சனி, 9 செப்டம்பர், 2017

சத்து நிறைந்த சிவப்பு அவல் உப்புமா.



சத்து நிறைந்த சிவப்பு அவல் உப்புமா.


சத்துக்கள் நிறைந்த அவலை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.



*தேவையான பொருட்கள் :*

சிவப்பு அவல் - ஒரு கப்,
வெங்காயம் - ஒன்று,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

*செய்முறை :*

🕳 அவலை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

🕳 கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

🕳 கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின், நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதக்கவும்.

🕳 வெங்காயம் நன்றாக வதங்கியதும் அவலை சேர்த்து வதக்கவும்.

🕳 அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி அடுப்பை 'சிம்’மில் வைத்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.

🕳 வெந்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.


*சத்தான சிவப்பு அவல் உப்புமா ரெடி.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக