் என்ற அமில பொருளும் நல்லெண்ணையில் இருக்கிறது .


மரசெக்கு எண்ணெய் என்றால் என்ன ?

செக்கு என்பது எண்ணெய் வித்துக்க்களில் (கடலை,தேங்காய், எள்ளு,ஆமணக்கு)இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி .செக்கானது மரத்தலோ ,கல்லாலோ செய்யபட்டிருக்கும் .செக்கின் அடி மரம் புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்க படுகிறது ஆரம்ப காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளை பயன்படுத்தி வந்தனர் தற்பொழுது மின்சாரம் அல்லது எரிபொருள் முலம் இயக்கபடுகிறது .பழைய கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துகளை நசுக்கும்படியாக உலக்கை கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துகளில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும்
செக்கில் நல்லெண்ணெய் ஆட்டுவதற்கும் சுத்தம் செய்த எள் கருப்பட்டி அல்லது நட்டு சக்கரை (ஆட்டும் பொழுது ஏற்படும் வெப்பத்தை தணிக்க ) சேர்த்து ஆட்டுவது வழக்கம் சிறிது சிறுதாக ஒரே வேகத்தில் மரத்திலான செக்குகளை சுழல வைப்பதின் முலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும் .மரசெக்கில் கருபட்டியுடன் சேர்த்து எள்ளை ஆற்றும் பொழுது அவளவாக வெப்பம் ஏறாது .அபப்டியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சம்மாக்கள் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது .இப்படி மரசெக்கில் ஆட்டி பிழிந்து எடுக்கப்படும் நல்லெண்ணைக்கு அபாரமான மனமும் குணமும் இருப்பது இயற்க்கை .இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மனம், மருத்துவ குணம் சுவை இதெல்லாம் அலாதி தான் .

மரசெக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும் அனால் நல்ல ருசியுடன் ஒரு வருட காலத்திற்கு கெட்டுபோகாமலும் இருக்கும் ஒரு முறை மரசெக்கு எண்ணெய் சாப்பிட்டால் ...அதன் ருசி கால கால காலத்திற்கும் மறக்காது .இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும் குழம்பு வறுவல் பொரியல் முறுக்கு அதிரசம் வடை என்று எல்லாவிதமான உணவு வகைகளையும் இந்த செக்கில் ஆட்டிய எண்ணெய்களில் சமைக்கலாம்.

இப்பொழுது சொல்லுங்கள் கருப்பு நல்லதா ? வெள்ளை நல்லதா என்று ? வெறும் நிறங்களில் இல்லை வாழ்க்கை பாரம்பரியம் மிக்க நம் முன்னோர் காட்டிய வாழ்வியல் முறைக்கு மாற்றுங்கள் மாறுங்கள் நாளை உங்கள் சந்ததியினரை நோய் நொடி இல்லாமல் விட்டு செல்லுங்கள்.


வேர்க்கடலையை ஏன் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா?


வேர்க்கடலையை ஏன் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா?

குளிர்காலத்தில் அதிகம் விலையும் பயிர் வேர்க்கடலை, இதை நம் முன்னோர்கள் தங்களது உணவில் குளிர்காலத்தில் அதிகம் சேர்த்து கொள்வதற்கான காரணம் இது குளிர்கால பயிர் என்பது மட்டுமல்ல இந்தக் காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதினால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதும் தான்.
உடலை உஷ்ணமாக வைத்திருக்கும்:

வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கக் கூடிய ஒன்று. இதனால் குளிர்காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் நமது உடல் இருக்கும். பொதுவாகக் குளிர்காலத்தில் நமது கல்லீரல் நல்ல ஆரோக்கியத்துடன் செயற்படும் என்பதால் எண்ணெய் நிறைந்த உணவுகளையும் அதனால் எளிதாக செரிமானம் செய்ய முடியும்.
கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும்:

வேர்க்கடலை எண்ணெய் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை தரக்கூடும் என்று ஆராய்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள், இதனால் பித்தக்கட்டிகள் உருவாவதற்கான அபாயம் குறைகிறது.
சர்க்கரை அளவைச் சரி செய்யும்:

வேர்க்கடலையில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவைச் சீர் படுத்தக் கூடியது. சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் 21% வரை குறையும் என்று தெரியவந்துள்ளது.
சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்:

வேர்க்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்பு சருமத்தில் எண்ணெய் பதத்தை பாதுகாக்கும் இதனால் குளிர்காலத்தில் நமது சருமம் வறண்டு போவதை தடுக்கலாம். மேலும் வேர்க்கடலையில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் சி சத்துக்கள் சருமத்தின் பொலிவை அதிகரிப்பதுடன், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கும். வேர்க்கடலையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் அப்பழுக்கற்ற சருமத்தை தரக்கூடியது.
ஆகையால் குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை நாம் பெறலாம். வேர்க்கடலையை அதிகம் சாப்பிடுவதும் செரிமான கோளாறை ஏற்படுத்தி வயிற்று வலி ஏற்படச் செய்யும். ஒருவேளை உங்களுக்கு வேர்க்கடலை சாப்பிடுவது ஒவ்வாது என்றால் அதைச் சாப்பிட முயற்சிக்காதீர்கள். குளிர்காலத்தில் உங்களது கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால் வேர்க்கடலை சாப்பிடுவதற்கான சரியான காலம் இதுதான் என்பதை மறந்து விடாதீர்கள்.


திங்கள், 4 டிசம்பர், 2017

கோதுமையின் தீமைகள் ...



கோதுமையின் தீமைகள் ...

 அந்தந்த நாடுகளின், அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவை, அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் உண்டு வந்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியம். அமெரிக்காவின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஓர் உணவை, இந்தியாவில் சாப்பிட்டால் அது என்ன மாதிரியான விளைவைத் தரும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் புரியும்.

இன்னும் எளிமையாக சொன்னால் ஆற்று நீரில் வாழும் மீன், கடல்நீரில் செத்துப் போய்விடும். கடல்நீரில் வாழும் மீனை ஆற்றில் கொண்டுவந்துவிட்டால் அதனால் வாழ முடியாது. உணவின், ஆரோக்கியத்தின் அடிப்படை இந்தத் தத்துவம்தான். ஆனால் விளம்பர மாயைகளுக்கும், மோசடியான உணவு அரசியலுக்கும் நாம் பலியாகிவிட்டோம் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. தேங்காய் ஆபத்து, கடலை ஆபத்து, அரிசியால் ஆபத்து என்று இந்திய மண்ணில் விளையும் எல்லா உணவுவகைகளையும் ஆரோக்கியக் கேடு என்று நம்ப வைத்து ஓட்ஸையும், ரீஃபைண்ட் எண்ணெய்களையும் நம் தலையில் கட்டிவிட்டார்கள்.

அதே போன்றதொரு மோசடிதான் இந்த சப்பாத்தி மோசடியும். இது தமிழர்களைக் குறிவைத்த வட இந்திய அரசியல் என்று உள்ளூர் லெவலில் புரிந்துகொள்ளலாம். வில்லியம் டேவிஸ் என்ற அமெரிக்க இதயநோய் நிபுணர் ஆரோக்கிய விழிப்புணர்வு தரும் எண்ணற்ற புத்தகங்களை எழுதியவர். இவர் எழுதிய ‘Wheat Belly’ என்ற புத்தகம் பரபரப்பாக பேசப்பட்டு, விற்பனையில் புதிய உச்சத்தை சமீபத்தில் எட்டிப்பிடித்திருக்கிறது.

கோதுமை ஒரு விஷம் என்பதுதான் இந்த புத்தகத்தின் சாராம்சம். ‘‘இதயநோய்களுக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சைகளை செய்து வருபவன் நான். என்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் படும் துயரங்களைப் பார்த்து மிகுந்த வேதனைப்பட்டிருக்கிறேன். ஆஞ்சியோப்ளாஸ்டி என்பது இதயநோய்க்காக செய்யும் ஒட்டுவேலைதான் என்பதை கொஞ்ச நாளிலேயே உணர்ந்துகொண்டேன். அதனால், இதற்கான மூலகாரணத்தைக் கண்டறியவேண்டும் என்று முடிவு செய்தேன்.

முக்கியமாக, என்னுடைய அம்மாவே மாரடைப்பால் இறந்தது எனக்கு மிகப்பெரிய துக்கத்தைக் கொடுத்தது. அதனால், கடந்த 15 வருடங்களாக இதயநோய் சம்பந்தமான ஆராய்ச்சியிலேயே முழுவதுமாக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இத்தனை வருட ஆய்வின் பலனாக உருவானதுதான் நான் எழுதிய ‘Wheat belly’ எனும் புத்தகம்” என்று தன் புத்தகம் பற்றிக் கூறுகிறார் டேவிஸ். ‘நோய்களை உருவாக்குவதில் கோதுமையின் பங்கு முக்கியமானது என்பது தெரிந்து அதிர்ந்து போனேன்’ என்று டேவிஸ் கூறுவதுதான் இதில் ஹைலைட்.

‘‘நம்மில் பெரும்பான்மையோர் இன்று சந்திக்கும் முக்கிய நோய்களான நீரிழிவு, உடல்பருமன் மற்றும் இதயநோய்களுக்கு மூலகாரணமாக இருப்பது நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் கோதுமையே. நம் உணவிலிருந்து கோதுமையை நீக்கிவிட்டால் நம் வாழ்க்கையே மாறிவிடும். கோதுமை, உங்கள் ரத்த சர்க்கரை அளவை ஆச்சர்ப்படும் வகையில் அதிகரிக்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடல் எடை குறைக்கவும் கோதுமை பிரட் சாப்பிடலாம் என நினைக்கிறோம். உண்மையில் 2 ஸ்லைஸ் கோதுமை பிரட், ஒரு சாக்லேட் பாருக்கு இணையானது. கோதுமை சாப்பிடாத நோயாளிகளின் உடல் எடையில் ஒரு மாதத்துக்குள்ளாகவே மிகப்பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது.

என்னிடம் வரும் நீரிழிவு நோயாளிகளில் 80 சதவீதத்தினர் கோதுமை உணவை எடுத்துக் கொள்பவர்களாக இருந்தார்கள். அவர்களை கோதுமையைத் தவிர்க்கச் செய்து சோதித்ததில் 6 மாதங்களுக்குப் பிறகு அவர்களிடத்தில் ரத்த சர்க்கரை அளவு வெகுவாக குறைந்ததை உணர்ந்தனர். இதுமட்டுமல்ல, பல நோயாளிகள் தங்கள் கோதுமை அனுபவங்களையும் கூறியது கேட்டு வியந்துபோனேன். ‘கோதுமை சாப்பிடுவதை நிறுத்தியபின் என்னுடைய இன்ஹேலர்களை தூக்கி எறிந்துவிட்டேன்’ என்று ஒரு ஆஸ்துமா நோயாளி கூறினார்.

‘15 வருடங்களாக மைக்ரேன் தலைவலிக்காக மருந்துகள் சாப்பிட்டுக்  கொண்டிருந்தேன். மூன்றே நாட்களில் வலிபோய்விட்டது. மருந்துகளைநிறுத்திவிட்டேன்’ என்றார் ஒருவர். ‘20 வருடங்களாக நெஞ்செரிச்சலால் அவதிப்பட்டேன். கோதுமையை நிறுத்திய பிறகு நிம்மதியாகத் தூங்குகிறேன்’ என்பது இன்னொருவரின் வாக்குமூலம்.

இதேபோல கோதுமை உணவைத் தவிர்த்ததால் மூட்டுவலி, கொலஸ்ட்ரால் போன்ற நோய்களிலிருந்தும் தாங்கள் விடுபட்டதாக பல நோயாளிகள் என்னுடைய ஆய்வில் சொல்ல ஆரம்பித்தனர். ‘க்ளூட்டனைத்தவிர Gliadin, Amylopectin என உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களும் கோதுமையில் இருக்கிறது. ‘Gluten Free’ என்று அச்சிடப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களில், அதற்கு பதிலாக சேர்க்கப்படும் சோளமாவு, அரிசிமாவு மற்றும் உருளைக்கிழங்கு மாவுகள் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடியவை. இந்தப்பொருட்களும் தவிர்க்கப்பட வேண்டியவையே’’ என்கிறார் வில்லியம் டேவிஸ்.

உணவியல் நிபுணர் லஷ்மியிடம் இந்த கோதுமை சர்ச்சை பற்றிக் கேட்டோம்...

‘‘கோதுமை பற்றிய பெரிய மாயையை உடைத்திருக்கிறது வில்லியம் டேவிஸின் ஆராய்ச்சி. இதில் யாருக்குப் பலன் இருக்கிறதோ இல்லையோ, தமிழர்களுக்கு நல்ல பாடம் இருக்கிறது. தென்னிந்தியாவின் சீதோஷ்ண நிலைக்கு, நம் மண்ணில் விளையும் அரிசி உணவுகளே ஆரோக்கியமானவை என்பதை இதன் மூலம் அழுத்தமாகப் புரிந்துகொள்ளலாம். அரிசியில் பாலீஷ் செய்யப்பட்ட அரிசி வகைகளைத்தான் நாம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் தீட்டப்படாத அரிசி உணவே மிகவும் சிறந்தது.

கோதுமையில் இருக்கும் ஒரே நல்ல விஷயம், அதன் நார்ச்சத்து காரணமாக சப்பாத்தியைக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே நம்மால் சாப்பிட முடியும் என்பதுதான். வட இந்தியர்கள் கோதுமையை பிரதான உணவாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பது அவர்களின் தட்பவெப்பநிலையையும், மரபணுக்கள் அமைப்பையும் பொறுத்தது. நாமும் அதைப் பின்பற்ற வேண்டியதில்லை. நம்ப வேண்டியதும் இல்லை. அரிசி உணவுடன் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றையும் சரிவிகிதத்தில் எடுத்துக் கொண்டால் எந்த நோய்
நொடிகளும் நம்மை அண்டாது!