சனி, 9 செப்டம்பர், 2017

வெங்காய அடை



வெங்காய அடை


என்னென்ன தேவை?

புழுங்கல் அரிசி - 1 கப்,
பச்சரிசி - 1 கப்,
கடலைப்பருப்பு - 1 கப்,
துவரம்பருப்பு - 1 கப்,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்,
காய்ந்தமிளகாய் - 4,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கறிவேப்பிலை,
கொத்தமல்லித்தழை - சிறிது.


எப்படிச் செய்வது?

அரிசி வகைகள், பருப்பு வகைகள் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு ஊறவைக்கவும். அரைக்கும் போதே காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சோம்பு சேர்த்து அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழையை சேர்த்து கலக்கவும். தோசைக்கல்லை காயவைத்து அடை மாவை ஊற்றி எண்ணெய் + நெய் சுற்றிலும் ஊற்றி, இருபக்கமும் முறுக விட்டு எடுக்கவும். கதம்ப சாம்பார், தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக