தினம் 4 கப் காபி: உடலில் ஏற்படும் மாற்றம் இதுதான
#Cancer #Heart Attack
ஒவ்வொரு நாளும் 4 கப் காபி குடிப்பவர்களுக்கு இறப்பின் அபாயம் 64% குறையும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தினசரி எடுத்து கொள்ளும் 2 கப் காபி அவர்கள் இறப்பின் அபாயத்தை 30% வரை குறைப்பதாக கூறுகிறது. ஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் இளைஞர்களுக்கு மட்டும் ஏற்றதாக இருக்காது என்று கூறுகின்றது.
தினம் 4 கப் காபி குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்?
காஃபின் இல்லாமல் காபி குடிப்பவர்களுக்கு இதயநோய், ஸ்ட்ரோக், செரிமானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் 7-12% குறையும்.
நம் உடலில் உள்ள ஆற்றலை அதிகரித்து, டோபமைன் போன்ற நரம்பியல் கடத்திகளை ஊக்குவித்து அதிக நியூரோன்களை எரிக்க உதவுகிறது.
அறிவாற்றல் மற்றும் மூளையின் செயல் திறனை மேம்படுத்தி, கொழுப்பை எரிபொருளாக மாற்ற உதவுகிறது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் நிலையை மேம்படுத்துகிறது.
காபியின் ஒவ்வொரு கப்பிலும் உள்ள ரிபோபிளவின், பேன்தொதெனிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் நியாசின் போன்றவை டைப் 2 சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.
ஒரு நாளில் 4 கப்புகளுக்கு மேல் பருகும் போது மனச்சோர்வு நீங்கி, கல்லீரலின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
பலவகை புற்றுநோய், இதயநோய் மற்றும் ஸ்ட்ரோக் நோய் வராமல் தடுக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக