கலர் பூந்தி
கடலை மாவு - 1 கிலோ
(இதை 3 பங்குகளாய் பிரித்து அதில் 3 கலர்களை கலக்கவும். ஆரஞ்சு , மஞ்சள் , பச்சை )
அரிசி மாவு - 1/2 கப்
சர்க்கரை - 1 கிலோ
நெய்- 1/4 கப்
எண்ணெய்-தேவையான அளவு
சர்க்கரை பாகு தயாரிக்கும் முறை:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் 3 கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்யவும். சர்க்கரை தண்ணீரில் நன்றாகக் கரைந்து, பாகு இரண்டு விரல்களுக்கிடையில் ஒட்டும் வரை கொதிக்க விடவும்.
கடலை மாவுடன் அரிசி மாவு, கலந்து மாவு சலிக்கும் சல்லடையால் சலித்துக்கொள்ள வேண்டும்.பிறகு சிறிது சிறிதாக நீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் காய வைக்க வேண்டும்.எண்ணெய்க்கு மேலாக பூந்தி கரண்டியைப் பிடித்து ஒரு சிறு கரண்டியில் மாவை எடுத்து பூந்தி கரண்டியில் ஊற்றி லேசாக தேய்க்க வேண்டும்.பூந்தி சிறுசிறு முத்துக்களாக எண்ணெயில் விழும்.பூந்தி சிவந்து போகுமுன் எடுத்து விட வேண்டும்.பொரித்த பூந்தியை எடுத்து சர்க்கரை பாகில் போடவும். இவ்வாறு எல்லா மாவையும் பூந்தியாக போட்டு எடுத்து சர்க்கரை பாகில் போட்டு எடுத்து வைக்கவும்.
ஒவ்வொரு கலர் மாவையும் இதே போல் பூந்திகளாய் செய்து பாகில் போட்டு எடுத்து , அனைத்தையும் ஒன்றாய் கலந்து ,சூடு ஆறியதும் ஈரம் இல்லாத டப்பாவில் அடைக்கவும்.
விரும்பினால் உலர் திராட்சை, முந்திரி நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக