பாதாம் மில்க் அல்வா.
என்னென்ன தேவை?
பாதாம் பருப்பு - 100 கிராம்
ஜீனி - 150 கிராம்
நெய் - 50 கிராம்
பால் - 100 மில்லி
பாதாம் எசன்ஸ் - சிறிதளவு
மஞ்சள் புட் கலர் - அரை ஸ்பூன்
எப்படி செய்வது?
பாலை நன்றாக கொதிக்க விட்டு, ஆற வைக்கவும். பாதாம் பருப்பை 2 மணிநேரம் ஊற விட்டு, தோல் நீக்கி பாலுடன் சேர்த்து, விழுது போல அரைக்கவும். கனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் விழுது, ஜீனி, மஞ்சள் புட் கலர் சேர்த்து கரைய விடவும். இடையில் நெய் விட்டு கிளறவும். கலவை ஒட்டாத பதத்தில் வரும்போது பாதாம் எசென்ஸ் சேர்த்து இறக்கவும். சும்மா டேஸ்ட்டு, செமையாய் இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக