புதன், 30 ஆகஸ்ட், 2017

சூப்பரான ஸ்நாக்ஸ் ஜவ்வரிசி - உருளைக்கிழங்கு கட்லெட்...

சூப்பரான ஸ்நாக்ஸ் ஜவ்வரிசி - உருளைக்கிழங்கு கட்லெட்...

மாலை பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சாப்பிட சுவையான  ஜவ்வரிசி - உருளைக்கிழங்கு கட்லெட்.

*தேவையானவை :*

ஜவ்வரிசி - 250 கிராம்
உருளைக்கிழங்கு - 4
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கரம் மசாலா தூள் -  அரை டீஸ்பூன்
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்.

*செய்முறை :*

👁‍🗨 இரவில் படுக்கும் போதே ஜவ்வரிசியை 3/4 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து, காலையில் அதனை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

👁‍🗨 வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

👁‍🗨 உருளைக்கிழங்கை வேக வைத்து, வெந்ததும் தோலுரித்து மசித்து கொள்ளவும்.

👁‍🗨 ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, ஊற வைத்த ஜவ்வரிசியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

👁‍🗨 அடுத்து அதில் வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு, கரம் மசாலா தூள், மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

👁‍🗨 அடுத்து கலந்து வைத்துள்ள கலவையில், ஒரு எலுமிச்சை அளவை எடுத்து, சற்று தட்டையாக தட்டி, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

👁‍🗨 வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், தட்டி வைத்துள்ளவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

*சுவையான ஜவ்வரிசி கட்லெட் ரெடி!!!*

இதனை தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

இதயத்தை பதம்பார்க்கும் உப்பு கலந்த நொறுக்குத்தீனிகள் !!

இதயத்தை பதம்பார்க்கும் உப்பு கலந்த நொறுக்குத்தீனிகள் !!

பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்டு, விற்கப்படும் உப்பு கலந்த நொறுக்குத்தீனிகளை உட்கொள்வதால், இதயத்தில் பாதிப்பு ஏற்படும் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

உப்பு சத்து அதிகம் நிறைந்த உணவு வகைகள் எளிதில் ரத்தத்தில் கலப்பதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்றும், அதுவும் எண்ணெயில் பொறித்த உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் இருதயத்திற்கு ஆபத்தானது என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்த ஆய்வு ஒன்றை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிலாளர் ஆய்வு குழுமம் மேற்கொண்டது.

இந்த ஆய்வில், 16 ஆரோக்கியமான நபர்கள் கலந்துகொண்டனர்.

அவர்களில் பாதி நபர்களுக்கு குறைந்த அளவு உப்பு உபயோகப்படுத்தப்பட்ட தககாளி சூப் 10 முறை வழங்கப்பட்டது.

பின்னர் அவர்களுக்கு உப்பு அதிகம் பயன்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனி கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் ரத்த அழுத்தம், இருதய துடிப்பு போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் அதிக உப்பு பயன்படுத்தப்பட்ட பின்னர் ரத்தமானது இருதய அறைகளுக்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. ரத்த அழுத்தமும் அதிகரித்திருந்தது.

இதனை தொடர்ந்து மீதமுள்ள 8 நபர்களிடம் குறைந்த அளவு உப்பு பயன்படுத்தும் போது இருந்த ரத்த ஒட்டத்தின் அளவானது, அதிக அளவு உப்பு பயன்படுத்தியவுடன் இரண்டு மணி நேரத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்தது தெரியவந்தது.

எனவே அதிக அளவு உப்பும், எண்ணெயில் பொறித்த உணவுகளில் உள்ள கொழுப்பும் ரத்த நாளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்தை பாதிக்கிறது என்றும் அவர்கள் தங்களின் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

மேலும் உப்பும், கொழுப்பும் அடைப்பினை ஏற்படுத்தி நைட்ரிக் ஆக்ஸைட்டை வெளியிடுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இருதய பாதிப்பு உடனடியாக ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எண்ணெயில் பொறித்து அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், உள்ளிட்ட உணவுப் பண்டங்களில் அதிக அளவில் சாச்சுரேட்டட் ஃபேட்ஸ் உள்ளது.

இவை ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே அதிக உப்பு சேர்க்கப்பட்ட எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பது ஆயுளை குறைக்கும் என்றும் ஆய்வாளர்களும், மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் வெளிவரும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே உப்பு கலந்த நொறுக்குத்தீனிகளையும், எண்ணெய்யில் பொறித்த பலகாரங்களையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கிய வளமோடு வாழுங்கள்.....

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

ஈஸியான காலை உணவு - பிரெஞ்ச் டோஸ்ட்...

ஈஸியான காலை உணவு  - பிரெஞ்ச் டோஸ்ட்...

*தேவையாவை :*

பிரட் துண்டுகள் - 6
முட்டை - 1
பால் - 100 மில்லி
சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி
நெய் - 3 மேஜைக்கரண்டி
                       
*செய்முறை :*

👁‍🗨 முதலில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கவும்.

👁‍🗨 அதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.            

👁‍🗨 அடுப்பில் தோசைக்கல் (அல்லது) தவாவை வைத்து சூடானதும் பிரட் ஒன்றை எடுத்து முட்டை கலவையில் முக்கி எடுத்து தோசைக்கல்லில் போட்டு பிரட்டை சுற்றி ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றவும்.

👁‍🗨 ஓரங்களில் மொறுகலானதும் மறு புறம் திருப்பி  போடவும். இருபுறமும் மொறுகலானதும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.

👁‍🗨 மீதமுள்ள 5 பிரட் துண்டுகளையும் இதே முறையில்  ரோஸ்ட் செய்யவும்.

*சுவையான பிரெஞ்ச் டோஸ்ட் தயார்.*

காலிஃப்ளவர் பஜ்ஜி...

காலிஃப்ளவர் பஜ்ஜி...

காலிஃப்ளவரை இதுவரை மஞ்சூரியன் செய்து தான் சாப்பிட்டிருப்போம்.
ஆனால் இப்போது அதனை பஜ்ஜி போன்று மாலை  வேளையில் டீ, காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டு பாருங்கள். சூப்பராக இருக்கும்.

*தேவையாவை :*

காலிஃப்ளவர் - 2 கப்
கடலை மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
ஒமம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

*செய்முறை :*

👁‍🗨 முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், ஓமம், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

👁‍🗨 பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, சூடேற்ற வேண்டும்.

👁‍🗨 பிறகு வாணலியில் உள்ள எண்ணெய் காய்ந்ததும், அதில் நறுக்கிய காலிஃப்ளவரை மாவில் நன்கு நனைத்து போட வேண்டும்.

👁‍🗨 பின்பு காலிஃப்ளவரானது நன்கு பொன்னிறமாக வெந்ததும், அதனை எடுத்து, தட்டில் வைக்க வேண்டும்.

👁‍🗨 இதே போன்று அனைத்து காலிஃப்ளவரை பொரித்து எடுக்க வேண்டும்.

*சுவையான காலிஃப்ளவர் பஜ்ஜி தயார்.*

சப்பாத்திக்கு சூப்பரான சோயா வெஜ் குருமா

சப்பாத்திக்கு சூப்பரான சோயா வெஜ் குருமா

சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், சாத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சத்தான சோயா வெஜ் குருமாவை இன்று செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சோயா பீன்ஸ் - 1 கப்
பீன்ஸ் - 5
கேரட் - 1
உருளைக்கிழங்கு - 1
பச்சை பட்டாணி- ¼ கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மல்லித்தூள் - 1 ½ டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு - 4
இஞ்சி - 1 பெரிய துண்டு
தேங்காய் - 2 கீற்று
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 3
கசகசா - 1 டீஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லைதழை - சிறிது
கடுகு எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை :

முதல் நாள் இரவே ஊறவைத்த சோயாபீன்சை குக்கரில் போட்டு 5 விசில் விட்டு வேகவைக்கவும்.

கசகசா, வெள்ளை எள், ஏலக்காயை வெறும் வாணலியில் வறுத்து கொள்ளவும்.

வறுத்த பொருட்கள் ஆறியவுடன் அதனுடன் இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயத்தை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

தக்காளியை தனியாக அரைத்து வைக்கவும்.

தேங்காய், சோம்பு சேர்த்து தனியாக அரைத்து வைக்கவும்.

காய்கறிகளை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து மீண்டும் வதக்கவும்.

நன்கு வதங்கி வாசனை வந்தபின் வேக வைத்த சோயாபீன்ஸ், காய்கறிகளைப்போட்டு கிளறவும்.

அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவைக்கவும்.

10 நிமிடம் கழித்து காய் வெந்தவுடன், தேங்காய், சோம்பு சேர்த்து அரைத்த விழுதுடன் மேலும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கிளறி மூடி போட்டு வைக்கவும்.

2 நிமிடம் கழித்து கொத்துமல்லி தழை போட்டு இறக்கவும்.

சுவையான சோயா வெஜ் குருமா தயார்

ஓணம் ஸ்பெஷல்: கேரள அடை பாயாசம்

ஓணம் ஸ்பெஷல்: கேரள அடை பாயாசம்

கேரளாவில் ஓணம் பண்டிகையில் விருந்தில் பரிமாறப்படும் பாயசங்களில் இந்த அடை பாயாசத்திற்கு தனி இடமுண்டு. இந்த பாயாசம் இல்லாமல் ஓணம் பண்டிகை முழுமை அடையாது.
தேங்காய்ப் பாலில் இந்தப் பாயாசம் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
அரிசி அடை – 50 கிராம்
துருவிய வெல்லம் – 125 கிராம்
முதலில் பிழிந்த தேங்காய்ப் பால் – அரை கிண்ணம்
இரண்டாவது பிழிந்த தேங்காய்ப் பால் – இரண்டரை கிண்ணம்
நெய் – ஒரு தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் – கால் தேக்கரண்டி
சுக்குத் தூள் – கால் தேக்கரண்டி
சிறிதாக அரிந்த தேங்காய்த் துண்டுகள் – ஒரு தேக்கரண்டி
முந்திரி பருப்பு – 10
திராட்சைப் பழம் – 10
செய்முறை:
1. முதலில் வெல்லத்தில் அரை கிண்ணம் நீர் ஊற்றி உருக விட்டு அரைத்துக் கொள்ளவும்.
2. அரிசி அடையை இரண்டாவது தேங்காய் பாலில், சிறு தீயில் பத்து நிமிடம் வேக விடவும். அதன் பின் உருக்கிய வெல்லத்தை சேர்த்து அடை குறுகி வரும் வரை கிளறவும்.
3. அதன்பின்னர், ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் போடவும். நெய்யில் தேங்காய்த் துண்டுகளைக் கருகாமல் வறுத்துக் கொள்ளவும். முந்திரி பருப்பு, திராட்சைப் பழம் இவற்றையும் வறுத்துக் கொள்ளவும்.
4. முதலில் பிழிந்த தேங்காய்ப் பாலை அடையில் ஊற்றி ஒரு கிளறு கிளறியவுடன் இறக்கிவிடவும். அதனுடன் வறுத்த தேங்காய்த் துண்டுகள், முந்திரி, திராட்சை போடவும். அடை பாயாசம் தயார்.

வெஜ் - மேத்தி கோதுமை ரவை உப்புமா

வெஜ் - மேத்தி கோதுமை ரவை உப்புமா

தினமும் கோதுமையால் ஆன உணவை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று காய்கறிகள், வெந்தயக்கீரை, கோதுமை ரவை வைத்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை  - ஒரு கப்,
வெங்காயம் - 1, பொடியாக நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ் கலவை  - ஒரு கப்,
பச்சை மிளகாய் -  2,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
கடுகு -  அரை டீஸ்பூன்,
கடலைப் பருப்பு -  அரை டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு -  அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை  - சிறிதளவு,
வெந்தயக்கீரை  - ஒரு கட்டு.

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

வெந்தயக்கீரையை சுத்தம் செய்து இலையை மட்டும் ஆய்ந்து வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெந்தகீரை, காய்கறிகள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் சற்று வதங்கியதும் மூன்று கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த ரவையை சேர்த்து கிளறி வேக விடவும்.

நன்றாக வெந்து தண்ணீர் எல்லாம் வற்றியதும் கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான வெஜ் - மேத்தி கோதுமை ரவை உப்புமா ரெடி.

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

யார், யார் எந்தெந்த அரிசி சாப்பிடுறது உடம்புக்கு நல்லதுன்னு தெரியுமா?

யார், யார் எந்தெந்த அரிசி சாப்பிடுறது உடம்புக்கு நல்லதுன்னு தெரியுமா?

நமது உணவில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பொருள் அரிசி. காலங்காலமாக நம் முன்னோர்கள் அரிசி உணவை சாப்பிட்டு வர இன்றைய தலைமுறையினரோ அதில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கிறது.

அது சாப்பிடக்கூடாது உடல் நலத்திற்கு தீங்கானது, அதைச் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்றெல்லாம் நினைத்து அரிசியை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அரிசியில் அத்தனை சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. அதைப் பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.

அரிசி வகைகள்!

புழுங்கல் அரிசி :

புழுங்கல் அரிசி எளிதாக, விரைவாக ஜீரணம் ஆகக் கூடிய தன்மை கொண்ட ஒரு உணவாகும். அரிசி சாதம் முழுமையாக ஜீரணம் ஆக ஒரு மணி நேரம் போதுமானது.

பச்சரிசி :

உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். ஆனால், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் பிரச்சனை உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

சிகப்பரிசி :

சிகப்பரிசியில் அதிகமான பைபர் உள்ளது. இதனை சாப்பிடுவதால், ரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுகிறது. மேலும் சிகப்பரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது.

பாஸ்மதி அரிசி :

மற்ற அனைத்து அரிசி வகைகளையும் விட பாஸ்மதி அரிசியில் நிறைய பைபர் அடங்கியுள்ளது.

மூங்கில் அரிசி :

மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.

மாப்பிள்ளை சம்பா :

இந்த வகை அரிசியில் புரதம்,நார்ச்சத்து, மற்றும் பல தாதுக்கள் நிரம்பியிருக்கின்றன. இதை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும்.

சீரகச் சம்பா:

இந்த வகை அரிசி இனிப்பு சுவையுடையது. அதனால் அதிகமாக சாப்பிடத்தூண்டும். சிறுவாத நோய்களை தீர்க்க வல்லது இது.

தினை அரிசி :

இது ரத்த சோகையை அகற்றக்கூடியது. அத்துடன் , காய்ச்சல் சளித்தொல்லை இருந்தால் அதன் வேகத்தை குறைக்கும் ஆற்றல் உண்டு. இதற்காக அதிகமாக எடுத்துக்கொண்டால் அது பித்தமாகவும் மாறிடும்.

மருந்தாகும் அரிசி :

வயிற்றுக்கடுப்பு,குடல் வறட்சி இருப்பவர்களுக்கு அரிசி உலையில் கொதிக்கும் போதே ஒரு டம்பளர் நீரை எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் வெண்ணைய் அல்லது நெய் ஏதாவது ஒன்றை சேர்த்து குடித்தால் விரைவில் குணமாகும்.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது ?

சர்க்கரை நோயாளிகள், இதய நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அரிசி உணவுகளை குறைத்து உண்ணலாம். அரிசி உணவில் இருக்கும் சத்துக்கள் தேவைக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவை அப்படியே ரத்தத்தில் சேர்ந்திடும். இதனால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இவர்கள் செரிமானத்திற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிற சாமை,தினை போன்றவைகளை எடுக்கலாம்.

அரிசி சாதம் இரவுகளில் சாப்பிடக்கூடாதா?

நம் உடலின் வளர்ச்சிதை மாற்றம் பகல் நேரங்களில் அதிகமாக இருக்கும். இதனால் அரிசிகளில் இருக்கும் கார்போஹைட்ரேட் நம் உடலின் சக்தியாக சேரும் ஆனால் இரவுகள் வளர்சிதை மாற்றம் குறைவாக இருப்பதால் அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக சேரும்., அதனால் இரவு உணவுகளில் அரிசி உணவை தவிர்ப்பது நலம்.

அரிசி உணவு என்பது சத்தான உணவு தான். ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது தான் அது தவறானதாக முடிகிறது.அதனால் அரிசி உணவை முற்றிலுமாக தவிர்க்காமல் உங்கள் உடலின் தேவையறிந்து சாப்பிடுங்கள்.

பலாப்பழ அல்வா / JACK FRUIT HALWA

பலாப்பழ அல்வா / JACK FRUIT HALWA

தேவையான பொருட்கள்

பலாப் பழம்     –        6 கப்

வெல்லம்       –        1.5 கப்

நெய்           –        4 - 5 மேஜைக்கரண்டி

நீர்              –        1.5 கப்

செய்முறை

பலாப் பழத்தை கொட்டைகளை நீக்கி தனியே எடுத்துக் கொள்ளவும்

அவற்றை பிரஷர் குக்கரில் எடுத்துக் கொள்ளவும்

நீர் சேர்க்கவும்

மூடி வைத்து வேக வைக்கவும்

பலாப் பழம் வெந்து விட்டது

அதனை கடாயில் வைக்கவும்

ஒரு சாஸ் பானில் வெல்லத்தை எடுத்து அதனுடன் நீர் சேர்க்கவும்

வெல்லம் நன்கு கரையும் வரை அதனை சூடாக்கவும்

அதனை வடிகட்டிக் கொள்ளவும்

பலாப்பழத்துடன் சேர்த்துக் கொள்ளவும்

நன்கு கலக்கவும்

அதனை வேக வைக்கவும்

அதிலுள்ள நீா் முழுவதும் வெளிறேி கலவை கெட்டியாகும் வரை நன்கு கிளறவும்

4 மேஜைக்கரண்டி நெய் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பலாப்பழ அல்வா ரெடி!!!!!!!!!!

எள்ளோதரை

சத்தான மதிய உணவு எள்ளோதரை

எள்ளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று எள்ளை வைத்து சத்தான சுவையான ஒரு வெரைட்டி ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வடித்த சாதம் - ஒரு கப்,
கருப்பு எள் - 4 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
காய்ந்த மிளகாய் - 4,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு - சிறிதளவு.

செய்முறை :

வெறும் வாணலியில் எள், கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தனித்தனியாக போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்து ஆற விடவும்.

நன்றாக ஆறியதும் இதனுடன் உப்பு சேர்த்து மிக்சியில் பவுடராக பொடித்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின் அரைத்த பொடி, வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்.

சூப்பரான சத்தான எள்ளோதரை ரெடி.

அன்னாசி பழ பாயாசம் / PINEAPPLE KHEER

அன்னாசி பழ பாயாசம் / PINEAPPLE KHEER

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி               –        1 கப்

நீர்                     –        2 கப்

அன்னாசிப் பழம்       –        2 கப் (நறுக்கியது)

சூடான பால்            –        500 மிலி

சர்க்கரை               –        ½ கப் + ¼ கப்

ஃபுட் கலர் (yellow)       –        ஒரு சிட்டிகை

செய்முறை

ஜவ்வரிசியை நன்கு கழுவவும்

அதனை பிரஷர் குக்கரில் எடுத்துக் கொள்ளவும்

ஒரு விசில் வரும் வரை வேக வைத்து பின்பு அதனை தனியே வைக்கவும்

பின்பு பாதியளவு அன்னாசி பழத்தை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்

மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

பின்பு அதனை ஒரு சாஸ் பானில் எடுத்துக் கொள்ளவும்

மீதமுள்ள அன்னாசி பழ துண்டுகளை அதனுடன் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

கலவை சிறிது கெட்டியாகும் வரை கிளறவும்

சர்க்கரை சேர்க்கவும்

பின்பு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்பு தனியே வைத்து ஆற வைக்கவும்

ஒரு சாஸ் பானில் பாலை எடுத்துக் கொள்ளவும்

கொதிக்க வைத்து சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்

ஒரு சாஸ் பானில் ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளவும்

சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்

சூடான பாலை அதனுடன் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து தனியே வைத்து ஆற வைக்கவும்

நன்கு ஆறியதும் அன்னாசி கலவையை அதனுடன் சேர்க்கவும்

சில மணி நேரங்கள் குளிர வைக்கவும்

அன்னாசி பழ பாயாசம் ரெடி !!!!!!!!!!

பேரீட்சை லட்டு / DATES LADDU

பேரீட்சை லட்டு / DATES LADDU

தேவையான பொருட்கள்

பேரீட்சை                            -       15

கோ கோ தூள்                        –        2 மேஜைக்கரண்டி

தேன்                                 –        2 - 3 மேஜைக்கரண்டி

முந்திரி, பாதாம், பிஸ்தா, வால் நட்   –       1/2 கப்

ஆளி விதை                          –        2 மேஜைக்கரண்டி

தேங்காய் துருவல்                   –        1/2 கப்

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

பேரீட்சை பழங்களை எடுத்துக் கொள்ளவும்

விதையை நீக்கி விட்டு சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்

அதனுடன் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் சேர்க்கவும்

கோ கோ தூள் சேர்க்கவும்

ஆளி விதை சேர்க்கவும்

தேன் சேர்க்கவும்

நன்கு பிசையவும்

பின்பு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

அதனை தேங்காய் துருவலில் போட்டு எடுக்கவும்

பேரீட்சை லட்டு ரெடி!!!!!!

பப்பாளி பழ ஜாம் / PAPAYA JAM

பப்பாளி பழ ஜாம் / PAPAYA JAM

தேவையான பொருட்கள்

பழுத்த பப்பாளி பழம்       –        2 கப்(அரைத்தது)

சர்க்கரை                   –        1/4 கப்

எலுமிச்சை சாறு           –        1 தேக்கரண்டி

செய்முறை

பழுத்த பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளவும்

மிக்சியில் போடவும்

மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அரைத்த பப்பாளி விழுதை ஒரு பானில் எடுத்துக் கொள்ளவும்.

பின்பு தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.

நன்கு கிளறவும்.

சர்க்கரை மெதுவாக கரையத் துவங்கும்.

தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்கவும்.

பப்பாளி விழுது வேகமாக கெட்டியாகத் துவங்கும்.

கெட்டியாகி ஜாம் பதத்திற்கு வரும் வரை தொடர்ந்து கிளறவும்.

பின்பு தீயை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

நன்கு கிளறவும்.

பப்பாளி பழ ஜாம் ரெடி!!!!!

மாம்பழ கேசரி / MANGO FRUIT KESAR

மாம்பழ கேசரி / MANGO FRUIT KESARI

தேவவையான பொருட்கள்

மாம்பழம்            –        1.5 கப்

சர்க்கரை             –        3/4 கப்

குங்குமப் பூ          –        ஒரு சிட்டிகை(விரும்பினால்)

ஏலக்காய் பொடி     –        1 தேக்கரண்டி

ரவை                –        1 கப்

நீர்                  –        1.5 கப்

நெய்                –        3 மேஜைக்கரண்டி

செய்முறை

மாம்பழத்துடன் ஏலக்காய் தூள், குங்குமப் பூ, சர்க்கரை, சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

15 நிமிடங்கள் தனியே வைக்கவும். கடாயில் நெய்விட்டு சூடானதும் அதில் ரவையை போட்டு மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு முந்திரியை பொரித்துக் கொள்ளவும். முந்திரி லேசாகட பொன்னிறமானதும் உலர் திராட்சை சேர்க்கவும். பின்பு அவற்றை ஒரு பாத்திரத்தில் தனியே வைக்கவும்.

பின்பு அதே பாத்திரத்தில் 1.5 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

ரவையை மெதுவாக நீரில் போட்டு கொண்டே தொடர்ந்து நன்கு கிளறவும்

நீர் முழுவதும் ஆவியாகும் வரை நன்கு கிளறிக் கொண்டிருக்கவும்.

பின்பு ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு அரைத்த மாங்காய் விழுது சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு குறைந்த தீயில் வைத்து 10 நிமிடங்கள் நன்கு கலக்கவும்.

பின்பு தீயை அணைத்து விட்டு அதனை மூடி 10 -15 நிமிடங்கள் வைக்கவும்

பின்பு அதன் மீது முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பரிமாறவும். மாம்பழ கேசரி ரெடி!!!!!!!!

சனி, 26 ஆகஸ்ட், 2017

விநாயக சதுர்த்திக்கு விதவிதமான கொழுக்கட்டை

விநாயக சதுர்த்திக்கு விதவிதமான கொழுக்கட்டை செய்யலாம் வாங்க

விநாயக சதுர்த்திக்கு வழக்கம் போல அரிசி கொழுக்கட்டை செய்து விநாயகரை போர் அடிக்காமல் விதவிதமான கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு  படையல் போடுங்கள்

1. பூரண கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

கடலைப்பருப்பு-200 கிராம்,
வெல்லம் -கால் கிலோ,
தேங்காய் துருவல்-அரை கப்,
ஏலைக்காய்த் தூள்-சிறிதளவு,
உப்பு -சிறிதளவு,
நெய்-2 ஸ்பூன்,
எண்ணெய்- சிறிதளவு,
துவரம் பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்,
மேல் மாவிற்கு பதப்படுத்திய அரிசி மாவு.

எப்படி செய்வது?

கடலைப் பருப்பு, துவரம் பருப்பை நன்றாகச் களைந்து, தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து வேக விடவும். நெத்துப் பதத்தில்  வேகவிடவும்.வடிகட்டி வெல்லத்துடன்   சேர்த்துப் பொடியாக அரைத்துக் கொள்ளவும். கொஞ்சம் தளர்த்தியாகத்தான் இருக்கும். கடாயில் சிறிதளவு  நெய்விட்டு, காய்ந்ததும் அரைத்த பருப்பு விழுது, தேங்காய் துருவல் போட்டுக் கலக்கவும். சிறு சிறு உருண்டைகள் செய்து கொள்ளவும். பாத்திரத்தில்  தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கொதித்ததும், 1 சிட்டிகை உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் விடவும்.தளதளவென்று கொதித்ததும்,அரிசி மாவைக்  கொட்டிக் கிளவும். நன்றாக வெந்ததும் தேய்த்துப் பிசைந்து, ஈரத் துணியால் முடி வைக்கவும். சிறிதளவு அரிசி மாவு எடுத்துச் சொப்புப்  போல(எண்ணெய் தொட்டு) செய்து, உள்ளே  பூரணத்தை வைத்து முடவும். மேலே கூம்பு போல செய்ய வேண்டும். இது தான் மோதகம்.

குறிப்பு: வெல்லம் எவ்வளவு வேண்டுமோ அதைச் சேர்க்கவும். அதிகமாகி விட்டால் பூரணம் கெட்டியாக இருக்காது.

2. எள்ளுக் கொழுக்கட்டை

எப்படி செய்வது?

கறுப்பு எள்ளைச் சுத்த் செய்து, கல் இல்லாமல் அரித்து, வடியவிட்டு உலர்த்தவும். நன்றாகக் களைந்து மேல் தோல் நீக்கி விடவும். பிறகு காய  விடவும். காய்ந்த பிறகு சூடான வாணலியில் வறுத்துக் கொள்ளவும். படபடவென்று வெடிக்கும். அதற்கு எத்தனைவெல்லாம் தேவையோ, அதைப்  பொடி செய்து மிக்ஸீயில் ஒரு சுற்றுச் சுற்றவும். பொடியாகி விடும்.ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். 1 டீஸ்பூன் நெய் விட்டுக் கிளறி வைக்கவும். உதிராக  இருக்க வேண்டும்.

3. உப்புக் கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

துவரம் பருப்பு-200 கிராம்,
மிளகாய் வற்றல்- 6,
இஞ்சி- சிறிதளவு,
உப்பு- தேவையானது,
தேங்காய்த் துருவல்கால் - கப்,
பெருங்காயம்- 1 துண்டு,
கறிவேப்பில்லை, கொத்தமல்லி - சிறிதளவு,
காரட் 2 சீவியது-அரை கப்,
அரிசி மாவு- தேவையானது

எப்படி செய்வது?

துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, ஊறிய பிறகு அதனுடன் உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவைகளைப் போட்டுக் கரகரப்பாக  அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் அதற்குத் தேவையான தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் உளுந்து  போட்டுப் புரட்டி,இஞ்சித் துருவல் சேர்த்து, அரைத்த மாவை, அதில் போட்டு நன்றாகக் கிளறவும். கறிவேப்பில்லை, கோத்தமல்லி, காரட் துருவல்  போட்டு  புரட்டவும். இரண்டும் நன்றாக வெந்துவிடும். உதிராக இருக்க வேண்டும்.பதப்படுத்திய அரிசி மாவை, கிளறி(அதற்கு சிறிது உப்பு சேர்த்து)  ஆற விடவும்.(எல்லா மாவும் தயாரிப்பது போல் தான் இருக்கும்).

எண்ணெய் அல்லது நெய் சிறிதளவு தொட்டு, சிறு உருண்டை மாவை பிளாஸ்டிக் பேப்பரில் போளி தடடுவது போல சிறிய வட்டமாகச் செய்யவும்.  அதில் ஆறிய பருப்புக் கலவையை வைத்து கீழிருந்து மேலாக  மூடவேண்டும். மேலே சிறிதளவு தொட்டு,சிறு உருண்டை மாவை பிளாஸ்டிக்  பேப்பரில் போளி தட்டுவது போல சிறிய வட்டமாகச் செய்யவும். அதில் ஆறிய பருப்புக் கலவையை வைத்து கீழிலிருந்து மேலாக மூட வேண்டும்.  மேலே சிறிதளவு தண்ணீர் தொட்டு ஒரத்தை ஒட்டி விடவும். எல்லாவற்றையும்  செய்து இட்லிப் பாத்திரத்தில் இலை போட்டு வேக விடவும். சில  நிமிடங்களில் நன்றாக வெந்துவிடும். கலர் சிறிது மாறியிருக்கும். இவை ரொம்ப ருசியாகவும், மணமாகவும் இருக்கும். காய் சேர்த்து இருப்பதால்  குழந்தைகள் விரும்புவார்கள். இது மாறுதலாக செய்யும் ஒரு மோதகம்!

குறிப்பு:  இந்த மாதிரி பட்டாணி, முட்டைக்கோஸ் இவற்றை வைத்தும் செய்யலாம்.

4. கொத்துக்கடலைச் சுண்டல்

எப்படி செய்வது?

 கருப்புக் கொண்டக்கடலை-கால் கிலோ எடுத்து முதல் நாள் இரவே ஊரப் போடவும். விசேஷத்தன்று காலையில், ஊறிய கடலையை 5,6 விசில்  விட்டு குக்கரில்(மூழ்கும் அளவு தண்ணீர்) வேகவிடவும். குழைய வேண்டாம். அதிலிருக்கும் தண்ணீரை வடிக்கட்டி, உப்பு போட்டு வைக்கவும்.  தேங்காய்-2 டேபிள் ஸ்பூன், தனியா-1 ஸ்பூன், இஞ்சி-1 துண்டு,மிளகாய் வற்றல்-4 இவைகளை மைய அரைத்த விழுதைப்போட்டு வதக்கவும். பச்சை  வாசனை போனதும் வேக வைத்த கொத்துக் கடலையைப் போடவும். நன்றாக கிளறவும். மேலே கறிவேப்பிலையைக் கிள்ளிப்போட்டு. ஆறியதும் சில  துளிகள் எலுமிச்சைச் சாறு விட்டுப் புரட்டி எடுக்கவும். இது ருசி மிக்க ஒரு சுண்டல்  வகை.இதில் புரதச்சத்து அதிகம். பழைய காலத்தில் இதை  அடிக்கடி சுண்டல் செய்வார்கள்.கூட்டிற்க்கு போடுவார்கள்.

5. உளுந்தம் பருப்பு கொளுக்கட்டை

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு- 1கப்
உருட்டு உளுந்தம் பருப்பு- 1/4கப்
மிளகாய் வத்தல்-3 அல்லது காரத்திற்கேற்ப
பெருங்காயத்தூள்-சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
நல்லெண்ணெய்-2டீஸ்பூன்
கடுகு-சிறிதளவு
கருவேப்பிலை-சிறிதளவு
மல்லிக்கீரை-சிறிதளவு

எப்படி செய்வது?

உருட்டு உளுந்தம் பருப்பை 15நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின்னர் பருப்பை தண்ணீர் விடாமல் பரபர என கிரைண்டரில் அரைக்க வேண்டும்.  அரைத்த மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து 10நிமிடம் வேகவைக்க வேண்டும். வேகவைத்த மாவை நன்றாக ஆறவைத்து  உதிர்த்துக்கொள்ளவேண்டும். வத்தல், உப்பு, பெருங்காயத்தூள், ஆகியவற்றை நன்றாக பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில்  எண்ணெய்விட்டு கடுகு, கருவேப்பிலை, போட்டு தாளிக்க வேண்டும். அதனுடன் பொடியாக்கிய கலவையும் வேகவைத்த உளுந்தமாவையும் போட்டு  மசாலா கலவை சேரும் வரை கிளறி ஆறவைத்து சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். பின்னர் பச்சரிசி மாவை வெந்நீர்விட்டு  கொழுக்கட்டை பதம் வரும் வரை பிசைந்து அந்த மாவுக்குள் உருட்டி வைத்த உருண்டைகளை உள்ளே வைத்து வேகவைத்தால் சுட சுட உளுந்தம்  பருப்பு காரகொழுக்கட்டை தயார். இதனை ஒரு தட்டில் வைத்து மல்லிக்கீரை தூவி பறிமாறவேண்டும்.

6. பலாச்சுளை கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

பச்சரிசி - ஒரு பெரிய கப்,
பால் - 1/2 கப்.

பூரணத்திற்கு:

தேங்காய் - 1 சிறியது,
வெல்லம் - 150 கிராம்,
பலாச்சுளை - 10 பொடியாக நறுக்கியது,
ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்
.
எப்படிச் செய்வது?

அரிசியை 2 மணி நேரம் ஊறவிட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பின் சலித்து வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவிக் கொள்ளவும்.  வெல்லத்தை வெந்நீரில் கரையவிட்டு வடிகட்டவும். வடிகட்டின வெல்லத்தை பாகு காய்ச்சி, பொடியாக நறுக்கிய பலாச்சுளை, தேங்காய் துருவல்,  நெய், ஏலக்காய் தூள் போட்டு கை விடாமல் கிளறுங்கள். இந்த கலவை சுருளாக வரும்போது இறக்கி ஆறவிடவும். பின் அரிசி மாவை ஒரு  பாத்திரத்தில் போட்டு பின் அதன் மேல் காய்ச்சிய பால், கொதிக்க வைத்த தண்ணீர் 1 கப்,  நெய் சேர்த்து ஊற்றி கைவிடாமல் கிளறி மூடிவைத்து,  பின் மாவில் இருந்து சிறு சிறு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி பூரணத்தை வைத்து மூடி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு : விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டை செய்யலாம். பால் சேர்ப்பதால் கொழுக்கட்டை சுவையாகவும், வெண்மையாகவும் இருக்கும். வேறு  வேறு பூரணம் கொண்டும் செய்யலாம். (முந்திரி- சர்க்கரை, கடலைப்பருப்பு-வெல்லம், எள்ளு-வெல்லம்)

7. கடலைபருப்பு கொழுக்கட்டை

என்னனென்ன தேவை?

கடலை பருப்பு- 250கிராம்
தேங்காய்-அரைமுறி
ஏலக்காய்-4
பச்சரிசி மாவு- 250 கிராம்

எப்படி செய்வது?

கடலை பருப்பை நன்றாக வேகவைத்து அதனை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். வெல்லத்தை தண்ணீரில் போட்டு காய்ச்சி பாகு எடுக்க  வேண்டும். பாகை கடலைப் பருப்புடன் ஊற்றி தேங்காய் துருவல், ஏலக்காய் சேர்த்து கெட்டியாகும் வரை நன்றாக கிளற வேண்டும். பின்னர் பச்சரிசி  மாவுடன் சிறிதளவு வெந்நீர் சேர்த்து பிசைந்து மாவை சிறிய உருண்டைகளாக பிரிக்க வேண்டும். பின்னர் அந்த உருண்டையை நன்றாக தட்டி அதில்  பூரணத்தை வைத்து வேகவைத்தால் கடலைப்பருப்பு கொழுக்கட்டை தயார்.

8. புரோட்டீன் கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு -1கப்
சோயா பீன்ஸ்-1/2கப்
கடுகு-1/2டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு-1டீஸ்பூன்
கடலை பருப்பு-1டீஸ்பூன்
இஞ்சி-சிறிய துண்டு
மிளகாய்-4
கறிவேப்பிலை- சிறிது
பெருங்காயத்தூள்- 1சிட்டிகை
தண்ணீர் 1 1/2 கப்
எண்ணெய் 4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு

எப்படி செய்வது?

சோயா பீன்சை ஊறவைத்து ரவை போல அரைக்க வேண்டும். அதனுடன் இஞ்சி, மிளகாய், சிறிது உப்பு சேர்த்து அரைத்த கலவையை கலக்க  வேண்டும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, போட்டு நன்றாக வறுக்க வேண்டும். அப்போது அதனுடன்  பெருங்காயத்தூளையும் சேர்க்க வேண்டும்.

பின்னர் அரைத்த சோயா பீன்ஸ், விழுதை சேர்த்து கறிவேப்பிலை, சிறிது உப்பு சேர்த்து கிளறவேண்டும்.  இது தான் பூரணம் பின்னர் அரைத்த சோயா  கடாயில்  தண்ணீர் விட்டு சிறிது உப்பு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவேண்டும். அதில் பச்சரிசி மாவை தூவி கட்டி இல்லாமல் கிளறி  எடுக்க வேண்டும். மாவு ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு அரிசிமாவில் எலுமிச்சை  அளவு எடுத்து உருட்டி கிண்ணம் போல செய்து  அதில் தயார் செய்த பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி கொழுக்கட்டை வடிவம் கொடுக்க வேண்டும். அதை வேக வைத்து எடுத்தால் புரோட்டீன்  கொழுக்கட்டை தயார்.

9. கசகசா பேரீட்சை கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு-1கப்
பேரீச்சம் பழம்- 1/2கப்
கசகசா-2டேபிள்ஸ்பூன்
நாட்டுசர்க்கரை-சிறிதளவு
தேங்காய் துருவல்-2டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்-4
உப்பு-தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

முதலில் பேரிச்சம் பழம் நாட்டு சர்க்கரை இரண்டையும் சிறிதளவு தண்ணீரில் வேக விட்டு பிசைந்து எடுத்து கெட்டியாக வைத்துக்கொள்ள வேண்டும்.  அதில் வறுத்த கசகசா ஏலக்காய்தூளை சேர்த்து கிளற வேண்டும். பின்னர் பச்சரிசி மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து இளம் சூடான வெந்நீரை ஊற்றி  ஏற்கனவே கெட்டியாக வைத்துள்ள கலவையில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் கையில் சிறிதளவு எண்ணெய்  தடவிக்கொண்டு கலவையை எடுத்து கையில் வைத்து அழுத்தி லேசாக தட்டி அதன் நடுவில் பூரணத்தை வைத்து இலையின் ஓரத்தை மூடி பின்பு  திறந்து அதே வடிவத்துடன் இட்லி சட்டியில் வைத்து வேக வைத்து எடுத்தால் கசகசா பேரிச்சம் கொழுக்கட்டை தயார். மற்ற கொழுக்கட்டைகளை  விட இதில் பேரீட்சை சேர்த்துள்ளதால் தேவையான இரும்பு சத்தும் வித்தியாசமான சுவையுடனும் இருக்கும்.

10. திரளி இலை கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

பச்சரிசி
அச்சுவெல்லம்
தேங்காய்
ஏலக்காய்
5 திரளி இலை

எப்படி செய்வது?

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்சியில் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய் துருவல், அச்சுவெல்லம், ஏலக்காய்,  கலந்து நன்றாக கிளறி பூரணத்தை தயார் செய்ய வேண்டும். திரளி இலையை கோள் வடிவம் செய்து பூரணத்தை அதில் வைத்து இட்லி பானையில்  வேகவைக்க வேண்டும். வேகவைத்து எடுத்தால் திரளி இலை கொழுக்கட்டை தயார்.

ஃபிரெஞ்சு ஆனியன் சூப்..

ஃபிரெஞ்சு ஆனியன் சூப்..

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 4, வெண்ணெய் - 50 கிராம், வெள்ளை வெங்காயம் - 2 (பெரியது), சீஸ் (அ) பனீர் - 50 கிராம், காய்கறி வேக வைத்த தண்ணீர் - ஒரு லிட்டர், சர்க்கரை - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை: 'மைக்ரோவேவ் அவன்’-ஐ 'ப்ரி-ஹீட்’ செய்து, பிரெட் ஸ்லைஸ் நடுவில் துருவிய சீஸ் அல்லது பனீரை வைத்து மொறுமொறுப்பாக ஆகும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

கடாயில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். இதில் சர்க்கரை, உப்பு சேர்த்து, பொன்னிறமாக ஆகும் வரை மேலும் வதக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, கெட்டியானவுடன் இறக்கவும். வறுத்த பிரெட் துண்டுகளை கப்பில் வைத்து, அதன் மேல் சூப் ஊற்றி, மிளகுத்தூள், சிறிதளவு துருவிய சீஸ் தூவி பரிமாறவும்.

குறிப்பு: 'மைக்ரோ அவன்’ இல்லாதவர்கள் தோசைக்கல்லை பயன்படுத்தி இதை செய்யலாம்.

காய்கறி வேகவைத்த தண்ணீர் தயாரிக்க: வெங்காயம், செலரி, கேரட், டர்னிப், தக்காளி - தலா ஒன்று ( பெரிதாக நறுக்கவும்), பூண்டு - 2 பல் (தட்டவும்), பிரிஞ்சி இலை - ஒன்று, தைம் இலை - ஒரு டீஸ்பூன், பாஸில் இலை - ஒரு டீஸ்பூன், மிளகு - 3 டீஸ்பூன், லவங்கம் - 2, பட்டை - ஒன்று, உப்பு - தேவையான அளவு, தண்ணீர் - 3 லிட்டர் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்கறிகள் மற்றும் இதர பொருட்களை போட்டு முதலில் அதிக தீயில் 5 - 10 நிமிடம் கொதிக்கவிட்டு, பிறகு மிதமான தீயில் 30-45 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஆறியவுடன் வடிகட்டி பாட்டிலில் சேகரித்துக் கொள்ளவும்.

வெண்டைக்காய் சூப்..

வெண்டைக்காய் சூப்..

தேவையானவை: வெண்டைக்காய் - 4 (பெரியதாக நறுக்கவும்), சாதம் - ஒரு கப், வெள்ளை மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெயை விட்டு, சூடானதும் நறுக்கிய வெண்டைக்காயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு நன்கு வதக்கி, தண்ணீர் ஊற்றி, சாதம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள்சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கி பரிமாறவும்.

தேவைப்பட்டால் ஒரு முட்டையை நன்கு கலக்கி சேர்க்கலாம் (நன்கு சூடாக இருக்கும்போதுதான் முட்டையைச் சேர்க்க வேண்டும்).

பொட்டேட்டோ சீஸ் பால்ஸ்.

பொட்டேட்டோ சீஸ் பால்ஸ்.

*தேவையானவை :*

உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் - அரை கப் (துருவியது)
சீஸ் - அரை கப்
கார்ன் - தேவைக்கேற்ப
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவைக்கேற்ப
பிரெட் தூள் - தேவைக்கேற்ப

*செய்முறை :*

👁‍🗨 உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

👁‍🗨 அதில் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், கொத்தமல்லி, மிளகாய்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். அதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

👁‍🗨 கார்ன் ஃப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளை முக்கி எடுத்து, பின்னர் பிரெட் தூளில் புரட்டவும்.

👁‍🗨 இந்த உருண்டைகளை எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.

👁‍🗨 உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து எடுக்கவும்.

*சுவையான பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் தயார்.*

டொமெட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.

நம்ம…தமிழ்நாட்டின் ஸ்பெஷல் டிஷ்…

நம்ம…தமிழ்நாட்டின் ஸ்பெஷல் டிஷ்…

1. சிம்மக்கல் – கறி தோசை, கோலா உருண்டை
2. நடுக்கடை – இடியாப்பம்,ஆட்டுக்கால் பாயா
3. சிதம்பரம் – கொத்சு
4. புத்தூர் – அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்
5. திருவானைக்கா – ஒரு ஜோடி நெய் தோசை
6. கும்பகோணம் – பூரி,பாஸந்தி
7. ஸ்ரீரங்கம் – இட்லி பொட்டலம்
8. மன்னார்குடி – அல்வா
9. கூத்தாநல்லூர் – தம்ரூட்
10. நீடாமங்கலம் – பால்திரட்டு
11. திருவையாறு – அசோகா
12. கும்பகோணம் – டிகிரி காபி
13. விருதுநகர் – பொரிச்ச பரோட்டா
14. கோவில்பட்டி – கடலை மிட்டாய்
15. ஆம்பூர் – தம் பிரியாணி
16. நாகர்கோவில் – அடை அவியல்
17. சாத்தூர் – சீவல்
18. திருநெல்வேலி -இருட்டுக் கடை அல்வா
19. ஸ்ரீவில்லிபுத்தூர் – பால்கோவா
20. செங்கோட்டை – பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவல்
21. மணப்பாறை – அரிசி முறுக்கு
22. கீழக்கரை – ரொதல்அல்வா
23. திண்டுக்கல் – தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி
24. பண்ருட்டி – முந்திரி சாம்பார்
25. மதுரை – ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்
26. சாயல்குடி – கருப்பட்டி காபி
27. பரமக்குடி – சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா
28. பழனி – சித்தநாதன் பஞ்சாமிர்தம்
29. கமுதி – மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி
30. புதுக்கோட்டை – முட்டை மாஸ்
31. தூத்துக்குடி – மக்ரூன்
32. சௌக்கார் -பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி
33. கன்னியாகுமரி – தேங்காய் சாதம், மீன் குழம்பு
34. ராமநாதபுரம் – கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்
35. ஈழத் தமிழர்கள் – சோதி மற்றும் தேங்காய்ப் பால்
36. செட்டிநாடு – ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும் அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில….!!

1. குழிப்பணியாரம்
2. வாழைப்பழ தோசை
3. எண்ணெய் கத்தரிக்காய்
4. பால் பணியாரம்
5. பூண்டு வெங்காய குழம்பு
6. ரவா பணியாரம்
7. பால் கொழுக்கட்டை
8. சேமியா கேசரி
9. மோர் குழம்பு
10. நாட்டுகோழி மிளகு வறுவல்
11. இறால் தொக்கு
12. நட்டுக் கோழி ரசம்
13. நண்டு மசாலா
14. வெண்டைக்காய் புளிக்கறி
15. பருப்பு சூப்
16. ரிப்பன் பக்கோடா
17. பருப்பு உருண்டை குழம்பு
18. குருமா குழம்பு
19. தேன்குழல்
கருப்பட்டி பணியாரம்
20. சீயம் மாவுருண்டை

உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்..

கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத ‘மசாலா’ பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.

“வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக. இந்த தொகுப்பு சமர்ப்பணம்”

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

மதுரை இட்லி கடை சாம்பார்

மதுரை இட்லி கடை சாம்பார்

இந்த சாம்பார் மதுரையில் நான் ஒரு ஒட்டலில் சாப்பிட்டது
இட்லியுடன் இணைந்து சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

அந்த ஒட்டல் சமையல்காரரிடம் செய்முறையயை தெரிந்து கொண்டேன். இதோ உங்களுக்காக

இந்த சாம்பார் நெய் பொங்களுடன் சாப்பிட தேவாமிர்தம் போல் இருக்கும்.

செய்து ஒரு புடி படித்துவிட்டு சொல்லுங்கள் இதன் சுவையை !!!

தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் 15 ( அம்மிகல்லில் நசுக்கியது)
தக்காளி 4 ( விழுதாக மையாக அரைத்தது)
பச்சை மிளகாய் 4
கடலை மாவு 2 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 2 கொத்து
கொத்தமல்லி விதை 3 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
வரமிளகாய் 4
வெந்தயம் 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
துவரம் பருப்பு 1/4 கப்
கொத்தமல்லி இலைகள் 1/2 கைப்பிடி
கடுகு 1 தேக்கரண்டி
உளுந்து பருப்பு 1 1/2 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
பூண்டு பற்கள் 3 ( அம்மிகல்லில் நசுக்கியது)
மரசெக்கு கடலெண்ணய் 3 மேஜைக்கரண்டி
பசு நெய் 1 மேஜைக்கரண்டி

செய்முறை
1. பிரஷர் குக்கரில் கழுவிய பருப்பை சேர்த்துகோங்க , நன்றாக 10 நிமிடங்கள் வரை விட்டுகோங்க நன்றாக குழைய குழைய வேக வைத்துகொள்ள வேண்டும்.

2. வடச்சட்டியில் எண்ணெய் விடாமல் கொத்தமல்லி விதை, சீரகம், வெந்தயம் மற்றும் வரமிளகாய் சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக மணம் வீசும் வரை அடுப்பை சிறுதீயில் வைத்து வறுத்து கொள்ள வேண்டும்.

3. இப்பொழுது நன்றாக ஆறிய உடன் மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

4. இப்பொழுது கடலை மாவை தண்ணீர் சேர்த்து நன்றாக கட்டிகள் விழாமல் கரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

5. இப்பொழுது வடச்சட்டியில் மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும், அதில் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

6. பிறகு அதில் அம்மிகல்லில் நசுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும். அதில் அம்மிகல்லில் நசுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

7. அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்துகோங்க நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

8. அதில் மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் தேவையான  அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

9. பிறகு மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்துகோங்க நன்றாக இரண்டு நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். அதில் கடலை மாவு கலவையை சேர்த்துகோங்க மற்றும் அதில் 1 கப் தண்ணீர் சேர்த்துகோங்க நன்றாக கிளறி சிறிது சிறுதீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

10. இந்த கலவையை பிரஷர் குக்கருடன் உள்ள பருப்பு கலவையில் சேர்த்துகோங்க அதாவது பிரஷர் குக்கரை அடுப்புல வைத்து பிரஷர் குக்கரின் மூடியை மூடி 3-4 விசில் வரை விட்டுகோங்க.

11. அதன் பின்னர் பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் அதில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். இறக்கும் முன் பசுநெய்யை 1 மேஜைக்கரண்டி விடவும்.
                                    
எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடலாம்..

எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடலாம்..

உணவு நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்று.

நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவும் சாப்பிடுகிறோம்.

ஆனால் எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது?

இப்படி ஒரு சுவாரசியமான விசியத்தை படித்தேன்.

உண்மையிலே  அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.

1. ஞாயிறு ---  சூரியன்

கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,

சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,

மாதுளை ஜூஸ்,   கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.

சிம்ம ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

2. திங்கள் --- சந்திரன்

பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,

பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல்,

தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.

கடக  ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

3. செவ்வாய் --- செவ்வாய்

துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,

பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,,தர்பூசணி ஜூஸ்,,

தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.

மேஷ, விருச்சிக   ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

4. புதன் ---  புதன்

கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,

பாவக்காய் கொத்சு,  முருங்கைக் காய் சூப்,

பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,

வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.

மிதுனம், கன்னி ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

5. வியாழன் --- குரு

சுக்கு காபி,அல்லது கஷாயாம், கார்ன் சூப்,

கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,

தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,

சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,

கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,

மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.

தனுசு, மீன   ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

6. வெள்ளி --- சுக்கிரன்

பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,

தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,

முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,

இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை,

ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ் ,

கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,

நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு  சாலட்.

ரிஷபம், துலா ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

7. சனி --- சனி

ஜிலேபி,எள் உருண்டை, அதிரசம்,

சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல்,

எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம்,

மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,

புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,

நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ்,

பாதாமி, முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.

மகரம், கும்ப ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

இதை சொன்னவரும் ஜோதிட கலையில்

முனைவர் பட்டம் பெற்றவர்.

ஜோதிடத்தின் பல பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர்.

அதனால் இதன் நண்பகத்தன்மையும் இருக்கலாம்.

இதை பார்க்கும் போது எனக்கு ஒன்று புரிந்தது.

கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும்

அடிப்படை பொருட்களைப்  பார்த்தால், அவை எல்லமே

அந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களே.

நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு அற்புதமாக

ஆன்மீகத்தையும், அறிவியலையும் தொடர்புபடுத்தி

நமக்கு ஒரு அழகான, நலமான  வாழ்வியல் முறையை

 அமைத்து  கொடுத்துள்ளார்கள்???????

ஆனால் இன்றைய தலைமுறையினரின் உணவு

  பழக்கங்கள் நம்மை கவலைப் பட வைக்கிறது,
.
அவர்களையும் முழுமையாக குறை சொல்ல முடியாது.

இன்றைய காலகட்டத்தின் நடைமுறை வாழ்க்கை

அதற்குரிய   வாழ்வியல் முறையை,தெரிந்தோ தெரியாமலோ,

விரும்பியோ,  விரும்பாமலோ பின்பற்ற வேண்டிய

கட்டாயத்தில் கொண்டு விட்டுள்ளது.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களுக்கு

எடுத்துச் சொல்லி , அவர்களால் எந்த அளவிற்கு

 பின்பற்ற முடியுமோ   அந்த அளவிற்கு எடுத்துக்

கொள்ள செய்வதாகும். வாழ்க நலமுடன்.

விநாயகர் SPL இனிப்புகள் மில்க் ஹல்வா

விநாயகர் SPL  இனிப்புகள் மில்க் ஹல்வா

தேவையான பொருட்கள்

பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 100 கிராம்
எலுமிச்சைப்பழம் - 1 (சாறு எடுக்கவும்)
மைதா மாவு - 25 கிராம்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 25 கிராம்

செய்முறை:

1.அடுப்பில் பாலை சுட வைத்து நன்கு கொதித்ததும் இறக்கி, அதிலிருந்து முக்கால் லிட்டர் பாலை தனியாக எடுத்துக் கொள்ளவும்.

2.எடுத்த பாலில் எலுமிச்சைச் சாறை ஊற்றி பாலைத் திரிய வைக்கவும்.

3.திரிந்த பாலை கனமான துணியில் ஊற்றி, நன்றாக வடிகட்டவும், இதுதான் பனீர். மீதம் இருக்கும் பாலை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

4.இதில் மைதாமாவை சேர்த்து கெட்டிப்படாமல் கலக்கவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கிளறவும்.

5.சர்க்கரை நன்கு கரைந்ததும், ஏற்கெனவே வடிகட்டி எடுத்து வைத்துள்ள பனீர், நெய் சேர்த்து அடிப்பிடிக்காதவாறு கிளறிக்கொண்டே இருக்கவும்.

6.கலவை திரண்டு ஒட்டாமல் அல்வா பதத்துக்கு வரும் போது, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, ரோஸ் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்.

7.நெய் தடவிய ஒரு தட்டில் கலவையைச் சேர்த்து ஆறியதும் விருப்பமான வடிவில் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

வித விதமான குருமா

வித விதமான குருமா

தினமும் இதே சாம்பாரும் சட்னியும்தானா? வாய்க்கு ருசியா ஒரு குருமா, ஒரு கிரேவி… ஒண்ணு கிடையாது நம்ம வீட்டுல!’’ என்று உங்கள் இல்லத்தரசரோ, அருமைப் பிள்ளையோ அலுத்துக்கொள்ள..

‘‘நான் எங்கே போவேன் மசாலாவுக்கும், கிரேவிக்கும்! இது என்ன ஹோட்டலா?’’ என்று அங்கலாய்க்கிறீர்களா?

தூக்கியெறியுங்கள், உங்கள் கவலையை! ஹோட்டல் சுவையைவிடவும் பிரமாதமான கைப்பக்குவத்தில் எல்லா சைடு டிஷ்களையும் நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.

இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, ப்ரெட், பூரி, நாண், பரோட்டா, சாதம் என்று அத்தனைக்கும் தொட்டுக்கொள்ள ஏற்ற ருசியான முப்பது வகை மசாலா – குருமாக்கள் செய்யும் விதத்தைக் கற்றுத் தருகிறார்

 ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம். இவை எல்லாமே குறைந்த விலையில் சுலபமாகக் கிடைக்கக்கூடிய பொருட்களில் செய்யக்கூடிய ஐட்டங்கள் என்பது கூடுதல் சிறப்பு! செய்து, பரிமாறுங்கள்! அப்புறம் பாருங்கள்… வீட்டில் உங்களுக்குக் கிடைக்கும் அமோக பாராட்டை!

மணமணக்கும் மசாலா ஐட்டங்கள் தயாரிப்பில், கரம் மசாலா பொடி மற்றும் கறி மசாலா பொடி உதவிக்கரம் நீட்டுகின்றன. இந்த இணைப்பிதழில் அணிவகுக்கும் மசாலா செய்முறைகளில் இது பற்றிய குறிப்புகள் வரும்.

 கரம் மசாலா பொடியும் கறி மசால் பொடியும் தயாரிப்பது எப்படி என்பது மட்டும் இங்கே…

பனீர் பட்டர் மசாலா!

தேவையானவை:பனீர் – 200 கிராம், பெரிய வெங்காயம் -3, தக்காளி – 4, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 50 கிராம், ஃப்ரெஷ் க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன் (பசும் பாலை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், பாலின் மீது அடர்த்தியாக ஏடு படியும். அதுதான் ஃப்ரெஷ் க்ரீம்!), காய்ந்த வெந்தயக் கீரை – 2 டீஸ்பூன்.

செய்முறை: பனீரை சிறு துண்டுகளாக்குங்கள். வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரையுங்கள். இப்போது, வாணலியில் வெண்ணெயைப் போட்டு லேசாக உருக்குங்கள். அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை ‘ஸிம்’மில் வையுங்கள். வாணலியில் உள்ளவை நிறம் மாறி, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள். கடைசியாக, பனீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள். ஃப்ரெஷ் க்ரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.

குழந்தைகள் விரும்பும் சத்தான சைட் டிஷ், இந்த பனீர் பட்டர் மசாலா!

கரம் மசாலா பொடி: இந்தப் பொடியை ஒரு வாரம் மட்டுமே வைத்திருக்கும் அளவுக்கு கொஞ்சமாகத் தயாரிப்பது நல்லது. வாசத்தோடு பயன்படுத்தத் தான் இப்படி!

செய்முறை: லவங்கம் – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 1 டீஸ்பூன், பட்டை – 4, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன்… இவை அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்தால், அதுதான் கரம் மசாலா பொடி!

கறி மசாலா பொடி: இதை, மற்ற பொடிகளைப் போல மொத்தமாக செய்து வைத்துக் கொள்ளலாம்.

செய்முறை: காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் – 1 கப், தனியா – அரை கப், மிளகு – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 2 டேபிள் ஸ்பூன், பட்டை, லவங்கம்,ஏலக்காய் – தலா 5. இவை அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து, அரைத்தால் கறி மசாலா ரெடி!

செட்டி நாடு குருமா!

தேவையானவை: கத்தரிக்காய் – 5, உருளைக்கிழங்கு (நடுத்தர அளவில்) – 2, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, உப்பு – தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை — சிறிதளவு, பூண்டு – 2 பல்.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன். அரைக்க: தேங்காய்த் துருவல் – 1 கப், காய்ந்த மிளகாய் – 6 முதல் 8 வரை, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சீரகம், சோம்பு – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேருங்கள். பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

இட்லி,தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா இது.

மட்டர் பனீர் மசாலா!

தேவையானவை:பட்டாணி -1 கப், பனீர் -200 கிராம், பெ. வெங்காயம்-3, தக்காளி – 5, இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, முந்திரி அரைத்த விழுது – தலா 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

செய்முறை: பட்டாணியை உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அடுத்து, வாணலியில் எண்ணெயும் நெய்யும் விட்டு நன்றாகக் காய விடுங்கள். அதில், வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் மாறும்வரை வதக்குங்கள். அதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர் அத்துடன், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், வேகவைத்த பட்டாணி, முந்திரி விழுது ஆகியவற்றைச் சேருங்கள். கால் கப் தண்ணீர், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள்.

அசத்தலான மட்டர் பனீர் மசாலா ரெடி!

வெஜிடபிள் குருமா!

தேவையானவை: இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது – 2 கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 3, தேங்காய்த் துருவல் – 1 கப், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5.

செய்முறை: காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, ஜாக்கிரதையாக வெயிட்டைத் தூக்கி, ப்ரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவையுங்கள். தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.

அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

வாசனையான வெஜிடபிள் குருமா ரெடி!

குறிப்பு: காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டுக் கழுவி எடுத்து, துண்டுகளாக்கி, கடைசியாகக் காய்கறிகளைப் போடும்போது சேர்க்கவேண்டும். குக்கரில் போடக்கூடாது.

பீஸ் மசாலா!

தேவையானவை:பட்டாணி – 1 கப், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 3, புளிக்காத தயிர் – கால் கப், இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 50 கிராம், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு.

செய்முறை:பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்கி, ஆறவைத்து அரைத்தெடுங்கள். இப்போது, வெண்ணெயை உருக்கி, அதில் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த வெங்காய விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன், உப்பும் பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு, தயிர், தேவையான தண்ணீர், வேகவைத்த பட்டாணியை சேர்த்து, கரம் மசாலாவைத் தூவி, 2 நிமிடம் கொதித்ததும் இறக்குங்கள்.

புதினா குருமா!

தேவையானவை: பச்சை பட்டாணி – 1 கப், பெரிய வெங்காயம் – 2.
தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: ஆய்ந்து, அலசி, கழுவிய புதினா – 1 கட்டு, தேங்காய்த்துருவல் – 1 கப், இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 5, சோம்பு – அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 6, பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். சிறிது எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வதக்கி, ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள்.  இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுதைச் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி, பட்டாணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

புதினா மணக்க, மணக்க நாவுக்கும் நாசிக்கும் விருந்தளிக்கும் இந்தக் குருமா!

பெப்பர் பீஸ் மசாலா!

தேவையானவை:பட்டாணி – 2 கப், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 4, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள், தனியா தூள் – தலா 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – கைப்பிடியளவு, உப்பு – சிறிதளவு.

வறுத்துப் பொடிக்க: மிளகு – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை, வெறும் கடாயில் வறுத்துப் பொடியுங்கள். இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்குங்கள். வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும், அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். அதனுடன், தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி, பொடித்து வைத்துள்ள தூள், கரம் மசாலா தூள், சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால், அதுதான்…

‘பிரமாதம்’ என்று சொல்லவைக்கும் பெப்பர் பீஸ் மசாலா!

தக்காளி குருமா!

தேவையானவை: பெ. வெங்காயம் – 3, தக்காளி – 6 முதல் 8 வரை, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 கப், கசகசா – 1 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, கறிவேப்பிலை – சிறிது.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 6, பட்டை, லவங்கம் – தலா 1, சோம்பு – கால் டீஸ்பூன், மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுங்கள். பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத் தனியே அரைத்தெடுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர், அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

தளதள தக்காளி குருமா மணமணக்கும்!

கோபி மசாலா!

தேவையானவை:காலிஃப்ளவர் – சிறிய பூவாக 1, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

தாளிக்க: பட்டை – 1, சீரகம் – அரை டீஸ்பூன்.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 6 பல், மிளகாய்த் தூள், கசகசா – தலா 2 டீஸ்பூன், தனியா தூள், மிளகு – தலா 1 டீஸ்பூன், சோம்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 8.

செய்முறை:காலிஃப்ளவர் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேருங்கள். அதில், பத்து நிமிடங்கள் காலிஃப்ளவரை

 போட்டு, வெளியில் எடுத்துக் கழுவி, சிறு துண்டுகளாக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, பட்டை, சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கி, நிறம் மாறியதும், தக்காளி, அரைத்து வைத்துள்ள விழுது ஆகியவற்றைப் போட்டு, காலிஃப்ளவர் துண்டுகள், உப்பு சேர்த்து, பச்சை

 வாசனை போக வதக்குங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

கலக்கல் கோபி மசாலா நிமிஷத்தில் தயார்!

மசாலா குருமா!

தேவையானவை:விரும்புகிற காய் (கலந்ததாகவோ, தனியாகவோ) நறுக்கியது – 2 கப், வெங்காயம் – 3, தக்காளி – 4, உப்பு – தேவைக்கு. தாளிக்க: சோம்பு – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், சோம்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் – இரண்டரை டீஸ்பூன், தனியா தூள் – ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – அரை கப், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1.

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க உள்ளவற்றைப் போட்டுத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள்.

 பின்னர், தக்காளி, காய்(கள்), அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில் வதக்குங்கள். காய்கறி(கள்) வெந்து, பச்சை வாசனை போன பிறகு,

 தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்குங்கள்.

*மசாலா, குருமா… இரண்டின் சுவையையும் அனுபவியுங்கள்.*

பச்சை தேங்காயின் பயன்கள்

பச்சை தேங்காயின் பயன்கள்

தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை....

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்........

தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம்......சகலவிதமான நோய்களையும்      குணமாகக்கும்....

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்...

இரத்தத்தை சுத்தமாக்கும்...

உடலை உரமாக்கும்.....

உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்......

தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை......               நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல...தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்....

இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்...

குறிப்பு :
தேங்காய் குருமா
தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக(கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.

சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( கொலஸ்ட்ரால்)

தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்காள சிற்றுண்டி தந்து பாருங்கள்...அவ்வளவு ஆரோகியம்...

பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள், ஆன இப்போது மாட்டு பால் ஊத்தி 🤒 ஊ..ஊ..ஊ....

தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள், ஆன இப்போது பாக்கெட் பால்?..

காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு
சர்க்கரை (அ)
கருப்பட்டி (அ)
தேன்
சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள்...
ஆரோகியத்தை தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை...

உடல் வலி தாங்க முடியலையா? இத சாப்பிட்டா உடனே உடல்வலி பறந்து போகும்!

உடல் வலி தாங்க முடியலையா? இத சாப்பிட்டா உடனே உடல்வலி பறந்து போகும்!

உடல் வலி என்பது அனைவருக்கும் பொதுவானது தான். குறிப்பாக அதிம வேலைப்பழு உள்ளவர்கள், நிம்மதியான உறக்கம் இல்லாதவர்கள், ஒட்டப்பந்தய அல்லது விளையாட்டு வீரர்கள், குடும்பத்தலைவிகள் என பலரையும் இது வாட்டி எடுக்கக்கூடியது.
இந்த உடல் வலியிலிருந்து தப்பிக்க ஒரு சில பொருட்களை சாப்பிடுவதும், ஒரு சில வழிமுறைகளை கையால்வதாலும், இந்த உடல் வலியிலிருந்து தப்பிக்க முடியும்.

உடல் வலி அதிகமாக இருப்பவர்கள் மற்றும் மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள், செரி ஜூஸை பருகலாம். இது சதைகளில் உண்டாகும் வலியை குறைக்கிறது. இது ஓட்டபந்தய வீரர்களுக்கும், உடற்பயிற்சி செய்து உடல்வலியால் அவதிப்படுவர்களுக்கு மிகச்சிறந்தது.

மற்றொரு சுவையான ஜூஸ் என்னவென்றால் ப்ளூபெரி தான். பல ஆய்வுகளில் ப்ளூ பெரி ஸ்மூத்தியை உடற்பயிற்சிக்கு முன்னால் குடிப்பதனால், சதைகள் சேதமாவதை தடுக்கலாம் என கூறுகின்றன. இது மன அழுத்தத்தையும் குறைக்கின்றன.

சிவப்பு மிளகாய் விதைகளில் கேப்சைசின் என்ற சத்து உள்ளது. இது தசைகளை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டது. மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இதனை எடுத்துக்கொள்ளலாம். மிளகாயை மிக்ஸியில் போட்டு ஒன்று இரண்டாக, முழுவதும் பொடியாக்காமல் அரைத்து, உணவுகளில் சேர்த்து சாப்பிட்டால் உடல் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

தொடர்ச்சியாக உடல்வலி இருப்பவர்களுக்கு விட்டமின் டி குறைபாடு இருக்கும். விட்டமின் டி திரவ, கேப்சூல், மாத்திரைகள் என்று பல வடிவங்களில் கிடைகிறது. உணவு வடிவில் தேவை என்றால், மீன், முட்டை போன்றவற்றை சாப்பிட்டலாம். சூரிய ஒளியில் தினமும் சிறிது நேரம் நிற்பதாலும் விட்டமின் டி சத்தினை பெறலாம்.

மெக்னீசியம் மனித உடலுக்கு தேவையான ஒரு முக்கியமான சத்தாகும். இது தசைகள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இது வாழைப்பழம், பாதாம், பிரவுன் அரிசி ஆகியவற்றில் நிறைந்துள்ளது.

ஐஸ் ஒத்தடம் அல்லது சூடான நீரில் ஒத்தடம் தருவதினால், உடல் வலியிலிருந்து உடனடியாக விடுபடலாம். இது மிகவும் எளிமையான மற்றும் விரைவான வழியும் கூட...

உடல் வலியிலிருந்து விடுபட நல்ல உறக்கம் தேவை. அதிகமான வேலைப்பளு, ஓய்வின்மை ஆகியவைகளும் உடல் வலிக்கு காரணமாக இருக்கும். எனவே போதுமான நேரம் தூங்க வேண்டியது அவசியம்.

புதன், 23 ஆகஸ்ட், 2017

பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

விநாயகர் சதுர்த்திக்கு படைக்கும் கொழுக்கட்டை வகைகளுள் ஒன்று பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை ஆகும்.

இதனை எளிய முறையில் தயார் செய்ய முடியும். சுவையான இக்கொழுக்கட்டை செய்முறை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 200 கிராம்

புழுங்கல் அரிசி – 200 கிராம்

சீனி – 150 கிராம்

பாசிப்பருப்பு – 100 கிராம்

எள்ளு – 25 கிராம்

தேங்காய் – 1 எண்ணம்

செய்முறை

முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு உலர்ந்த துணியில் போடவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து மிசினில் கொடுத்து இடித்துக் கொள்ளவும்.

பின் அடிகனமான பாத்திரத்தில் மாவைப் போட்டு அடுப்பில் வைத்து வறுத்தெடுக்கவும். வறுத்தெடுக்கும்போது மாவானது ஈரப்பதம் நீங்கி உலர்ந்தவுடன் பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும்.

பின் வறுத்த மாவினை சல்லடையில் போட்டு சலிக்கவும். கப்பியை மிக்ஸியில் போட்டு மீண்டும் சலிக்கவும். இப்போது கொழுக்கட்டை தயாரிக்க மாவு தயார்.

பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை – தேவையான பொருட்கள்

இதனை சதுர்த்திக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னதாகவே தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

தேங்காயை உடைத்து துருவிக் கொள்ளவும். பின் வாணலியில் தேங்காயை வறுத்துக் கொள்ளவும்.

பாசிப்பருப்பு, எள்ளு ஆகியவற்றையும் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் வறுத்து வைத்துள்ள கொழுக்கட்டை மாவு, பாசிப்பருப்பு, எள்ளு, தேங்காய், சீனி ஆகியவற்றைப் போட்டு ஒருசேரக் கலக்கவும்.

மாவுடன் பாசிப்பருப்பு எள்ளு கலந்த பின்

தேவையான அளவு தண்ணீரை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும்.

பின் அதில் கொதிக்க வைத்துள்ள தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்துப் பிசையவும்.

சரியான பதத்தில் கொழுக்கட்டை மாவு

கொழுக்கட்டை மாவினை சப்பாத்தி மாவு போல் திரட்டிக் கொள்ளவும்.

திரட்டிய கொழுக்கட்டை மாவு

பின் அதிலிருந்து சிறிய எலுமிச்சை அளவு எடுத்து நீளவாக்கில் படத்தில் காட்டியவாறு கொழுக்கட்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். இவ்வாறாக எல்லா மாவினையும் கொழுக்கட்டைகளாக செய்து கொள்ளவும்.

பிடித்து வைத்த கொழுக்கட்டை

பின் கொழுக்கட்டைகளை இட்டிப் பானையில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

வேகவைக்கத் தயார் நிலையில் கொழுக்கட்டை

சுவையான பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை தயார்.

சுவையான பாசிப்பருப்பு எள்ளுக் கொழுக்கட்டை

இது பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்கும். சிறியவர்கள் இக்கொழுக்கட்டையை விரும்பி உண்பர். நீங்களும் விநாயக சதுர்த்திக்கு உங்கள் வீட்டில் செய்து விநாயகருக்கு படையலிட்டு வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

குறிப்பு

இதில் சேர்க்கப்படும் பொருட்கள் எல்லாவற்றையும் வறுத்துவிடுவதால் இக்கொழுக்கட்டை மணமாகவும், சுவைமிகுந்தும் இருக்கும்.

விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு ஏலக்காய்த் தூளை கொழுக்கட்டை மாவினைத் திரட்டும் போது சேர்த்து கொழுக்கட்டை தயார் செய்யலாம்.

பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

பால் கொழுக்கட்டை என்பது மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. இது பொதுவாக அரிசி மாவில் தயார் செய்யப்படுகிறது. இது எளிதில் செரிப்பதுடன் பசியைத் தாங்கும் தன்மை உடையது.

பால் கொழுக்கட்டை என்பது கொழுக்கட்டையை தண்ணீரில் வேக வைத்து பின் அதில் பால் மற்றும் மண்டை வெல்லம் சேர்த்து தயார் செய்யப்படுகிறது.

இக்கொழுக்கட்டையை எளிமையாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் செய்யும் முறை பற்றிப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு – 400 கிராம்

மண்டை வெல்லம் – 400 கிராம்

சுக்கு – 5 கிராம்

தேங்காய் (சிறியது) – ½ மூடி

காய்ச்சிய பால் ‍ 1 கப்

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில் மண்டை வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். சுக்கைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.

பச்சரிசி மாவு

பச்சரிசி மாவினை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவினைப் போல் பெரிய உருண்டையாக திரட்டிக் கொள்ளவும்.

பின் அதிலிருந்து சிறிது மாவினை எடுத்து சிறிய உருண்டையாகவோ அல்லது விரல் வடிவிலோ திரட்டிக் கொள்ளவும். இவ்வாறாக எல்லா மாவினையும் கொழுக்கட்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கொழுக்கட்டை வடிவில் பிடித்த மாவு

பின் ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீரினை எடுத்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் திரட்டி வைத்துள்ள கொழுக்கட்டைகளை போடவும்.

தண்ணீரில் கொதிக்கும்போது

மீண்டும் தண்ணீர் கொதித்தவுடன் கொழுக்கட்டைகளை கரண்டியை வைத்து கிளறி விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து கொழுக்கட்டை நிறம் மாறி இருக்கும் போது வெளியே எடுத்து விடவும்.

வெந்த கொழுக்கட்டை

மறுபடியும் கொழுக்கட்டைகளை போடுவதாக இருந்தால் ஏற்கனவே கொழுக்கட்டை வேக வைத்த நீரில் சிறிதளவு குளிர்ந்த தண்ணீரைச் சேர்த்து பின் தண்ணீரைக் கொதிக்க வைத்து கொழுக்கட்டைகளைப் போடவும்.

கொழுக்கட்டை வேக வைத்த நீரில் காய்ச்சிய பால் ‍ 1 கப் மற்றும் தூளாக்கி வைத்துள்ள மண்டைவெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் கரைந்த உடன் அதனுடன் தட்டி வைத்துள்ள சுக்கு மற்றும் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்க்கவும்.

எல்லாம் ஒன்றாகக் கலந்தவுடன் அதனுடன் வேக வைத்துள்ள கொழுக்கட்டைகளை சேர்க்கவும். ஓரிரு நிமிடங்களில் கலவையை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். சுவையான பால் கொழுக்கட்டை தயார்.

சுவையான பால் கொழுக்கட்டை

குறிப்பு:

இதே முறையில் கொழுக்கட்டையைப் பால் சேர்க்காமலும் தயாரிக்கலாம்.

வெல்லத்திற்குப் பதில் கருப்பட்டியைச் சேர்த்தும் கொழுக்கட்டை தயார் செய்யலாம்.

சுக்கு சேர்ப்பதால் கொழுக்கட்டை சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

30 வகை கத்தரிக்காய் சமையல்

30 வகை கத்தரிக்காய் சமையல்

கத்தரிக்காய் சாம்பார்

தேவையானவை: நீளமாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், துவரம்பருப்பு – அரை கப், புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடுகு – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்.

செய்முறை: துவரம்பருப்பை குக்கரில் குழைய வேகவைத்து எடுக்கவும். வறுக்கக் கொடுத்துள்ளவற்றை அரை டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து, நைஸாக அரைக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து, அதில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் கத்தரிக்காயை அதில் போட்டு பெருங்காயத்தூள் சேர்க்கவும். கத்தரிக்காய் வெந்ததும் அதில் அரைத்த மசாலாவை சேர்க்கவும். நன்றாகக் கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பைக் கடைந்து அதில் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் பொடிதூவல்

தேவையானவை: நீளமாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், புளி – கொட்டைப்பாக்களவு, மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க: தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து சற்று கரகரப்பாக அரைக்கவும். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் நறுக்கிய கத்தரிக்காயை போட்டு வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து அதில் வேகவைத்த கத்தரிக்காயை போட்டுக் கிளறி, கடைசியாக பொடியை தூவி, கிளறி இறக்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் பொரித்த கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், நெய் – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: ஒரு கடாயில் பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அதில் நறுக்கிய கத்தரிக்காய், உப்பை சேர்க்கவும். காய் வெந்ததும் அதில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் பிட்லை

தேவையானவை: குண்டாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து – கால் கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

மசாலா: தனியா, தேங்காய் துருவல் – தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6.

செய்முறை: மசாலா பொருட்களை வறுத்து அரைத்து வைக்கவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்க வும். புளியை ஒரு கப் நீரில் கரைத்து, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதி வர ஆரம்பித்ததும், கத்தரிக்காயை சேர்க்கவும். கத்தரிக்காய் வெந்ததும், வேகவைத்த பருப்பையும், அரைத்த மசாலா வையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் மிக்சட் மசாலா பொரியல்

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய், கோவைக்காய், கேரட், உருளைக் கிழங்கு, குடமிளகாய் – தலா கால் கப், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன்.

வறுத்து அரைக்க: மிளகு – அரை டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், மிளகாய் – 4, தனியா – 2 டீஸ்பூன், பட்டை – ஒரு துண்டு.

செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் சிவக்க வறுத்து பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து, அதில் எல்லா காய்கறிகளையும் போடவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். காய்கள் முக்கால் பதம் வெந்ததும் அதில் வறுத்து அரைத்த பொடியைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் உப்புமா

தேவையானவை: அரிசி ரவை – - ஒரு கப், பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு, சீரகம், கடுகு – தலா அரை டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, மிளகு, சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து தேங்காய் துருவல், கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் வதங்கியதும் 2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்த பொடி, அரிசி ரவையை போட்டு மிதமான தீயில் நன்றாகக் கிளறி, சிறிது கெட்டியானதும் குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

——————————————————————————–

எண்ணெய் கத்தரிக்காய்

தேவையானவை: சிறிய கத்தரிக்காய் – 12, புளி – எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கத்தரிக்காயை நான்காக கீறி பூச்சி இருக்கிறதா என பார்த்துக் கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறி வேப்பிலை, பெருங் காயத்தூள் தாளித்து, கத்தரிக்காயை போட்டு பிய்ந்து விடாமல் மிதமான தீயில் வதக்கவும். கத்தரிக்காய் வதங்கி யதும் சாம்பார் பொடியை சேர்க்கவும். பிறகு நன்றாக வதக்கி புளி தண்ணீரை ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்க வும். இவை நன்றாக சேர்ந்து கொதித்ததும் எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது தேங்காயை நைஸாக அரைத்து ஊற்றி, கொதிக்க விட்டு இறக்கவும்.

——————————————————————————–

வாங்கிபாத்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய், வடித்த சாதம் – தலா ஒரு கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, தனியா – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, கறிவேப்பிலை – சிறிது, மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து அதில் கத்தரிக்காயை போட்டு வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். சிறிது எண்ணெயில் தனியா, காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடிக்கவும். சாதத்தில் சிறிது உப்பு, வறுத்த அரைத்த பொடி, வதக்கிய கத்தரிக்காய், எலுமிச்சைச் சாறு என எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் துவையல்

தேவையானவை: பெரிய கத்தரிக்காய் – 1, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், புளி – கொட்டைப் பாக்களவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கத்தரிக்காயை எண்ணெய் தடவி சுட்டெடுக்கவும். ஆறியதும் தோலுரித்து, உள்ளே பூச்சியில்லாமல் உள்ளதா என பார்த்து மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு பொடித்து, பிறகு புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மசித்த கத்தரிக்காயையும் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

——————————————————————————–

கத்தரி முருங்கை மசாலா

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காய் – தலா ஒரு கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – கொட்டைப்பாக்களவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, அதில் கத்தரிக்காய், முருங்கைக்காயை போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி, புளியை கால் கப் தண்ணீரில் கரைத்து விட்டு நன்றாகக் கலந்து மூடி விடவும். அவ்வப்போது கிளறி விடவும். வெந்ததும் தண்ணீர் வற்றி விடும். மிதமான தீயில் சுருளக் கிளறி இறக்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் தயிர் பச்சடி

தேவையானவை: பெரிய கத்தரிக்காய், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 1, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கடுகு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், தயிர் – ஒரு கப்.

செய்முறை: கத்தரிக்காயில் எண்ணெய் தடவி சுட்டெடுக்கவும். ஆறியதும் தோலுரித்து உள்ளே பூச்சியில்லாமல் உள்ளதா என்று பார்த்து மசித்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். மசித்த கத்தரிக்காயில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து தயிருடன் கலந்து கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து சேர்க்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் கொத்சு

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், நறுக்கிய தக்காளி, பாசிப்பருப்பு – தலா அரை கப், பச்சைமிளகாய் – 3, புளி – கொட்டைப்பாக்களவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது.

செய்முறை: பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பச்சைமிளகாய், கத்தரிக்காய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். கத்தரிக்காய் சிறிது வதங்கியதும், புளியைக் கரைத்து ஊற்றவும். பிறகு வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடவும். பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். தேவையெனில் சிறிது வெங்காயமும் சேர்த்துக் கொள்ளலாம்.

