குழந்தைகளுக்கு பள்ளிக்கு அனுப்பும் வகையில் புது விதமான டிபன் குறிப்புகள்.
நாம் வீட்டில் காலை உணவாக செய்யும் இட்லி சட்னி வகைகளை வைத்தே அவர்களை கவரும் டிபனாக மாற்றி அனுப்பிவிடலாம்
இதோ அந்த சமையல் குறிப்புக்கள்
இட்லி சாண்ட்விச்
***************
தேவையான பொருட்கள்
இட்லி - தேவையான அளவு
இதை பாதியாகவோ முக்கோணமாகவோ வெட்டி கொள்ளவும்
அல்லது மினி இட்லிகளாகவும் செய்து கொள்ளலாம்
சட்னி வகைகள்- கொத்தமலி சட்னி , தேங்காய் சட்னி ,தக்காளி சட்னி
இவற்றை நாம் முதலிலேயே செய்து வைத்து கொள்ளலாம்
இட்லி துண்டங்களின் மேல் இந்த சட்னி வகைகளை மாற்றி மாற்றி தடவி ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி அவற்றை கலையாமல் இ ருக்கும் வண்ணம்
நடுவில் ஒரு பல் குத்தும்குச்சியில்சொருகி அலங்காரமாக டிபன் பெட்டியில் வைத்து அனுப்பலாம்
2ஸ்டப்டு இட்லி
**************
இதே சட்னி வகைகளை வைத்து கொள்ளவும்
அல்லது பூரிக்கு செய்யும் உருளைக்கிழங்கு மசாலாவையும் உபயோகப்படுத்தலாம்
அல்லது முட்டை கோஸ் காரட் பீன்ஸ் காலிப்ளவர் குட்மிளகாயை பொடியாக அரிந்து வெங்காயம் உப்பு மசாலா பொட்டு வதக்கி கறி மாதிரி செய்து வைத்து கொள்ளவும்
அசைவ உணவுக்கு வேக வைத்த முட்டையை துண்டங்களாக வெட்டியும் வைக்கலாம்
அல்லது சிக்கனில் பொடிமாஸ் போல செய்து வைக்கலாம்
இட்லியை ஊற்றும் போது முழுவதும் ஊற்றாமல் பாதி ஊற்றி அதன்மேல்
சட்னி வகைகளையோ அல்லது விருப்பபட்ட ஸ்டப்பிங்கை சிறிது வைத்து மறுபடியும்அதன் மேல் மாவு ஊற்றி இட்லி செய்து எடுக்கவேண்டும்
இதுவே ஸ்டப்டு இட்லி
உள்ளே என்ன இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் குழந்தைகள் விரும்பி உண்பர்
3 இட்லி மன்ஞ்சூரியன்
*********************
இட்லிகள் தேவையான அளவு
அத்துடன் வெங்காயம் , பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது
சோயா சாஸ், மற்றும் கார்ன் ப்ளார் என சொல்லப்படும்சோள மாவு
செய்முறை
**********
வாணலியில் சிறிது எண்ணை விட்டு வெங் காயம் மற்றும் மேலே குறிப்பிட்டவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி சாஸ்தயாரிக்கவும்
இட்லிகளை நான்காக வெட்டி கொள்ளவும்
இரண்டு மேசை கரண்டி செய்து வைத்த சாஸில் இந்த இட்லி துண்டங்களை பிரட்டி எடுத்து அவற்றை எண்ணையில் பொரித்து எடுக்கவும்
பின் இவற்றை அந்த சாஸிலேயே போட்டு கலந்து எடுத்து பரிமாறலாம்
பிள்ளைகள் பெரியவர் இருவருமே மகிழ்ச்சியுடன் உண்பர்
இதற்கு கீமா இட்லி என்ற பெயரும் உண்டு
,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக