வியாழன், 7 செப்டம்பர், 2017

சத்தான டிபன் சிறு தானிய கொழுக்கட்டை.





சத்தான டிபன் சிறு தானிய கொழுக்கட்டை.


சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கும் மிகவும் நல்லது.


*தேவையானவை :*

சிறு தானிய அரிசிக் குருணை  - ஒரு கப்,
சீரகம் -  ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் -  தேவையான அளவு,
கடுகு, கறிவேப்பிலை கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு -  தாளிக்க,
காய்ந்த மிளகாய் -  4.

*செய்முறை :*

💧 வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

💧 இதனுடன் உப்பு, மூன்று கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.

💧 பிறகு சிறுதானி அரிசிக் குருணை சேர்த்து கிளறி வேக விட்டு இறக்கவும்.

💧 ஆறியதும் சிறிய உருண்டைகளாக பிடித்து ஆவியில் 12 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

*சத்தான டிபன் சிறு தானிய கொழுக்கட்டை ரெடி.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக