வெள்ளி, 22 செப்டம்பர், 2017

புதினா புலாவ்



புதினா புலாவ்

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி - 1 கப்,
பெரிய வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 3,
புதினா இலை - 1/2 கப்,
இஞ்சி - சிறு துண்டு,
பூண்டு - 4 பல், பட்டை,
கிராம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்,
நெய் + எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு-தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாஸ்மதி அரிசியைக் களைந்து 2 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். பச்சைமிளகாய், புதினா, இஞ்சி பூண்டு இவைகளை தனியே அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். குக்கரில் நெய் + எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்புத்தூள் போட்டு பொரிய விட்டு வெங்காயத்தை வதக்கி, இஞ்சி பூண்டு, புதினா, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்பு அரிசி, அளந்து வைத்துள்ள தண்ணீர், உப்பு போட்டு கலந்து 3 விசில் விட்டு இறக்கவும். சைட் டிஷ்ஷாக வெங்காய தயிர் பச்சடி அல்லது காராபூந்தி தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக