வெள்ளி, 22 செப்டம்பர், 2017

பாகற்காய் பொரியல்



பாகற்காய் பொரியல்

பாகற்காய் - 250 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி + பூண்டு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 2 சுண்டைக்காய் அளவு
எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு


பாகற்காயை மெல்லிய வட்டவில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


நறுக்கி வைத்திருக்கும் பாகற்காய் வில்லைகளை எண்ணெய்யில் போட்டு நிறம் மாறும் வரை பொரித்து எடுக்கவும். பொரித்த பாகற்காயை டிஸு பேப்பரால் ஒற்றி எண்ணெயை எடுக்கவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.


இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் எல்லா வகை பொடிகளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.


வதக்கியவற்றுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி வெல்லம், உப்பு சேர்த்து மூடி போட்டுக் கொதிக்க விடவும்.


கலவை கறிபதத்திற்கு வந்தவுடன் வறுத்து வைத்துள்ள பாகற்காயை சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.


சுவையான கசப்பில்லாத பாகற்காய் பொரியல் ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக