வியாழன், 7 செப்டம்பர், 2017

ரைஸ் கோகனட் புரோட்டா


ரைஸ் கோகனட் புரோட்டா


என்னென்ன தேவை?

கோதுமை மாவு  2 கப்,
துருவிய தேங்காய்   1/2 கப்,
வேகவைத்த சாதம்  1 கப்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  4 (அ) 5,
துருவிய இஞ்சி  1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை  ஒரு கைப்பிடி,
ஓமம்  1/2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு  1 டீஸ்பூன்,
உப்பு  தேவைக்கு,
எண்ணெய்  1 டேபிள்ஸ்பூன்,
நெய் 2 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கோதுமை மாவை, தண்ணீர் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். இதை பெரிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். சாதத்தை மசித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். இதில் மசித்த சாதத்தை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். பிறகு தேவையான உப்பு, துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைத்து, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி, ஓமம் சேர்த்துக் கலந்து, ஆறியதும் சிறு  உருண்டைகளாக்கவும்.

இதுதான் ஸ்டஃப் செய்ய வேண்டிய பூரணக் கலவை. பிசைந்த கோதுமை மாவை எடுத்து, சிறிய பூரி அளவு இட்டு, நடுவே பூரணக்கலவையை வைத்து மூடி, மாவைத் தொட்டுக் கொண்டு புரோட்டாஇடவும். இதைச் சூடான தோசைக் கல்லில் போட்டு, வெந்ததும் திருப்பி போட்டு, சுற்றிலும் நெய் விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து, மேலே வெண்ணெய் தடவி சூடாகப் பரிமாறவும். இதற்குத் தொட்டுக் கொள்ள தயிரில் சிறிது சாட் மசாலா தூவி உண்ணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக