30 வகை நவராத்திரி ஸ்பெஷல் ரெசிபி---30 நாள் 30 வகை சமையல்,
நவராத்திரி கொண்டாடப்படும் நாட்களில் இல்லத்தில் உற்சாகம், மகிழ்ச்சி பொங்கி வழிவது கண்கூடான காட்சி! நவராத்திரி சமயத்தில் செய்து மகிழ சுண்டல் மற்றும் பிற நிவேதனங்கள்... கேரட் பாசந்தி, ஃப்ரூட் கேசரி, அப்பம் போன்ற இதர ஸ்பெஷல் ரெசிபிகளை
''நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, தேவியரை மெய்சிலிர்க்க வழிபட்டு, விதம்விதமாக உணவுகள் தயாரித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது கிடைக்கும் மனநிறைவு வார்த்தைகளில் அடங்காது. தேவியரின் அருளால் உங்கள் இல்லத்தில் அன்பும், ஐஸ்வர்யமும் நிறைந்திருக்கட்டும்'' என்று வாழ்த்தும் தீபாவின் ரெசிபிகளை, மனதை மயக்கும் விதத்தில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.
சம்பா அவல்
தேவையானவை: அவல் - ஒரு கப், நெய் - 4 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 10, கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் (பொடித்துக் கொள்ளவும்), பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: சம்பா அவல் அல்லது வெண் பொங்கலை நவராத்திரி முதல் நாள் நிவேதனமாக செய்யலாம்
ஆப்பிள் பன்னீர் பாயசம்
தேவையானவை: ஆப்பிள் - ஒன்று, காய்ச்சி ஆற வைத்த பால் - கால் லிட்டர், சர்க்கரை - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பன்னீர் - சில துளிகள், முந்திரி, திராட்சை - தலா 5, நெய் - சிறிதளவு.
முக்கூட்டு வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா ஒரு கப், மிளகு, சீரகம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 10, நெய் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
தாளித்த தயிர் சாதம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, காய்ச்சி ஆற வைத்த பால், தயிர் - தலா அரை கப், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: நவராத்திரி நான்காவது நாள் ஜெயதுர்க்கைக்கு தயிர் சாத நிவேதனம் சிறந்தது.
நவராத்திரி அமிர்தம்
தேவையானவை: ஆப்பிள், மாம்பழம், அத்திப்பழம், சப்போட்டா, வாழைப்பழம் - தலா ஒன்று, முந்திரி, திராட்சை, பாதாம், பேரீச்சை - தலா பத்து, நெய், தேன் - தேவையான அளவு.
ஃப்ரூட்ஸ் கேசரி
தேவையானவை: ரவை, சர்க்கரை - தலா ஒரு கப், நெய் - அரை கப், கேசரி கலர் பொடி - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய விருப்பமான பழத் துண்டுகள் - அரை கப், முந்திரி, திராட்சை - அலங்கரிக்க தேவையான அளவு.
இலங்கை அல்வா
தேவையானவை: தேங்காய்ப் பால், கடலை மாவு - தலா ஒரு கப், மைதா மாவு - அரை கப், சர்க்கரை, நெய் - தலா 2 கப்.
சத்து மாவு புட்டு
தேவையானவை: சத்து மாவு (நவதானியங்களை வறுத்து, அரைத்த மாவு) - ஒரு கப், தேங்காய் துருவல், சர்க்கரை - தலா கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.பிசைந்த மாவை இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இந்த மாவை கட்டிகள் இல்லாமல் கைகளால் உதிர் உதிராக உதிர்த்து, தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... சத்தான புட்டு ரெடி!
குறிப்பு: இதை நவராத்திரி ஏழாம் நாள் செய்வது விசேஷம்.
சிகிலி
தேவையானவை: கறுப்பு எள், வெல்லம் - தலா 50 கிராம்.
குறிப்பு: இரும்பு சத்து அதிகம் கொண்டது இந்த சிகிலி!
வெஜ் சோயா சுண்டல்
தேவையானவை: சோயா பீன்ஸ் - ஒரு கப், கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), தேங்காய் துருவல், கேரட் துருவல் - தலா கால் கப், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
ரங்கோலி சுண்டல்
தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, பட்டாணி, வேர்க்கடலை, ராஜ்மா - தலா ஒரு சிறிய கப், கடுகு, பெருங்காயம் - தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.பொடி செய்வதற்கு: கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்.
முத்து சுண்டல்
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு, மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.
கேரட் பாசந்தி
தேவையானவை: பால் - 4 கப், கேரட் - ஒன்று, பாதாம், முந்திரி - தலா 4, சர்க்கரை - ஒரு கப்.
வேர்க்கடலை ஃப்ரூட் சுண்டல்
தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், ஆப்பிள், மாங்காய் - தலா ஒன்று, கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்), தேங்காய் துருவல் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
ஸ்வீட் கார்ன் சுண்டல்
தேவையானவை: ஸ்வீட் கார்ன் - ஒன்று, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.மிகவும் ஆரோக்கியமான சுண்டல் இது!
முளைப்பயறு சுண்டல்
தேவையானவை: பச்சைப் பயறு - ஒரு கப், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 4, தேங்காய் துருவல் - கால் கப், உப்பு - தேவையான அளவு.
கறுப்பு உளுந்து சுண்டல்
தேவையானவை: கறுப்பு உளுந்து - ஒரு கப், கடுகு, பெருங்காயம் - தாளிக்க தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - 10 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
குறிப்பு: எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்ற சுண்டல் இது!
கோல்டன் ரிங்ஸ்
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு , வெண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
அப்பம்
தேவையானவை: வெல்லம் - ஒன்றரை கப், கோதுமை மாவு - 2 கப், அரிசி மாவு - கால் கப், வாழைப்பழம் - ஒன்று (பிசைந்து கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, சமையல் சோடா - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.
வேர்க்கடலை வெல்ல லட்டு
தேவையானவை: வறுத்த வேர்க்கடலை (தோல் நீக்கியது), பொடித்த வெல்லம் - தலா ஒரு கப்.
ஹனி பால்ஸ்
தேவையானவை: பாதாம், முந்திரி, வேர்க்கடலை - தலா 10, பேரீச்சை - 4, தேன் - 2 டீஸ்பூன்.
மோதகம்
தேவையானவை: தேங்காய் துருவல், வெல்லம் - தலா ஒரு கப், கோதுமை மாவு - தேவையான அளவு, ஏலக்காய்த்தூள், உப்பு - தலா ஒரு சிட்டிகை, நெய் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
வீட் பிரட்டல்
தேவையானவை: கோதுமை மாவு, சர்க்கரை - தலா ஒரு கப்.செய்முறை: கோதுமை மாவை வெறும் வாணலியில் நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். எளிதில் செய்யக்கூடிய இது, சுவையாக இருக்கும்.
கல்கண்டு பாத்
தேவையானவை: பச்சரிசி, பால், டைமண்ட் கல்கண்டு - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரி, திராட்சை - தலா 10, நெய் - 5 டீஸ்பூன்.
ஸ்வீட் மிக்ஸர்
தேவையானவை: அவல் - ஒரு கப், வெல்லம் - 2 கப், தேங்காய் துருவல், வேர்க்கடலை - தலா அரை கப், எள், நெய் - தலா கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.இது, ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
அவல் லட்டு
தேவையானவை: வெள்ளை அவல், சர்க்கரை - தலா ஒரு கப், முந்திரி, திராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிட்டிகை, நெய் - தேவையான அளவு.ஹெல்தி ரோல்ஸ்
தேவையானவை: பாதாம், முந்திரி, பேரீச்சை - தலா 10, தேங்காய் துருவல், நெய் - தேவையான அளவு.
கடலைப்பருப்பு சுண்டல்
தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
கோசுமல்லி
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், கேரட் துருவல், வெள்ளரி துருவல் - தலா கால் கப், தேங்காய் துருவல் - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, பெருங்காயத்தூள் - தேவையான அளவு, கடுகு, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு.
பானகம்
தேவையானவை: தண்ணீர் - ஒரு கப், வெல்லம் - 2 டீஸ்பூன், சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை.குறிப்பு: எந்த நிவேதனமும் கைவசம் இல்லாத சூழ்நிலையில், பானகம் கை கொடுக்கும்!


