——————————————————————————–

கத்தரி-காராமணி பிரட்டல்

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், காய்ந்த காராமணி – கால் கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய் துருவல், தனியா – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிது, சீரகம், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்

செய்முறை: காராமணியை முதல்நாள் இரவே ஊறவைத்து, மறு நாள் குக்கரில் வேக வைக்கவும். கத்தரிக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். முக்கால் பதம் வெந்ததும் வடிதட்டில் கொட்டவும். தேங்காய் துருவல், தனியா, காய்ந்த மிளகாயை அரைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, கத்தரிக்காயை போடவும். பிறகு வெந்த காரமணியை போட்டு வதக்கி அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறி இறக்கி, கொத்தமல்லியை தூவவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் பஜ்ஜி

தேவையானவை: வட்டமாக நறுக்கிய கத்திரிக்காய் – ஒரு கப், கடலைமாவு – அரை கப், அரிசிமாவு – ஒரு டேபிள்ஸ்பூன், கார்ன் ஃப்ளார் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்ஃப்ளார், உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து, அதிலிருந்து ஒரு டீஸ்பூன் எடுத்து மாவில் ஊற்றிக் கலந்து, பிறகு தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். இப்படி செய்தால் பஜ்ஜி அதிகம் எண்ணெய் குடிக்காது. கரைத்த மாவில் கத்தரிக்காய் வில்லைகளை தோய்த்து எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் காரக்குழம்பு

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய், வெங்காயம் – தலா அரை கப், தனியாத்தூள், மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, வெந்தயம் – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, வெல்லம் – சிறிதளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி, கொதிக்க ஆரம்பித்ததும் கத்தரிக்காயை போடவும். நன்றாக கொதித்து கத்திரிக்காய் வெந்து, குழம்பில் எண்ணெய் பிரிந்து வரும் போது வெல்லத்தை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

——————————————————————————–

கத்தரி – மொச்சை கூட்டு

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், மொச்சை, துவரம்பருப்பு – தலா கால் கப், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய், பொட்டுக்கடலை – ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, உப்பு – தேவையான அளவு

செய்முறை: மொச்சையை முதல்நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் வேக வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவிடவும். புளியை நன்றாகக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் கத்தரிக்காயை அதில் போடவும். காய் நன்றாக வெந்ததும் அதில் வேகவைத்த மொச்சையை போடவும். பிறகு சாம்பார் பொடி சேர்த்து 2 நிமிடம் கொதித்ததும் அதில் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து தேங்காய், பொட்டுக்கடலையை அரைத்து விடவும். கடைசியாக கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

ஸ்டஃப்டு கத்தரிக்காய்

தேவையானவை: சிறிய கத்தரிக்காய் – 15, தேங்காய் துருவல், எண்ணெய் – அரை கப், காய்ந்த மிளகாய் – 5, புளி – கொட்டைப் பாக்களவு, உப்பு – தேவையான அளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், தனியா – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை: தனியா, தேங்காய், உப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், புளி எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை நான்காக பிளந்து பூச்சியில்லாமல் இருக்கிறதா என பார்த்து, அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கத்தரிக்காயில் அடைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, ஸ்டஃப்டு கத்தரிக்காய்களை போட்டு கிளறி மூடி வைக்கவும். மிதமான தீயில் கிளறி, எண்ணெய் பிரியும்போது இறக்கவும்.

——————————————————————————–

கத்தரி வதக்கல்

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், நறுக்கிய வெங்காயம் – அரை கப், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – கொட்டைப்பாக்களவு, எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு கத்தரிக்காயை போடவும். உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, புளியை கெட்டியாக கரைத்து விடவும். நன்றாக வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். விருப்பட்டால் புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்கலாம்.

——————————————————————————–

ரசவாங்கி

தேவையானவை: சின்ன பிஞ்சு கத்தரிக்காய் – 10, தக்காளி – 2, துவரம்பருப்பு, தனியா – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு, நெய் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, புளி – கொட்டைப்பாக்களவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது

செய்முறை: புளியை நீர்க்கக் கரைத்து உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கத்தரிக்காயை நான்காக நடுவில் சீவி முழு கத்தரிக்காயாக புளி தண்ணீரில் போடவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி போடவும். துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக விடவும். தனியா, சீரகம், மிளகு, மிளகாய் ஆகியவற்றை வறுத்து, சற்று கரகரப்பாக பொடித்து கத்தரிக்காய் வெந்ததும் அதில் சேர்க்கவும். துவரம்பருப்பை கடைந்து ஊற்றி, பொங்கி வந்ததும் இறக்கி, நெய்யில் கடுகு தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

——————————————————————————–

பருப்பு – கத்தரி பொரியல்

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: பாசிப்பருப்பில் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து குழைய விடாமல் வேகவைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கத்தரிக்காய், உப்பு சேர்த்து வதக்கவும். காய் வதங்கியதும், வேகவைத்த பாசிப்பருப்பை போட்டு துருவி வைத்த தேங்காயையும் சேர்த்து இறக்கவும்.

தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.

——————————————————————————–

கத்தரிக்காய் தளர்கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், புளி – கொட்டைப் பாக்களவு, சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், அரிசி மாவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: புளியை நீர்க்கக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, கத்தரிக்காயை அதில் போடவும். நன்றாக வெந்து குழைந்தவுடன் அதில் சாம்பார் பொடியை போட்டு, அரிசி மாவை தண்ணீரில் கரைத்து விட்டு கொதித்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் சிதம்பரம் கொத்சு

தேவையானவை: நறுக்கிய கத்தரிக்காய் – ஒரு கப், நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப், தனியா – 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, வெந்தயம், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கீறிய பச்சைமிளகாய் – 2, புளி – 2 கொட்டைப் பாக்களவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை— – சிறிதளவு.

செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம் போட்டு வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ளவும். மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு, கத்தரிக்காயை வறுத்து எடுத்து வைக்கவும். பிறகு வெங்காயத்தை வதக்கி, கீறிய பச்சைமிளகாயையும் மஞ்சள்தூளையும் சேர்க்கவும். வெங்காயம் சுருள வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு அதில் புளியை கெட்டியாக கரைத்து விட்டு, உப்பையும் போடவும். வறுத்துப் பொடித்த பொடியை போட்டு, கடைசியாக வறுத்து வைத்த கத்தரிக்காயை போட்டு நன்றாகக் கலந்து, கறிவேப்பிலையை மேலே தூவவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் அடை

தேவையானவை: மிகவும் பொடியாக நறுக்கிய பிஞ்சு கத்தரிக்காய், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி, புழுங்கலரிசி – தலா கால் கப், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, இஞ்சி – ஒரு துண்டு, தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: பருப்பு, அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் (விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை மாவில் கலந்து கொள்ளலாம்). இந்த மாவில் நறுக்கிய கத்தரிக்காயை கலந்து தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, இரண்டு புறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த அடை.

——————————————————————————–

கத்தரிக்காய் கிரேவி

தேவையானவை: குண்டாக நறுக்கிய கத்தரிக்காய், பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா ஒரு கப், புதினா, கொத்தமல்லி – சிறிது, பச்சைமிளகாய் – 2, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாய் போட்டு லேசாக வதக்கி தனியே வைத்து ஆற விடவும். எண்ணெயில் கத்தரிக்காயை வறுத்து வைத்துக் கொள்ளவும். கடுகு, சீரகம் தாளித்து அதில் ஆற வைத்த தக்காளி – வெங்காய கலவை, கரம் மசாலாத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். கடைசியாக வறுத்தெடுத்த கத்தரிக்காயை சேர்த்து கிளறி இறக்கவும். மேலே கொத்தமல்லியை தூவி அலங்கரிக்கவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் மோர்க் குழம்பு

தேவையானவை: நீளமாக நறுக்கிய கத்தரிக்காய் – கால் கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா – தலா ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, கொத்தமல்லி – சிறிது, தேங்காய் துருவல் – 2 டீஸ் பூன், தயிர் – ஒரு கப், புளி – கொட்டைப்பாக்களவு, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயத்தை சிவக்க வறுத்து, அதில் ஊறவைத்த பருப்புகளை சேர்க்கவும். இதனுடன் தனியா, பச்சைமிளகாய், சீரகம், தேங்காய், கொத்தமல்லி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். புளியை கரைத்து உப்பு சேர்த்து, கத்தரிக்காயை போட்டு வேக விடவும். வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, மஞ்சள்தூள் சேர்த்து கடைந்து இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் புளி பஜ்ஜி

தேவையானவை: பெரிய குண்டு கத்தரிக்காய், காய்ந்த மிளகாய் – தலா 1, புளி – கொட்டைப்பாக்களவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், துவரம்பருப்பு – அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கத்தரிக்காயை எண் ணெய் தடவி நன்றாக எல்லா பக்கமும் சுட்டெடுக்-கவும். ஆறியதும் தோலுரித்து பூச்சியில்லாமல் மசித்துக் கொள்ளவும். இதில் புளியை கரைத்து விடவும். கடாயில் எண்ணெய் காயவைத்து அதில், கடுகு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து மசித்த கத்திரிகாயை போட்டு நன்றாகக் கலக்கவும் அதை ஒரு கிண்ணத்தில் கொட்டி ஒரு சூடான பாத்திரத்தின் மேல் வைத்து மூடிவிடவும்.

——————————————————————————–

கத்தரி -மிளகாய் பச்சடி

தேவையானவை: மிகவும் பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – கால் கப், பச்சைமிளகாய் – அரை கப், புளி, வெல்லம் – தலா கொட்டைப்பாக்களவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: பச்சைமிளகாயை உப்பு சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் கத்தரிக்காயை போட்டு வதக்கவும். கத்தரிக்காய் வதங்கியதும் பச்சை மிளகாய் விழுதை சேர்த்து, புளியை கெட்டியாக கரைத்து விடவும். பிறகு வெல்லத்தை போட்டு மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். எண்ணெய் பிரிந்து விழுதுபோல வரும்போது இறக்கி விடவும்.

——————————————————————————–

கத்தரிக்காய் சட்னி

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் – கால் கப், காய்ந்த மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், புளி – கொட்டைப்பாக்களவு, பச்சைமிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கத்தரிக்காயை நன்றாக வதக்கிக் கொள்ளவும். அதனுடன் புளி, உப்பு, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.

மாங்காய் கத்தரிக்காய் சாம்பார்

தேவையானவை: நறுக்கிய மாங்காய், கத்தரிக்காய் – தலா அரை கப், தக்காளி – 1, புளி – கொட்டைப்பாக்களவு, துவரம்பருப்பு – அரை கப், பச்சைமிளகாய் – 2, சாம்பார் பொடி, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு – தலா கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு , காய்ந்ததும் கடுகு தாளித்து அதில் தாக்காளியை நறுக்கிப் போடவும். புளியை நீர்க்கக் கரைத்து விட்டு பச்சைமிளகாயை கீறிப் போட்டு, கத்தரிக்காய், மாங்காய், உப்பு சேர்க்கவும். காய்கள் நன்றாக வெந்ததும் சாம்பார் பொடியை சேர்த்து, கொதித்ததும் பருப்பை கடைந்து ஊற்றவும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

——————————————————————————–

கத்தரி வற்றல் சாம்பார்

தேவையானவை: கத்தரிக்காய் வற்றல், துவரம்பருப்பு – தலா கால் கப், பாசிப் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், புளி – 2 கொட்டை பாக்களவு, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கடுகு, பெருங்-காயத்தூள், மஞ்சள்தூள், வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை: கத்தரிக்காய் வற்றல் செய்யும் முறை: கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கும் தண்ணீரில் போடவும். முக்கால் பதம் வெந்ததும், நீரை வடித்து வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

கத்தரிக்காய் வற்றலை கொதிக்கும் நீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும். பருப்புகளை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து புளியை கரைத்து அதில் ஊற்றி உப்பு சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் சாம்பார் பொடி, கத்தரிக்காயை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக வெந்த பருப்பு வகைகளை சேர்த்து கொதித்ததும் இ

கத்தரிக்காய் வற்றலை கொதிக்கும் நீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும். பருப்புகளை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து புளியை கரைத்து அதில் ஊற்றி உப்பு சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் சாம்பார் பொடி, கத்தரிக்காயை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக வெந்த பருப்பு வகைகளை சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.